ஒரு தேவதையின் முத்தம்.

  • மாதவி. யேர்மனி

நேற்று முன்தினம்தான் 70 வயதுக் கொண்டாட்டம் பல்கேரியாவில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்து முடிந்தது.
வந்தவர்கள் எல்லோரும் என்னை இளைஞானிக்கிவிட்டு சென்றுவிட்டார்கள்.

நேற்று இரவு தூக்கமே வரவில்லை. என்னதான் வயதாக இருந்தாலும் வலியவந்து அவள் கேட்டது ஏதோ மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. கேட்டதை விட அவள் என் முதுமையை இரசித்தாள் என்பதில் மட்டுமே என்மனம் லயித்திருந்தது என்பதே உண்மை.

அல்லது முன் சொன்னதுபோல் என் பிறந்தநாளுக்கு வந்த நண்பர்கள் என் இளமைக்காலத்தை மீட்டி மீட்டி என்னை இளையவன் ஆக்கிச்சென்றார்கள் என்பதே உண்மையாகிவிட்டதா.

அவள் பல்கேரிய நாட்டுப்பெண் ஆங்கிலம் ஐ டழஎந லழர சொல்லுமளவை விட இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அவளுக்கு தெரியும்.

இல்லையென்றால் அவள் தன்னம் தனியாக நான் சென்றபோது you want Angel’s மளைள. என்று கேட்டு இருக்க மாட்டாள்.

ஒருகணம் கணகணத்த வார்த்தை. முத்தத்தை விட முத்தத்திற்கு உரியவானா நான் என்று சுய விமர்சனம் நடந்தநேரம், அது முத்தத்தை விட இனிப்பாக இருந்தது.

அன்று இரவு முழுவதும் Angel தூக்கத்தை கெடுத்தவண்ணமே இருந்தாள்.

எப்பொழுது விடியும் என்பதைவிட எப்போ விடிந்து மாலை வரும்,என்று இருந்தது. மாலைதான் ஏஞ்சல் வருவாள்.
காதல் என்பது முதுமையில் வரும்.ஆனால் அக்காதல் காமத்திற்கு அப்பால் வருவதாகவே இருக்கும்.

ஆனால் ஏஞ்சல் முத்தம் வேண்டுமா என்று நேருக்கு நேர் அல்லவா கேட்டுவிட்டாள்.

நான் அந்த முத்தம் கொடுக்க இன்னும் தகுதியானவராக இருக்கிறேன் என்ற ஒரு அழகிய திமிருடனேயே அன்று பொழுது விடிந்து, மாலையும் வந்தது.

எனக்கு முன்னே மூன்று இந்திய இளைஞர்கள் நின்றார்கள்.

நான் நான்காவதாக ஏஞ்சலை பார்த்தபடி அவர்கள் பின் தொடர்ந்தேன்.

அவள் என் முன் நிற்பவர்கள் முகத்தை நேருக்கு நேர் பார்க்கிறாள்.
மறுகணம் அவள் கேட்டதும்,

முத்தக்கனவை மொத்தமாகக் கலைந்தது.

அவள் அவர்களைப் பார்த்து மூன்று ஏஞ்சல் கிஸ் தரவா என்று கேட்டாள்.
என்னையும் அவள் நேற்று You want angel மளைள என்று கேட்டதன் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது.

அது கொக்ரையில் ( Cocktail) பானத்தின் பெயர் அது.
நானும் இப்போ அதனை வாங்கிக் குடித்தேன்.
என்னதான் இருந்தாலும் அது ஒரு ஏஞ்சல் கிஸ்தான். Angel’s Kiss

199 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *