சஜித் பகீரதன் இயக்கிய
”Mind Never Dies’ ‘அமரர் ரமேஷ் வேதநாயகம்.’ அவர்களின்
ஆவணப்படம் மூன்று தளங்களில் வெற்றித்தடம் பதித்தது!
இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் வசித்து வந்தவர் ரமேஷ் வேதநாயகம் அவர்கள். இவர் ஆகஸ்ட் 23, 1962 இல் இந்தியாவில் பிறந்தார். அவர் ஒரு சிறந்த நடிகர், மணிகண்டன் இயக்கத்தில் ‘சிக்குப் புக்கு’ 2010 இல் வெளிவந்த படத்திலும், கார்த்திக் சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்தார். (2021), (வுhந குயஅடைல ஆயn )தி ஃபேமிலி மேன் (2019) மற்றும் அண்டாஸ் தேரா மேரா (யுனெயண வுநசய ஆநசய ) (2023) ஆகிய படங்களில் நடித்தார்.
ரமேஷ் வேதநாயகம் தன்னைப்பற்றி இணையத்தளத்தில் பதிவுசெய்திருந்த தகவல் இவை:
‘சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு திரைப்படம் அல்லது அது போன்ற தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. உலகளாவிய பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற தாகம் எனக்கு எப்போதும் உண்டு. எனது நடிப்புத் திறமையால் மக்களை அழவும் வைத்தது, ஆனால் சிரிக்கவும் வைத்தது, பயத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. நான் ஒரு திரைப்படம் அல்லது டிவி சீரியலை பார்க்கும் போதெல்லாம், நான் அதை ரசிப்பேன், ஆனால் அதே நேரத்தில் அந்த கதாபாத்திரத்தின் பாத்திரத்தில் நான் ஏன் நடிக்கக்கூடாது? என்றும் எண்ணுவேன். நான் தமிழ், ஆங்கிலம் இரண்டும் பேசுவேன்.’
இவ்வாறு அப்பதிவு இருந்தது. இதில் இருந்து அவர் நடிப்பு மீது வைத்திருந்த பேரார்வம் தெரிகிறது. தீபம் தொலைக்காட்சியில் பல நாடகங்களில் நடித்து பலரது மனங்களையும் கவர்ந்தவர் தான் ரமேஷ் வேதநாயகம். அவர் அக்டோபர் 22, 2023 அன்று லண்டனில் இறந்தார்.
அவர் அன்று நோயினால் பீடிக்கப்பட்டு, இறுதிக்காலத்தை நெருங்கிய நேரம், அவரை சஜித் பகீரதன் முதல் முறையாகச் சத்தித்தார். அவரது கலையார்வத்தால் ஈர்க்கப்பட்ட சஜித் அந்த மாபெரும் கலைஞனின் சிறப்பை வாழும்போதே ஆவணப்படுத்த முயன்றார். ஆNனு ஆழுவுழுசு NநுருசுழுN என்னும் ஒரு வகை நரம்பு நோயினால் தாக்கப்பட்டு தலைக்கு கீழ்வரை இயக்கம் இல்லாது இருந்த வேளையிலும், தனது கலையார்வம் குறையாது ஒரு ஆவணப்படத்தை இயக்க அதற்கு ஒத்துழைக்க ஓத்துக்கொண்டார்.
அவரது மனைவி தேனீர் கொண்டு வந்து அவருக்கு கொடுக்க ஒரு ஸ்ட்ரா (ளுவசயற) வால் உறுஞ்சிக் குடித்தார். அப்போது அவர் மனைவியிடம் இவரை நடிகர் என்று அறிந்துதான் திருமணம் செய்தீர்களா என்றகேட்க. அவர் மனைவியோ ஐயோ நான் அறிந்திருந்தால் கட்டியிருக்க மாட்டேன் என்று சொல்ல. இறப்பின் விழிம்பில் இருந்தும் ஒரு காதல் பார்வையைத் தன்மனைவி மீது வீசுகிறார்.
அதனை அப்படியே சஜித் படமாக்கினார். சில நாட்களின் பின் மரணம் அடைந்தார்.
இன்றும் என்றும் வாழும் கலைஞனானக அவரைத்தேடி முழடடலறழழனஇ முழனயமையயெடஇ இராமேஸ்வரம்,மூன்று இடங்களிலும் இந்த ஆவணப்படம் ‘ ஆiனெ நேஎநச னுநைள’ (னுழஉரஅநவெயசல கடைஅ) முதல் இடத்தைப்பெற்று அதற்கான உயர் சான்றிதழையும் பெற்றுக்கொண்டது.
ஒரு கலைஞனின் உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொண்டுவந்து ஆவணப்படுத்தியவர், இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான இளைஞன் சஜித் பகீரதன். இவர் 17 வருடங்களுக்கு முன்பே தனது 12ஆவது வயதிலேயே குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார்.
இன்று திரைக்கலை இளையவர் கைகளுக்கு சென்றுள்ளது. நவீன தொழில் நுட்பங்களை சட்டென உள்வாங்கும் திறன் இளையவர்களுக்கு அதிகம். காலத்துக்கு ஏற்ப கதை சொல்வது, காட்சிப்படுத்துவது யாவுமே இன்று வேறு விதம். கொஞ்சம் நீண்டாலே கதிரையை விட்டு இறங்கிவிடுவார்கள்.
சஜித் பகீரதன் லண்டன் வுடீடீ நுவெநசவயinஅநவெ. இணைந்து தனது இசைக்கான பயணத்தை ஆரம்பித்தார். அதற்கு வெற்றிமணி பத்திரிகையும், வுடீடீ உம் களம் அமைத்து கொடுத்தது. தென்னிந்திய பாடகர்கள் காற்றின் மொழி பாடல் புகழ் பல்ராம், மாதங்கி இவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பினையும் பெற்றார். யேர்மனியில் வெற்றிமணி விழாக்கள் பலவற்றிலும் கலந்துசிறப்பித்தார். தமிழகம் சென்று திரைப்பட நுணுக்கங்களையும் கற்று, வுடீடீ தயாரிப்பான ‘வடபழனி குறுக்குத்தெரு” குறும்படத்தை இயக்கினார். அந்த அனுபவத்தினால் ‘மாயவலை’ என்ற குறும்படத்தை சிறப்பாகத் தந்தந்தார்.
பாடல், குறும்படம் இசை என இருந்த சஜித் பகீரதன், முதிர்ச்சி பெற்ற கலைஞர்களின் அர்ப்பணிப்பான சேவைகள் அவர்கள் மறைவோடு மறைந்துபோகும் தன்மை கண்டு, தன் ஆற்றலை ரமேஷ் வேதநாயகம் அவர்கள்பால் செலுத்தினார். 12 நிமிடம். வரை நீளமான ஆவணச் சித்திரம் ஒக்ரோபர் அவரது ஒரு வருட நினைதினத்தில் வெளியானது. ‘ ஆiனெ நேஎநச னுநைள’ (னுழஉரஅநவெயசல கடைஅ) மறைந்த பின்பும் மறையாத அவர் உணர்வுகளைப் பதிவுசெய்த,இளம் கலைஞர் சஜித் பகீரதனுக்கு வெற்றிமணியின் வாழ்த்துக்கள்.
21 total views, 12 views today