‘போலச் செய்தல் | கலையின் உயிர் சிதைக்கும் யுஐ |-ஆற்றுகை இல்லாதது கலையாகாது!
- ரூபன் சிவராஜா (நோர்வே)
அண்மையில் இரவிவர்மாவின் அடையாளமாக விளங்குகின்ற அவரின் சில ஓவியங்களை செயற்கை நுண்ணறிவின் (யுஐ) மூலம் அசையும் படங்களாக மாற்றிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் உலவித்திரிந்தது.
‘சுயஎiஎயசஅயள Pயiவெiபெ உழஅநள வழ டகைந றiவா யுஐ-வுநஉhழெடழபல’ என்ற கூற்றுடன் அக்காணொளி உலவித் திரிந்தது. செயற்கை நுண்ணறிவை எதற்குப் பயன்படுத்துவதென்ற விவஸ்தையில்லாத போக்கினையே இதுவும் இதுபோன்ற காரியங்களும் வெளிப்படுத்துகின்றன.
ஓவியத்தின் உயிர் ‘அசையாமை’
ஓவியத்தின் உயிர் ‘அசையாமை’யிலும் படிமத்தோற்றத்திலும் தங்கியுள்ளது. ஓவியத்தின் அசையாத்தன்மை மனதை அசைக்கிறது, மனதிற்குள் அதன் காட்சிகளை அசைக்கிறது. மனங்களை அசைப்பது மட்டுமல்லாமல் மனச் சிறகுகளையே விரிக்கவைக்கக்கூடியது. அதுதான் ஓவியக் கலையின் அடிநாதம்.
உண்மையில் இது யாரோ ஆர்வக் கோளாறில் செய்த செயல். இது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லைத்தான்.
கலை என்றால் அங்கு ஆற்றுகை இருக்க வேண்டும்.
ஒரு முறை மேடை நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா – யுவன் சங்கர் ராஜாவுக்கு இடையில் நடந்த உரையாடற் காணொளி ஒன்று காணக் கிடைத்தது. அதில் தனக்கு ஏதாவது ஆலோசனை சொல்லவேண்டுமென்றால் என்ன சொல்வீர்கள் என இளையராஜாவை யுவன் கேட்கின்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்கச் சொன்னதாகவும் சொல்கிறார். அதற்கு இளையராஜா பார்வையாளர்களை நோக்கிச் சொல்கிறார்:
‘நீங்கள் எலக்ரோனிக் மியூசிக் தான் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அதனால் மூளைக்கலங்கள் (டீசயin உநடடள) சரியான முறையில் செயற்படாது. இலத்திரனியல் இசையால் மூளையின் கலங்கள் மந்தமாக்கப்படும். கலை என்றால் அங்கு ஆற்றுகை இருக்க வேண்டும். ஆற்றுகை இல்லாதது கலையாகாது. புரோக்கிராமிங்கைத் தவிருங்கள்’
இது யுவனுக்கு மட்டுமல்ல. இன்றைய இசையமைப்பாளர்களில் பெரும்பாலானவர்களை நோக்கிச் சொன்ன விடயம்.
டுiஎந iளெவசரஅநவெள என்று சொல்லக்கூடிய அசல் இசைக் கருவிகள் கலைஞனின் கைகள் தொட்டும் – தாள வாத்தியங்கள், ஏனைய ஊது இசைக் கருவிகள் மனிதனால் மீட்டப்படும்ஃஇசைக்கப்படும் போது உருவாகும் இசை மனதைத் தொட்டு, ஊடுருவி, உணர்வு நரம்புகளை இயக்கக்கூடியது.
போலச் செய்தல்
உலகளாவிய தமிழ்ச் சூழலிற் கலையெனும் பேரிற் போலச் செய்தலே அதிகரித்து நிற்கின்றது. தொலைக்காட்சிகள், கலை நிகழ்வுகள் எதுவும் இதற்கு விதிவிலக்கில்லை. ‘கலைசார்’ முன்னெடுப்புகளைப் பொறுத்தவரை தமிழகச் சினிமாவும் அதன் பாடல்களும் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. நிகழ்வுகளில் தனித்துவமானதும் புத்தாக்கமானதுமான சில அரங்க ஆற்றுகைகள், நடனங்கள், நடன நாடகங்கள், நாடகங்கள் ஆங்காங்கே படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சினிமாவின் பாதிப்பே கலை நிகழ்த்துகைகளின் பெரும்போக்காகவும் பெரும்பான்மையினரின் இரசனைக்குரியனவாகவும் உள்ளன. திரைப்பட முயற்சிகளும் சிறிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றிலும் பெரும்பான்மையானவை தமிழகச் சினிமாப் பாணியின் தத்தெடுப்புகளே.
மக்களின் ரசனையும் கீழிறங்கிக் கொண்டிருக்கின்றது. ‘போலச் செய்தல்’ என்பதற்கே முன்னுரிமை. சினிமாப் பாடல்களை மேடைகளிற் பாடுவது, சினிமாப் பாடற் போட்டிகளை நடாத்துவது, சினிமாப் பாடல்களின் கரோக்கே இசையில் பாடுவது, சினிமாப் பாடல்களுக்கு நடனமாடுவது, சினிமாக்காரர்களைப் போலப் பேசுவது (ஆiஅiஉசல), சினிமாக் காட்சிகளை நடிப்பது எனவாகப் போலச் செய்தலின் பட்டியல் நீளமானது. போலச்செய்தல் என்பது திறன் சார்ந்த அம்சம். அது படைப்பாக்கம் சார்ந்த விடயம் அல்ல.
கலைக்கும் இரசனைக்கும் வேட்டு வைக்கும் யுஐ
செயற்கை நுண்ணறிவு பல துறைகளிலும் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியாக உருவெடுத்து நிற்கின்றது. பல தளங்களில் அதன் பயன்பாடு நேர்மறை விளைவைக் கொடுக்கிறது. பல துறைகளிலும் அதன் பயன்பாடு எதிர்மறையானது. திரைப்படங்களிலும் இந்தத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அண்மையில் வெளிவந்து புழுயுவு படத்தில் வயதுகுறைத்தல் (னந-யபiபெ) என்ற பேரில் ஏதோவெல்லாம் கோமாளித்தனம் செய்திருந்தார்கள். எந்தவொரு தொழில்நுட்பமும் உரிய அளவில், உகந்த முறையில், கலைப் படைப்போடு இணையவேண்டும். அப்போதுதான் அந்தப் படைப்பின் தரத்திலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்திலும் நேர்மறையான பங்காக அது அமையும். இல்லையேல் படைப்பாக்கத்தின் உயிரைச் சிதைத்துவிடும். அதற்கு தொழில்நுட்பத்தைக் கலைப்படைப்போடு இணைப்பதற்கு நுணுக்கமான கலைத்துவ, அழகியற் பார்வை அவசியமானது.
காலப் போக்கில் இந்த யுஐ கலைப் படைப்புகளுக்கும் கலை இரசனைக்கும் பெரிய வேட்டுவைக்கப் போகின்றது என்றும் தோன்றியது. மறைந்த புகழ்பெற்ற பாடகர்களின் குரல்களை யுஐ மூலம் மீளுருவாக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஒரிரு முறை செய்வது அவர்களை நினைவுகூர்வதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதுவே ஒரு பொதுவானதும் பரவலானதூன போக்காக ஆகிவிடுகின்ற ஆபத்துகள் உள்ளன.
கலை என்பது ஒரு மனதை இன்னொரு மனதுக்குக் கடத்துகின்ற ஊடகம். கலைப் படைப்பு அடிப்படையில் மனம் சார்ந்தது. ஆழ் மன உணர்விலிருந்து பிறப்பது. எந்தக் கலையும் ஆற்றுகை செய்யப்படவேண்டியது
18 total views, 12 views today