அழகுக்கும் கவர்ச்சிக்கும் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?
Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி)
நண்பர்களே, இதை ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள் பார்ப்போம். அழகான இலையுதிர் காலத்தில், மாலை இளவெயில் நேரத்தில், நீங்கள் வீதியில் நடந்து போகும் பொழுது திடீரென்று பார்த்தால் ஒரு மிகவும் அழகான பெண்ணைஃஆணை பார்க்கின்றீர்கள். பார்த்த உடனே வியந்து, உங்களை மறந்துவிடுகின்றீர்கள். என்ன நண்பர்களே…? இது என்னடா அரபிக்குத்து பாடலை எடுத்து விடுகின்றேன் என்று யோசிக்கின்றீர்களா?
இல்லை இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் எல்லோருமே அனுபவித்து இருப்பீர்கள், சரி தானே? நீங்கள் ஆணாக இருந்தால் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தோ அல்லது ஒரு பெண்ணாக இருந்தால் ஒரு ஆணைப் பார்த்தோ வியந்திருப்பீர்கள்.
ஆனால் இதில் ஒரு விஷயத்தை எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அது என்னவென்றால், ஏன் நமக்கு ஒரு சிலரைப் பார்த்தால் மட்டும் தான் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிகின்றது, ஆனால் வேறு சிலரைப் பார்த்தால் அப்படித் தெரிவதில்லை. இதிலும் ஆச்சரியம் என்னவென்றால், எனக்கு அழகு அல்லது கவர்ச்சியென்று தெரிபவர் உங்களுக்கு அழகாக்கத் தெரியவேண்டும் என்று அவசியமே கிடையாது. எனவே இதற்குக் காரணம் என்ன? இந்தச் சுவாரசியமான கேள்விக்குப் பதில் தெரியவேண்டும் என்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
ஏன் ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் எங்களுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிகின்றது? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான இசை மற்றும் பாடல்களைப் பிடிப்பது போல் தான் இதுவும். உதாரணத்திற்கு எனக்கு ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம், அதாவது „கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா“ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் பிடிக்கும் என்கிற காரணத்தால் உங்களுக்கும் அது பிடிக்க வேண்டுமென்று அர்த்தம் இல்லை தானே? அதே போல் தான் எனக்கு அழகு என்று தோன்றும் பெண் உங்களுக்கும் அழகாக இருக்கத் தேவையில்லை. ஆனால் இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், கவர்ச்சி என்பது உடல் அழகை மட்டும் குறிப்பது இல்லை, அதற்கும் மேலிருக்கிறது. அதைப் பற்றி இன்னும் ஒரு கொஞ்ச நேரத்தில் பார்ப்போம்.
நாம் நமது மரபணுக்களை, அதாவது புநநௌ ஐ அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது என்பது நாம் நமது வாழ்வில் செய்யும் ஒரு மிக முக்கியமான செயல்களில் ஒன்றாகும். இதைச் செய்வதற்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுக்கப் பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு உயிரினமும் அதன் பண்புகளுக்கு ஏற்றவாறு தனது துணையைத் தேர்வு செய்கின்றது என்று Charles Darwin கூறியுள்ளார். உதாரணமாக ஒரு மயிலை எடுத்துக்கொள்வோம். ஆண் மயிலின் தோகை, வண்ணங்கள், அழகு மற்றும் அவை மிளிரும் தன்மையினைப் பொறுத்து பெண் மயில் கவரப்பட்டு தனக்கான ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்கும். அது ஏனென்றால் இவையெல்லாம் சரியாக இருந்தால் தான் அந்த ஆண் மயில் நன்றாக வளம்பெற்ற மரபணுக்களையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டிருக்கும். எனவே இவையனைத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கலாம். இதுவே மனிதர்களை எடுத்துக்கொண்டால், நாம் ஏதோ அழகு மற்றும் கவர்ச்சி தான் இனச்சேர்க்கையில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவை நமது உடலின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத் தன்மையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் ஒரு வகையான மொழி மட்டும் தான். வேறொன்றுமே இல்லை.
சரி சரி இது எல்லாமே ஒரு பக்கம் இருக்கட்டும், எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதிலைச் சொல்லிவிடுங்கள். உங்களுக்கு ஒருவரைப் பார்க்கும் போது, அவர் ஏன் அழகாகத் தெரிகிறார்? அட, அவளின் கண்களைப் பிடிக்கின்றதா, அல்லது அவனின் முகம் பிடிக்கின்றதா? நண்பர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? இதைப் பார்த்துத் தான் நாம் மயங்கிவிடுகின்றோம் என்று நினைக்காதீர்கள். உண்மையில் நமக்கு ஒரு மனிதனைப் பார்த்து அழகு என்று எப்போது சொல்கிறோம் தெரியுமா? அந்த மனிதனின் முகத்தை மற்றும் உடலை செங்குத்து வாக்கில் சரிபாதியாகப் பிரித்துப் பார்க்கும் போது, இருபுறமும் ஒரே மாதிரியாக இருந்தால் அந்த மனிதன் கவர்ச்சியானவராகத் தெரிவார். இதை ஆங்கிலத்தில் டீடையவநசயட ளலஅஅநவசல என்று அழைப்பார்கள்.
இதைத் தவிர்த்து வயிற்றிற்கும், இடுப்பிற்குமான விகிதம் அதாவது சயவழை குறைவாக இருந்தாலும் அந்த மனிதன் நமக்குக் கவர்ச்சியாகத் தெரிவார். நமது உடலில் கொழுப்பு எந்தப் பகுதிகளில் சேர்க்கப்படுகின்றது என்பதை ஆண்களுக்கு ஆண்மையியக்குநீர் ஆகிய வுநளவழளவநசழநெ மற்றும் பெண்களுக்குப் பெண் பாலின இயக்குநீர் ஆகிய நுளவசழபநநெ நியமிக்கின்றது. உதாரணத்திற்குச் சரியான அளவில் நளவசழபநநெ சுரக்கும் பெண்களின் வயிற்றடியின் அளவு, இடுப்பின் அளவின் 70 வீதமாக இருக்கும். அதே போல் தான் ஆண்களுக்கும் பொருந்தும். இதில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த விகிதத்தில் இருக்கும் வயிறு மற்றும் இடுப்பின் அளவு உள்ளவர்களுக்கு இதயத்தோடு சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமாம்.
சரி, ஒருவரைப் பார்க்கும் போது இதெல்லாமே சரியாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். அப்படி இருந்தும் அவரைப் பார்க்கும் போது உங்களுக்குக் கவர்ச்சியாகவோ அழகாகவோ தெரியவில்லை என்றால் என்ன காரணமாக இருக்கலாம்? இதற்கு phநசழஅழநௌ எனும் வேதியியல் பொருளே காரணமாகும். இந்த phநசழஅழநௌ நம்முள் சுரக்கும் மணமுடைய வேதிப்பொருள் ஆகும். தெளிவாகக் கூறவேண்டுமென்றால் நமது வாசம் என்றும் கூட கூறலாம். ஒவ்வொருவரின் மரபணுக்களைப் பொருத்து, இந்த phநசழஅழநௌ இன் வாசம் அமையும். இதில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கிட்டத் தட்ட நமது மரபணுக்கள் போலவே இருக்கும் ஆண் அல்லது பெண்ணைத் தான் நாம் கவர்ச்சி என்று எண்ணுகிறோம். ஆனால் இதிலும் ஒரே ஒரு வேறுபாட்டைக் கவனிக்கவேண்டும். அது என்னவென்றால் அந்த நபரின் நோய் எதிர்ப்புச் சக்தியும் நமது நோய் எதிர்ப்புச் சக்தியும் வேறுபட்டவையாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் அடுத்த தலைமுறை பல விதமான நோய்களை எதிர்த்து பல்லாண்டு காலம் வாழலாம்.
ஒருவர் அழகாக அல்லது கவர்ச்சியாக இருப்பதற்குப் பின்னால் இவ்வளவு அறிவியல் இருக்கிறது என்று நினைக்க ஆச்சரியமாக இருக்கிறதா? அட, நமக்குப் பொருத்தமான ஒருவரைக் கண்டுபிடிப்பதே பெரும் அதிசயம், அதற்குள் மனிதர்களாகிய நாம், இனம், மதம், ஜாதி, மொழி என்று பிரிவுகளை உண்டாக்குவது மட்டுமில்லாமல், திருமணம் செய்வதற்கு முன்பு தினப் பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், தாலிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், வசியப் பொருத்தம் போன்ற பல்வேறு பொருத்தங்களைப் பார்த்த, தோசங்கள், ஏழில் அல்லது எட்டில் உள்ள செவ்வாய், ராகு கேதுவின் நிலைப்பாடு போன்ற அறிவியலுக்கு மீறிய விஷயங்களுடன் எங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக் கஷ்டப்படுகின்றோம். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
164 total views, 9 views today