சந்தித்தேன்

btf
கலாசூரி திவ்யா சுஜேன்.சந்திப்பு. 25.06.2024. கொழும்பு.
வெற்றிமணி பத்திரிகை யில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நின்னைச் சரணடைந்தேன், எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என தொடராக பாரதியின் பாடல்களை, தன்கோணத்தில் பதிவு செய்து, வாசிப்பவர்களை மேலும் பலகோணங்களில் கண்டு மகிழ்விக்கும் வண்ணம் எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரி கலாசூரி திவ்யா சுஜேன்.பரதத்தில் தமிழ் சுரப்பதை கண்டு வெற்றிமணி தன் வசமாக்கியவர்களில் திவ்யாவும் ஒரு வர்.பரதத்தில் இவள் ஒருவகை. எனக்கு ஆதியும் பிடிக்கும் அந்தமும் பிடிக்கும்.எனவே திவ்யாவையும் பிடிக்கும்.எங்கு நின்றாலும் கேட்டதை குறித்த நேரத்தில் எழுதித் தருவது பிடிக்கும்.
இலங்கை செல்லும் ஒவ்வொரு தடவையும் ஒரு குறித்த நேரம் ஒதுக்கி, ஒரு நாள் சில மணிநேரம் வெற்றிமணி பற்றியும், தனது நடன முயற்சிகள் பற்றியும் உரையாடுவாள்.மனதுக்கு உற்சாகம் தரும் வண்ணம் சந்திப்பு அமையும்.வயதில் சிறியவள், அன்பில் பெரியவள்.சந்தித்தேன் 25.06.2024