குறைந்த அளவிலான பக்கவாதம்
Dr.M.K.muruganthan
Hemiplegia
கேள்வி: எனது தந்தைக்கு 65 வயது. கடந்த வாரம் வரை அவருக்கு பெரிதாக காய்ச்சல் வந்துகூட நான் பார்த்ததில்லை. ஆனால் கடந்த வாரம் திடீரென்று மயங்கி விழுந்துவிட்டார். நாங்கள் உடனே வைத்தியரிடம் அழைத்துச் சென்றோம். வைத்தியர் இரத்த அழுத்தம் காரணமாகவே மயங்கி விழுந்தார் என கூறினார். தற்போது எனது தந்தைக்கு வலது கையும் வலது காலும் பலமில்லாமல்
இருப்பது போல் கூறுகின்றார். அத்துடன் பேசுவதற்கும் சிரமப்படுகின்றார்.
இதற்கான காரணம் என்ன? இதை முழுமையாக குணப்படுத்த முடியுமா? யாரை அணுகினால் முழுமையாக குணப்படுத்த முடியும்?
பதில்: அவருக்கு குறைந்த அளவிலான பக்கவாதம் வந்திருப்பதாகவே கருதுகிறேன். முழுமையான பக்கவாதம் எனில் அவரது ஒரு பக்க கையும் காலும் முழுமையாக இயங்காதிருந்திருக்கும். அதை ஹெமிபிளிஜியா (ர்நஅipடநபயை) என்பார்கள்.
உங்கள் தந்தைக்கு ‘வலது கையும் வலது காலும் பலமில்லாமல் இருப்பது போல்..’ என்று நீங்கள் சொல்வதிலிருந்து அவை இயங்குகின்றன. ஆனால் முழுமையான பலத்துடன் அல்ல. அதாவது தசைகள் முழுமையான வீச்சுடன் செயற்பட முடியாதிருக்கிறது. இதை ஹெமிபரீசிஸ் என்பார்கள். ஹெமிபிளிஜியாவில் கை கால்கள் மட்டுமின்றி முகத்தின் தசைகளும் பாதிப்படையக் கூடும். முகத்தின் தசைகளும் சரியான முறையில் இயங்க முடியாததால்தான் அவர் பேசுவதற்கும் சிரமப்படுகிறார்.
பேசுவதற்கு மட்டுமின்றி உண்பது, உடுப்பது, நடப்பது, குளிப்பது, கழிப்பறை செல்வது, போன்ற பல நாளாந்த செயற்பாடுகளிலும் சுயமாக இயங்க அவருக்கு முடியாதிருக்கலாம். அவ்வாறெனில் வீட்டில் உள்ளவர்களின் உதவி பெருமளவு தேவைப்படும்.
சிகிச்சையின் முக்கிய அம்சமாக இருப்பது இயங்குவதற்கு சிரமப்படும் பகுதிகளை மீண்டும் உறுதியானதாக்கி செயற்பட வைப்பதுதான். உடற்பயிற்சி (Phலளழைவாநசயில) சிகிச்சை மூலம்தான் அவரை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதற்கென நீங்கள் ஒரு உடற்பயிச்சி சிகிச்சையாளரின் உதவியைப் பெற வேண்டும். அவரின் உதவியுடன் வீட்டில் உள்ள நீங்கள் அனைவரும் இதற்கான ஒத்தாசையை வழங்க வேண்டும்.
கை கால்கள் விரல்கள் உட்பட இயங்க முடியாதிருக்கும் அவரது உறுப்புகள் அனைத்திறகும் தசைநார்களுக்கும் பயிற்சிகள் அளிக்க வேண்டும். இவை இயங்காது என்று எண்ணி அவற்றை கைவிட்டுவிட்டு மற்றப் பகுதியை மட்டும் பாதிக்கப்பட்ட உங்கள் தந்தை முயலக் கூடாது. கூடியளவு பேச்சுக் கொடுத்து அவரைப் பேச வைக்க முயல வேண்டும்.
உங்கள் தந்தைக்கு வலது கையும் காலும் பலமில்லாது இருப்பதாகக் கூறினீர்கள். இயலாத அந்தப் பக்கத்தையே அவர் கூடியளவு உபயோகிக்க முயல வேண்டும். உதாரணமாக முகங் கழுவுவது, பல் விளக்குவது, எழுதுவது, தலை சீவுவது, உடை மாற்றுவது போன்ற அனைத்துச் செயற்பாடுகளுக்கும் இயங்குவதற்கு சிரமப்படும் பகுதியையே முன்னுரிமை கொடுத்து பயன்படுத்த அதே போல நடக்கும்போதும் பலமற்றதாகத் தோன்றும் வலது பகுதியையே அவர் தூக்கி வைத்து நடக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை (அழனகைநைன உழளெவசயiவெ iனெரஉநன வாநசயில) எனச் சொல்வார்கள்.
இதைத் தவிர மின் தூண்டல் செய்வதும் பயன் தரும். இதை அதற்கான பயிற்சி உள்ள உடற்பயிற்சி கொடுப்பவர்தான் செய்ய வேண்டும்.
பல துணைச் சாதனங்களையும் (யளளளை-வiஎந னநஎiஉநள) தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். உதாரணமாக நடக்கும்போது முழங்கால் தளர்கிறது எனில் அதற்கான முழங்கால் தளைப்பட்டி (முநெந டிசயஉந) உதவலாம். கைத்தடி, சக்கர நாற்காலி, நடக்க உதவும் றுயடமநச போன்றவற்றையும் தேவை அறிந்து பயன்படுத்தவும்.
சில வசதிகளை வீட்டில் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அவர் நாளாந்த நடவடிக்கைகளை இலகுபடுத்தவும், மற்றவர்கள் துணையை குறைத்து தன்னளவில் இயங்கக் கூடிய மனத்துணிவை வளர்ப்பதற்கும் முடியும்.
நடக்கும்போது பற்றி நடப்பதற்கு சுவர்களில் பிளாஸ்டிக் அல்லது இரும்புப் பைப்புகளை பதித்து வைக்கலாம். ரொயிலட் இருக்கையிலிருந்து தானாக எழுவது சிரமம் எனில் சற்று உயரமான ரொயிலட் இருக்கையை வைக்க வேண்டும்.
பிரஸ் பண்ணுவதற்கு கையை அவரால் உயர்த்த முடியாவிட்டால் இடது கையைப் பயன்படுத்த வேண்டாம். பிரஸ்சை ஒரு நீண்ட குச்சியைக் கட்டி வலது கையாலேயே பிரஸ் பண்ணட்டும். இதனால் பாதிப்புற்ற தசைநார்கள் பலம் பெறும்.
பிரஸர் இருந்தால் அதற்கான மருந்தை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தவும். இதைத் தவிர இது போன்ற பிரச்சனை மீண்டும் வராதிருக்க குருதி உறைதலைத் தடுக்கும் யுளிசைinஇ உடழினைழபசடை போன்ற மருந்துகளையும் கொடுத்திருப்பார்கள். அவற்றையும் தவறாது உட்
18 total views, 12 views today