மேற்கத்திய மருந்தும் நாமும்
- நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவுஸ்திரேலியா
மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் மிகப் பெரும் பணத்தைச் சம்பாதிக்கும் உலகளாவிய நிறுவனங்கள். மேற்கத்திய வைத்தியம் கற்ற டாக்டர்கள் இந்த மருந்துகளை மட்டுமே அறிந்தவர்கள். இவர்களால் இந்த மருந்துகள் தாராளமாக விலைப்படுகிறது. இவ்வாறு நான் கூறுவதால் மேற்கத்திய வைத்திய முறையான யுடடழியவால வைத்தியத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை, அதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம்.
அதே சமயம், எமது ஆயுர்வேதம், சித்த வைத்தியம் போன்றவற்றை நாம் முற்றாகப் புறக்கணித்துவிட முடியாது. இவர்கள் மருந்துகளை தாமே மூலிகைகள் கொண்டு தயாரிப்பவர்கள். நோய் தீர்க்க வல்லவை. இவை எல்லாம் நாம் அறியாததா? நமது குடும்ப வைத்தியர் கூறுவர், வைத்தியரிடம் போய், ‘நோயை மாற்றி விடுங்கோ’ எனக் கேட்கக் கூடாதாம். ஏனெனில் ஒரு நோயிலிருந்து பிறிதொரு நோய்க்கு அவர் மாற்றி விடுவாராம், அதனால் ‘நோயைக் குணப்படுத்தி விடுங்கோ’ எனக் கேட்க வேண்டுமாம். இது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஆழ்ந்த கருத்து உடையது.
மேற்கத்திய வைத்திய மருந்துகளோ சில பாதக விளைவுகளைக் கொண்டுவரக் கூடியவை. அதுதான் பக்க விளைவு ளனைந நககநஉவ என்பார்கள். இந்த விஷயத்தில் வைத்தியரின் மருந்தை உண்ணும் வைத்தியமும், நோயாளியும் கவனமாக இருக்க வேண்டும். இவை பற்றி எல்லாம் கூற சில சமயங்களில் வைத்தியருக்கு நேரம் இருக்காது. மருந்து வாங்கும்போது கெமிஸ்ட் இடம் கேட்டால் அவர்கள் விவரமாகக் கூறுவார்கள். இது அவர்கள் கடமையும் கூட. அது மட்டுமல்ல, மருந்தின் குணங்கள் யாவற்றையும், எவ்வாறான நிலையில் இருக்கும் நோயாளிகள் எதை அருந்தக் கூடாது என்ற அத்தனையையும் விவரமாக ஒரு கடதாசியில் அடித்துத் தருவார்கள். நீங்கள் வீட்டில் வைத்துப் படித்து விவரமாக அறிந்து கொள்ளலாம்.
வைத்தியர் எழுதிய மருந்து சரியில்லை என கெமிஸ்ட் எண்ணினால் அதை அவர் நோயாளிக்குக் கொடுக்காது மேலும் வைத்தியரிடம் விசாரிக்கும் தகுதி அவருக்கு உண்டு. டாக்டரும் கெமிஸ்ட்டும் றெயில் வண்டியும் தண்டவாளமும் போன்று இயங்க வேண்டியவர்கள். எனது மாணவி ஒருத்தி பல்கலைக் கழகத்தில் medical science படித்து வருகிறாள். ஏதோ பேச்சுவாக்கில் நான் கூறினேன், ‘நோய்க்கான மருந்துகளை மருந்து கொம்பனிகளில் இதற்கென பயிற்றப்பட்ட chenistryபடித்தவர்களே தயாரிக்கிறார்கள். நாம் கண்டறிந்த Formula-It மருந்தாக்கி பல மிருகங்களில் பரீட்சித்த பின்தான் மனிதருக்குக் கொடுத்துப் பார்த்து நோய் குணமானால், அந்த மருந்து தயாரித்து விற்பனைக்கு வரும். இத்தனையும் ஐந்து வருடங்களுக்கு மேல் வரை பரீட்சார்த்த நிலையில் இருந்து வெளிவரும். அதன் பின் மருந்து கம்பெனிகள் டாக்டரிடம் சாம்பிள் மருந்துகளையும் அவற்றின் குணங்களையும் துண்டு பிரசாரமாக அடித்து அனுப்புவார்கள். இதைப் படித்த டாக்டர்கள் நோயாளிக்குக் கொடுப்பார்கள்’ என்றேன். டாக்டருக்கு மருந்து தயாரிப்புப் பற்றி எதுவும் தெரியாதா என்று அவள் திகைத்தாள். இது அவளுக்கு ஏதோ புதிய செய்தியே.
தற்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் மேற்கத்திய வைத்தியமும், ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி வைத்தியம் போன்ற பாரம்பரிய முறைகளையும் இணைத்து வைத்தியம் சில இடங்களில் நடைபெறுகிறது. இதை மத்திய அரசே நடத்தி வருகிறது. நமது நீண்ட நாள் நண்பர் டாக்டர் தெய்வநாயகம் தலைமையில் நடைபெற்று வந்தது. இப்பொழுது அவர் காலமாகி விட்டார். ஆனால் இந்த சேவை நடைபெறுகிறது. இவர் Edinburgh Medical College-இல் சுவாசம் சம்பந்தமான நிபுணத்துவம் பெற்றவர். உலகளாவிய ரீதியில் மதிக்கப்பட்டவர்.
மூலிகைகளின் மகிமையை மேற்கத்திய நிபுணர்கள் என்றோ அறிந்திருந்தார்கள். எனது கணவர் 1969-இல் Boots Drug Company என்ற மருந்து தயாரிக்கும் கம்பெனியில் மருந்து தயாரிப்பு பற்றிய பயிற்சி பெற்றவர். இந்த காலகட்டத்திலே அவர் எழுதிய யுசை ஆயடை தபாலில் எமது வீட்டு முகவரி எழுதியிருந்தார். நாம் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். முகவரியில் திருநெல்வேலி என எழுதப்பட்டிருந்ததை நோட்டமிட்ட இவரது தலைமை ஆய்வாளர், Are you from nellai? என வியப்பாகக் கேட்டாராம். என் கணவரோ சாதாரணமாக ஆமா என்றாராம். அவரோ, We import Thirunelvely Sana. It is a wonderful medical plant என்றாராம். எனது கணவர் ஆராய்ந்தபோது அறிந்தது, இது எமது மூலிகை ஆன சூரத் தாமரையே. பார்த்தீர்களா 50 வருடங்களுக்கு முன்பே உலகளாவிய மருந்தைத் தயாரித்து விற்பனை செய்யும் Boots Drug Company நமது மூலிகைகளைப் பயன்படுத்தி உள்ளது.
எமது மலையாளத் தோழியின் தந்தையர் மேற்கு நாடுகளுக்கு மூலிகைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் புரிபவர். இதை நான் 1987-இல் அறிவேன்.
இன்றோ நிலைமை மாறி மேற்கத்திய மருந்து கம்பெனிகள் இந்தியாவிலேயே நிலம் வாங்கி அதில் மூலிகைகளைப் பயிரிட்டு வருகிறார்கள். அதில் வேலை பார்ப்பவர்கள் இந்தியரே. இவ்வாறு அவர்கள் மேற்கத்திய வைத்தியர்களையும் உருவாக்கி அவர்கள் மூலம் எமது மூலிகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய, நாமோ மேற்கே எதற்கும் மேலானது என்ற நம்பிக்கையை வளர்க்கும் அடிமை மனப்பாங்கை வளர்த்து வருகிறோம்.வாழ்க வளமுடன்!
319 total views, 4 views today