கதலி வாழைப்பழம் காதலிக்க யாரும் இல்லை.

-மாதவி


தாய்மண்ணில் 1970 களில் வாழைப்பழம் என்றால் கதலி வாழைப்பழம் என்றுதான் வாங்குவோம். வாழைப்பழம் என்றாலே கதலிதான்.
விடுகளில் திருமணம் என்றால் வாசலிலில் இரு மருங்கிலும் பெரிய கதலிக்குலை கட்டுவார்கள். பழுத்த பழம் மஞ்சளாக இருக்கும்.இப்பவும் இந்த வாழை கட்டும் கலாச்சாரம் வீடுகளிலும், ஆலயங்களிலும், கடைகள் திறப்பு விழாக்களிலும் தாயகத்தில் காணலாம்.09.07.2024  வட்டுக்கோட்டை யில் ஒரு ஆலயத்தில், இருமருங்கிலும் பெரும் கதலி வாழைக்குலை கட்டப்பட்டு இருந்தது. மருந்து அடிக்காத இயற்கையாக வளர்ந்து காய்த்த வாழைக்குலை.ஆலயத்தில் இடைப்பழம் பழுத்து அழகாக இருந்தது.மறு நாள் அரைக்குலை பழுத்து இருந்தது.நான் அன்னதானத்துற்கு வாழைப்பழம் கொடுக்கலாம் என்றேன்.காதலியா இங்கு ஒருவரும் சாப்பிடமாட்டிடம். என்றார்கள்.வேண்டும் என்றால் எவ்வளவு வேண்டும் என்றாலும் பிடுங்ககுங்கள்என்றனர். நான் ஆசையில் 20 பழம் பிடுங்கிகொண்டு வீடு சென்று நல்ல பழம் கலையில் பிடுங்கியது பிட்டோடு சாப்பிடலாம் என்றேன்.
வீட்டுக்காரர் ஐயோ விரும்பினால் நீங்கள் சாப்பிடுங்கோ . மிச்சத்தை எறியுங்கோ. ஆனால் ஆடு சாப்பிடாமல் பொலித்தீனில் கட்டி தூரத்தில் எறியுங்கோ என்றனர்.(காலை காற்றில் வந்த ஒரு பொலித்தீன் பையை ஆடு சாப்பிட்டு ஏப்பம் விட்டது வேறு கதை)மறுநாள் ஆலயத்திற்கு சென்றேன் ஆலய மதிலோடு நேற்று நான் பிடுங்கிய குலையில் பாதி அனாதரவாக இருந்தது.தம்பி வாழைப்பழம் வேண்டுமோ என்றேன்.எனக்கு உது வேண்டாம் என்று காலில் நெருப்பு பட்டது போல் கதலியைக்கண்டு ஓடுனான்.நான் இன்னும் அப்டேட் ஆகாத அந்தக்காலத்து சிறுவனாகவேஅந்த மூலையில் கிடந்த கதலியை , காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்.ஒரு மணித்தியாலத்திற்கு 2 என்ற வீதம் ஆலயத்தில் நின்ற நேரம் முழுவதும் ஒரே காதல் தான்.காலை மனைவி சுகர் எவ்வளவு என்று பார்க்கச் சொன்னா. 7 காட்டியது. வழமையாக 8.6 காட்டும் யேர்மனியில். இங்கு எகிறவில்லை.எனக்கு 7 என்றால் அது சரியான நோமல் மாதிரி.நாளை காலை ஆலயம் போவேன் என் காதலியை தேடி.

557 total views, 4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *