இது ஓர் உன்னதமான காவியம்.
- கலாநிதி சூர்யநாராயணன்
இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமான அறிமுகப் பகுதியிலிருந்து தொடங்குகிறது. இதில் பிரேம் ராவத் பிறப்பிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை விவரிக்கும்போது ஒரு புதிய கண்ணோட்டத்தோடு நாமும் அவரோடு பயணிக்க நமக்கு ஓர் அழைப்பை விடுக்கிறார். நாம் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு செல்லும்போது பல வித்தியாசமான கருத்துக்களையும், எண்ணங்களையும் உணர்கிறோம். இது ஓர் அலாதியான அனுபவமாக இருக்கிறது.
இந்த பயணத்தில் பல மிகவும் அருமையான கவிதைகளையும் பெரியோர்கள் எழுதிய பொன்மொழிகளையும் சுவைத்துக்கொண்டு செல்கிறோம். பிறகு பல கதைகளையும் நாம் கேட்கிறோம். மிகவும் புல்லரிப்பான அனுபவமாக இருக்கிறது. நாம் ஒவ்வொரு அத்தியாயமாக பார்த்துக் கொண்டு வரும்போது அவர் வட இந்தியாவில் செண்பக மரத்தடியிலே தன்னுடைய மிகவும் அற்புதமான ஓர் அனுபவத்தைப் பற்றி விவரிக்கையில் நாம் அதிலே இணைந்து விட முடியுமா என்று ஆவலோடு இருக்கிறோம். பிறகு அவர் சென்ற பல நாடுகளுக்கும் கூட்டிக்கொண்டு செல்கிறார்.
-பல நிகழ்ச்சிகளுக்கு நடுவே தென் அமெரிக்காவில் அவர் இருக்கும்போது மனைவி மிகவும் தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருக்கையில் அந்த மிகவும் இக்கட்டான நிலையிலே நாம் எல்லோரும் தத்தளித்திருப்போம்.அவர் எப்படி நிலவரத்தைச் சமாளித்து, குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு அதே நேரத்திலே நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார் என்பதையும் நாம் பார்க்கையில் உள்ளம் நெகிழ்கிறோம்; நமக்கோர் படிப்பினை.இந்த புத்தகத்தி லிருந்து இவ்வாறு பல விஷயங்களை நாம் கற்றுக் கொண்டே போகிறோம்.
- அவர் நம் உலகத்தின் நிலையை விளக்கும்போது அணையாமல் இயங்கும் சாதனங்கள், காணாமல் போன மகிழ்ச்சி, திருடர்களின் கும்பல் என்றெல்லாம் சொல்லும்போது அதிர்ச்சி அடைகிறோம்.
-பின்னர் அவர் மெல்லென நம் வாழ்க்கையின் மையத்தில் இருக்கும் லயத்துக்கும் எடுத்து போகும்போது ஒரு புத்துணர்வு பிறக்கிறது.
- ‘தூங்காமல் தூங்குவது எப்படி?’, ‘காலமற்ற இன்றைய பொழுது’, ‘எல்லையற்றதை ஒரு மணிப்பொழுதினுள் காண்’ என்றெல்லாம் பாதையிலே எழுதப்பட்டிருக்கும் பலகைகளைகண்டு திகைக்கிறோம்.
இறுதியில் இந்தப் பயணம் முடிவுறும்போது, நாம் நம் இதயத்தை அரவணைத்து, அதனோடு இணைந்து முழுகும் புத்துணர்வோடு பிரியாவிடை பெறுகிறோம்.
இது ஓர் உன்னதமான காவியம்.
176 total views, 3 views today