யாழ்ப்பாணத்தில் ஒரு ஆறா!

வழுக்கியாற்றைத் தேடி ஒரு பயணம்
-பிரவீணன் விழி மைந்தன்.

சிறிய குடாநாடாகிய யாழ்ப்பாணத்தின் ஒரே ஒரு ‘ஆறு’ எனச் அழைக்கப் படுவது பாதி வெள்ளவாய்க்காலாகவும், பாதி பரந்த வெளிகள், வயல்களூடு வழமையாக வெள்ளமோடும் ஒரு பாதையாகவும் அமைந்துள்ள வழுக்கியாறு ஆகும். கதைகளிலும் காவியங்களிலும் புகழ்பெற்ற வழுக்கியாறு எனும் புண்ணிய நதியைப்பற்றி அறிந்தோர் பலர். ஆனால் கண்டோர் சிலர். இதற்கு ஒரு காரணம் வழுக்கியாறு மாரி காலத்தில் மட்டும் ஓடுவது என்பது. இன்னுமொரு அதைவிட முக்கியமான காரணம் வழுக்கியாறென்பது சில சில இடங்களில் மட்டும் தனது கரைகளுக்குள் அடங்கி நடந்து வேறு சில இடங்களில் வெறும் வெள்ளமாக வெளிகளூடு பரவிப் படர்வதென்பது. ஆகவே வழுக்கியாற்றின் கரையோடு ஒருவர் நடந்து சென்றாலும் சில சில இடங்களில் மட்டுமே அதன் தரிசனம் கிடைக்கும். இப்படி அந்தர்வாஹினியாக ஓடும் வழுக்கியாற்றை அதன் நதிமூலமாகிய அளவெட்டிப் பினாக்கைக் குளத்தில் இருந்து அது கடலோடு சங்கமமாகும் அராலி வரையில் கலைத்துக்கொண்டு போவதென்று ஒரு பயணம் புறப்பட்டோம். அதில் எடுத்த படங்களில் சில இவை.

108 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *