பிராங்பேட் நகரில் ஆடல் அமுதம்


திலகநர்த்தனாயத்தின் பொன்விழா (50 ஆவது ஆண்டுவிழா) கடந்த 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மன். பிராங்பேட்டில் உள்ள Enkheim Volshaus மண்டபத்தில், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.;றுக் கொண்டனர்.

இரட்டையர்களான வசுந்தரா, யசோதரா அவர்கள், திருமதி பவானி இராஜசிங்கம் அவர்களிடம் நடனம் பயின்று, அவரது ஆசியுடன், தாய் மண்ணில், சாவகச்சேரியில் தமது தாயின் பெயரரல். தந்தையின் ஆசியுடன் 1974 ஆண்டு இந்நடனப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு பின் புலம் பெயர்ந்து திருமதி வசுந்தரா சிவசோதி அவர்களால் ஜேர்மனியில் 1996 இல் இருந்து இற்றைவரை சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்றைய விழாவின் ஆரம்ப நிகழ்வுகளாக, மங்கல விளக்கேற்றி, நடராஜர் பூஜையைத் தொடர்ந்து மாவீரர்களை நினைவு கூர்ந்து அகவணக்க நிகழ்வு இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரு. சிவசோதி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து நடன நிகழ்வுகள் நடைபெற்றன. முதல் நிகழ்வாக தியானஸ்லோகம் எனும் வணக்க நிகழ்வில் 30 க்கும் மேற்பட்ட திலகநர்த்தனாலய மாணவிகள் நடனமாடி குருவின் ஆசியைப் பெற்றமை சிறப்பாக அமைந்தது. அரம்பப்பிரிவு மாணவிகளின் ஸ்வரஜதி எனும் நடனத்தை வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் மிக நேர்த்தியாக ஆடியிருந்தனர். காளிங்க நர்த்தனம் எனும் உருப்படியை ஆடிய மாணவிகள் நிஜமாக, பாம்பினைப்போல் வளைந்து நெளிந்து ஆடி, பாம்பாகவே மாறிப் பார்வையாளர்களைத் திகைப்பில் ஆழ்த்திவிட்டனர். வர்ணம், காளிங்க நர்த்தனம் ஆகிய உருப்படிகளை செல்வி சிவப்பிரியா சிவசோதி அவர்கள் தயாரித்தளித்திருந்தமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வில் திலகநர்த்தனாலய பழைய மாணவிகளின் (தற்போது நடன ஆசிரியர்கள்) நடனம் ஆடியமை விழாவிற்கு மெருகூட்டியிருந்தது. ஆற்றுகைத் தேர்வில் சித்தியடைந்த மாணவிகளின் நடன அரங்கை அதிரவைத்து, பிரதமவிருந்தினர் உட்பட பல இடங்களிலிருந்தும் விழாவிற்கு வருகைதந்த, புகழ்பெற்ற நடன ஆசிரியர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றது. இறுதி நிகழ்வாக அனைவருக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன. திலகநர்த்தனாலய அதிபர் திருமதி வசந்தரா சிவசோதி அவர்களும் மாணவிகளும் பெரும் பாராட்டினைப் பெற்றனர். நன்றி.பாலா.(பிராங்பேட்)

292 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *