திருமுறை ஆடல் ஆற்றுகை

பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின்24 மாணவர்கள் கலந்து கொண்ட நடனம் மிகச்சிறப்பாக இடம் பெற்றது.இந்த நடன ஆற்றுகையை சிறப்பாக நெறிப்படுத்தியவர் திருமதி சிறீதேவி கண்ணதாசன்.வாய்ப்பாட்டு  சற்குணராஜா சர்மா ஜதுர்ஷன் (நுண்கலைப்பிரிவு 3ம் வருட மாணவன்) பாடிய தேவாரம் நடனத்திற்கு வேண்டிய பாவத்துடன் பாடியமை , மாணவர்களின் பாவ வெளிப்பாட்டுக்கு வெகுவாக உதவியது.24 மாணவர்கள் ஒரே மேடையில் ஆடுவதற்கு உரிய அகலமான மேடை அல்ல. ஆனால் மாணவர்களும், ஆசிரியரும் அந்த மேடையை முழுமையாக பாவித்தும், ஆடல் காட்சிகளை பிரித்து பிரித்து வகைப்படுத்தி கையாண்டது சிறப்பு.ஒரு மாணவர் என்று இல்லாமல் யாவரும் ஏதோ ஒருவிதத்தில் சொல்ல வந்த கதையை நேர்த்தியாகசொல்லி சென்றார்கள்.பக்கவாத்திய கலைஞர்கள் மிருதங்கம், வயலின் யாவும் சிறப்பு.ஆடைகள் இன்னும் கொஞ்சம் நிறத்தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம்.தாய் நாட்டில் நீண்ட காலத்தின் பின் வடமாகாணத்தில் பார்த்த நடனம் இது.பாவம், தாளம் யாவும் சிறப்பாக இருந்தது. திருமுறை ஆடல் ஆற்றுகை ஒரு சிறப்பான முயற்சி. கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.

292 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *