அப்பாமார் அடங்கத் தொடங்க அம்மாமார் ஆட்சியைக் கைப்பற்றுவர்.
உறவுகள் தொடர்கதை
- னுச. வு. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்
“அது உன்டை அப்பாவுக்கு முறைக்கு அக்காவும் அத்தானும் கீழ போய் ஆசீர்வாதம் வாங்கு” எண்டு மேடையில சொல்லி மாமி அனுப்ப சிவாவும் மேடையால கீழ இறங்கிப் போய் குனிய, சிவான்டை மனிசி குனியேலாமக் குனிய, “நல்லா இரு அப்பு, நல்லா இரு மோனை“ எண்டு ஆசீர்வதிச்சிட்டு, பொம்பிளையின்டை கையில நnஎநடழிந ஐ திணிச்சிட்டு, இனி எப்பிடி ஏறி சாப்பிடப் போறது எண்டு ரெண்டு பேரும் யோசிக்கத் தொடங்கிச்சினம். ஒரு காலம் இவை இல்லாம நல்லது கெட்டது ஒண்டும் நடக்காது ஆனா இப்ப அவை ரெண்டுபேரும் வேற ஆற்றையும் உதவி இல்லாம வீட்டை விட்டு வெளீல போய் வரக்கூட ஏலாது.
“வாருமன் சாப்பிடுவம்” எண்டு அவர் சொல்ல, “கொஞ்சம் பொறுங்கோ என்ன இளந்தாரியே ஏறிப்போக” எண்டு சொல்லி அவ உதவிக்கு ஆரும் இருக்கினமா எண்டு பாக்கத்தொடங்கினா. வயசு போகப் போக அப்பாக்கள் அமைதியாவதும் அம்மாக்களின் புறுபுறுப்பது கூடுவதும் இயற்கை. ஒரு வயதுக்கு (முதிர்ச்சிக்கு) அப்பால் ஆண்களின் தேவைகள் குறைவடையத் தொடங்கி விடும். அவன் ஞானத்திற்கு முன்னைய பற்றற்ற நிலைக்கு வந்து விடுவான். மனைவிக்கு இன்னும் கூடப் பணிந்து போவான், எங்கயாவது எருமைக் கடா வந்தால் எமனுடன் ஏறிப் போக யோசிக்க மாட்டான். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. பெண்கள் சந்தர்ப்பம் பாத்து சாதிப்பதில் வல்லவர்கள். அப்பாமார் அடங்கத் தொடங்க அம்மாமார் ஆட்சியை கைப்பற்றி அந்தாள் தனக்கு முந்தி செய்த பழி பாவங்களை மறக்காமல் இப்பிறப்பிலேயே தண்டனை வழங்குவார்கள். அரசன் அன்றும்,தெய்வம் நின்றும்,மனிசி இருந்தும் செய்வார்கள்.
“ அவருக்கு இப்ப மறதி வந்திட்டு, மருந்து போட்டது கூட ஞாபகம் இருக்காது“ எண்டுதான் ஆரும் வந்தால் அவரைப்பபத்தி அறிமுகம் தொடங்கும் . பிறந்த நாளில இருந்து அடக்கப்பட்டதன் தாக்கமும், விரும்பினதை செய்ய முடியாமப் போன ஏக்கமும், வந்த இடத்தில இருக்கிற அடக்குமுறையும் சேந்து பொம்பிளைகளில அப்பப்ப வெளிப்படும். பொம்பிளைகளுக்கு அதிலேம் அம்மாக்களிற்கு அதிகாரம் செய்ய விருப்பம். பெண்கள் நல்ல நிர்வாகிகள் ஆனால் என்ன தங்களுக்கு தேவையான எல்லாத்தையும் மட்டுமே,அதுவும்,அதிகார நிர்வாகமே செய்வார்கள். இது எல்லாம் வீட்டுக்குள்ள தான், வெளீல வந்தால் அந்தாளை கவனமாக் கையை பிடிச்சி கூட்டிக்கொண்டு போவினம். என்ன அடிக்கடி தாங்கள் தான் சரி நீர் பிழை எண்ட நச்சரிப்பும் இருக்கும்.
கடைசிக் காலத்தில பெத்தவைக்கு பெரிய பிரச்சினை சொத்துப் பிரச்சினை. சரி வயசு போட்டுது பிள்ளைகளுக்கு இருக்கிறதை குடுப்பம் எண்டா, சொத்தைப் பிரிச்சுக்குடுக்கிறதுக்கு அம்மாமருக்கு விருப்பம் இருக்காது. கடைசிவரை அதைத் தாங்கள் தான் ஆளோணும் எண்ட ஆசை இருக்கும். அதோட சிலவேளை ஒரு வியாக்கியானம் வைச்சு ஏற்றத்தாழ்வோட பிரிச்சுக் குடுப்பினம், “ஏனப்பா எல்லாத்துக்கும் சமனா இப்பவே குடுமன்” எண்டு அப்பாமார் சொன்னாலும்,“உங்களுக்கு ஒண்டும் விளங்காது சும்மா இருங்கோ” எண்டு அதட்ட அவையும் அடங்கீடுவினம்.
இன்றி அமையாத எங்கடை கூட்டு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா இல்லாமல் போக, இப்ப என்னெண்டால் மகள் கலியாணம் கட்டி மாப்பிளையோட வீட்ட வந்து இருக்க, தனிக்குடித்ததனம் போக விரும்புவது அநேகம் பெற்றோர் ஆகத் தான் இருக்கும். சீதனம் குடுத்திட்டம் எண்டதால, கொஞ்சம் உரிமையில்லாத் தன்மையை உணருவது தான் காரணமோ தெரியேல்லை.
எங்கடை சனத்தில கட்டினாப் பிறகு வாற சண்டையில அடிக்கடி வாறது மகள் மாருக்கு அம்மாமாரோட வாற சண்டை தான். மாமி-மருமகள் இப்படித்தான் எண்டு முதலே முடிவெடுக்கிறதால அது பெரிய சண்டையா இருக்காது. அதோட எல்லாரும் வீட்டோட மாப்பிளை எண்டதால மாமியார்-மருமோள் நேரடிச் சண்டை இருக்காது. மாமியார் மருமோள் சண்டை நேர நடக்காட்டியும் நாசூக்கா சொல்லிற கதைகளில மாட்டுப்படிறது மனிசன்மார் தான். கண்டோன்ன ரெண்டு பேரும் கதைக்கிறதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனாலும்
அடுத்த மாசம் கோல் ஒண்டு வரும்;.“ என்ன மாதிரி அரிசி மா அனுப்பவே”“ வேணாம் மாமி”“ஏன் போன கிழமை ரெண்டு கிலோ தானே அனுப்பினான், எங்களுக்கு ரெண்டு பேருக்கே கிழமைக்கு 4 கிலோ வேணும்”“அதே அப்பிடியே கிடக்கு” ஆஆஆஆஆஆ…..“அவன் சரியா மெலிஞ்சு போனான் வடிவாச் சமைச்சுக்குடும்” எண்ட இழுவையோட கோல் முடியும்.
உடன மகனுக்கு கோல்;.“என்னடா வடிவாச் சாப்பிடிறியோ, உடம்பு கவனம், கண்டபடி வெளீல சாப்பிடாத” எல்லாத்துக்கும் ஓமெண்டப் பழகின மகன் இதுக்கும் ஓம் எண்டு போனை வைக்க்க மனிசீன்டை கோல்; “என்ன உங்கடை அம்மா உளவு பாக்கிறாவே, நான் எவ்வளவு சமைக்கிறன் எண்டு”, நான் ரெண்டையும் உடயளள க்கு ஏத்தி இறக்கவே நேரம் இல்லை இதுக்குள்ள அரிசி மா ஏன் முடியேல்லை, மிளகாய்த்தூள் எவ்வளவு இருக்கு எண்ட கேள்வி வேற, டொக்டர் உம்மை உடம்பைக் குறைக்கச் சொல்லிறார் ஆனா உம்மடை அம்மா என்னெண்டால் நான் சாப்பாடு தராம் நீர் மெலிஞ்சுட்டீராம்”எண்டு சொல்லீட்டு விடை எதிர்பார்க்காமலே கோல் உரவ ஆகீடும். இதை எல்லாம் கேட்டும் கேக்காத மாதிரி இருக்கிறது தான் அப்பாக்களின் சா(சோ)தனை.
வீட்டை பொம்பிளை பிள்ளைகள் இருக்கும் வரை அப்பாக்கள் அதிகாரம் செய்வதே மகள் எண்ட ஐ.நா சபையை நம்பித்தான். சண்டை வரேக்க அப்பாவின்டை பக்கம் கொஞ்சம் கூட ளரிpழசவ இருக்கும். மகள்மாரைக் கட்டிக்குடுத்த உடனயே அம்மா மார் மீண்டும் இழந்த ஆட்சியை பிடிச்சிடிவினம். இதுவரை எல்லாம் தெரிந்திருந்த அப்பா இப்ப அம்மான்டை கணக்குப்படி ஒண்டும் தெரியாதவர்.
கட்ட முதல் பொம்பிளைப்பிள்ளைகள் அப்பாமாரோடேம் ஆம்பிளைப்பிள்ளைகள் அம்மாமாரோடேம் ஒட்டி இருந்தாலும். கட்டிப் போனாப்பிறகு அப்பாமாருக்கு மகனோட இருக்கிறது தான் உழஅகழசவயடிடந. மகன் மார் கேக்காமலே பாத்துச் செய்வாங்கள், அதோட மருமோள்மாருக்கு மாமாமாரோட ஒத்துப் போகும். மனிசனிட்டைப் போய் ”உங்கடை அப்பா பாவம், அம்மா என்ன சொன்னாலும் பேசாமக் கேப்பார், அம்மா தான் அவரைப் போட்டு பாடுபடுத்திறா” எண்டு சொல்லித் தன்ரை புருசனுக்கு பாடம் எடுப்பினம்.
மகனோடயோ இல்லாட்டி மகளோடயோ இருக்கப் போகேக்கேம் சம்மந்திமார் இருக்கினமா எண்டு பாத்துத்தான் போறது. சம்மந்திமாரை சபைசந்தீல சந்திக்கேக்க சந்தோசமாக் கதைச்சாலும் ஆனால் ஓரே வீட்டை இருந்தால் சண்டை தான். வளக்கும் வரை மூத்த ஆம்பிளைப் பிள்ளையும் கட்டிக் குடுத்தாப்பிறகு “ அவன் பாவம்” எண்டு கடைசி ஆம்பிளைப்பிள்ளையிலேம் தான் அம்மாமாருக்கு விருப்பம். ஆனாலும் மனிசன் மார் இருக்கும் வரைதான் அம்மாமார் மகனுடன் இருப்பினம் அவருக்கு ஏதும்மெண்டால் அதுக்குப்பிறகு கூப்பிடாமலே மகளிட்டைப் போயிடு வினம்.
ஊர் தாண்டி, கடல் தாண்டிக் கட்டிக்குடுத்திட்டு “ அய்யோ நான் பிள்ளையோட போய் இருக்கப்போறன்” எண்டு அம்மா தொடங்கி அந்தாள் ஏதும் சொல்லமுதல் ஓடிப்போய் அங்க இருந்து பாத்திட்டு கடைசீல சுடலை ஞானம் வர “கோம்பையன்மணலில தான் வேகவேணும்” எண்டு ஊரோட வந்திடிவினம். பெத்ததெல்லாம் கட்டிப் போய் தாங்கள் பெத்ததைப் பாக்கத் தொடங்க, வீடு வெளிச்சிப் போய் தனிச்சு இருக்கிறாக்களுக்கு வரும் ஒரு பயம் ஏதும் ஆருக்கும் நடந்தா எண்டு. இப்பவும் புறுபுறுக்கிற அம்மா “ எனக்கு ஏதும் நடந்தால் இந்தாள் பாவம் தனிய இருக்காது, என்னை மாதிரி ஒருத்தரும் பாக்க மாட்டினம்” எண்டு கவலை வர திருப்பி ஒருக்காப் பிள்ளைகளிட்டைத் திருப்பிப் போவமோ எண்டு யோசிக்கத் தொடங்குவா ஆனாலும் போமாட்டினம். ஏனெண்டால் இவை இப்பதான் தங்களுக்கு எண்டு வாழுவினம், பிள்ளைகளோட போய் இருந்தா அது இருக்காது.
அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிக்கிறது பெரிசா பிள்ளைகளுக்கு தெரியாது, தெரிஞ்சாலும் கணக்கெடுக்காதுகள். தனிய இருக்கேக்க சண்டைதான் பொழுதுபோக்கா மாறீடும்.ஆனால் அம்மாமாருக்கு மாத்திரம் அந்தக்காலத்தில இருந்து நடந்தது எல்லாம் பொருள், இடம், காலத்தோட ஞாபகம் இருக்கும் . தேவை வரேக்க னநநி அநஅழசலஐ கிண்டி எடுப்பினம். தேவேல்லாத ஒண்டுக்குச் சண்டை பிடிச்சு காகம் இருக்கத்தான் பனம்பழம் விழுந்ததெண்டு தொடங்கி, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டுக் கதைசொல்ல அந்தாள் அதுக்கு ஒண்டும் சொல்லாமல் இருக்கும். அதுக்கும் “ உங்கடை ஆக்கள் எண்டால் ஒண்டும் சொல்லாதேங்கோ” எண்டு பேசீட்டுக் கொஞ்சம் மூக்கைச் சிந்த , ஆனாலும் மாட்டிறது வீட்டுக்கு எப்போதாவது வாற ஒரு சொந்தம். வந்தவரை இருத்தி வைச்சு “கொஞ்சம் பொறு கோப்பி தாறன்” எண்டு சொல்லிப்போட்டு ,” எனக்கு பொன்னம்பலத்தார்டை மகனை பேசினது நான் தெரியாம இந்தாளைக்கட்டினது” எண்டு தொடங்குவா , இதுவரை சும்மா இருந்த அந்தாள் “நீதான் எண்டு தெரிஞ்சிருந்தா நானும் கட்டி இருக்க மாட்டன், லீவில வந்து நிக்கேக்க குஞ்சிஆச்சி சொன்னதுக்கு ஆரெண்டு பாக்காமல் நான் கட்டீட்டன்” எண்டு விட மாட்டார். வந்த ஆள் தான் பாவம் தலைப்பில்லா விவாதத்தை தனி ஆளா நிண்டு கேக்கவேணும். வந்த ஆள் ஏன் வந்தனான் எண்டதை மறந்து, கடைசீல தீர்ப்பில்லாச் சண்டையின்டை கதையைக்கேட்டுக் கொண்டிருந்திட்டு தாங்கேலாமல் ஒரு போன் கோல் வந்தமாதிரி எழும்பித் தப்பி ஓட வெளிக்கிட “இந்தா” எண்டு ஒரு வாழைப்பழச் சீப்பைக் குடுத்திட்டு, “ சரி போட்டு வா, அடுத்த முறை வரேக்க நாங்கள் இருப்பமோ தெரியாது” எண்டு ஒரு ளநவெiஅநவெ வசனமும் சொல்லி விடுவினம்.
அந்தாள் இருக்கேக்க ராங்கியா தனக்கெண்டு ஒண்டும் பிள்ளைகளின்டை இதுவரை கேக்காத அம்மா கடைசிக்காலங்களில “ எனக்கு ஏதும் நடந்தா அப்பாவைக் கவனமாப் பாக்கோணும்”எண்டதை மட்டும் சொல்லுவா. தான் இருக்கும் வரை தனக்கு மட்டும் தான் உரிமை எண்ட அகங்காரம், இல்லாத நேரத்தில தன்னை மாதிரி அவரைப் பாப்பினமோ, அவர் தனியச் சமாளிக்கமாட்டார் பாவம் எண்டு மனிசி கவலைப்படுறதெல்லாம் எல்லாருக்கும் விளங்கத் தொடங்கும். மனிசன்மாருக்கு தங்கடை மனிசிமார் வருத்தம் எண்டு சொன்னால் பயம் அதால வருத்தம் சொல்லாமலே, அடிக்கடி டொக்டிரட்டை கொண்டேக்காட்டுவினம். ரெண்டு பேருக்கும் பிறப்பால் வராமல் பிணைந்ததால் வாழ்க்கையில் வந்த இந்த உறவு தொடரும் கதையாக இருக்கவேண்டும் எண்டதுதான் எல்லாரின்டை ஆசையும்.
69 total views, 6 views today