ஜஸ்டின் ட்ரூடோ எழுச்சியும் வீழ்ச்சியும் :கனடா பிரதமர் பதவி விலகுவது ஏன் ?

  • ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அமெரிக்கவின் வரிச்சுமை, ட்ரம்பின் 51வது மாநிலமாக இணைத்தல் போன்ற நெருக்கடியான காலத்தில் ட்ரூடோவின் பதவி விலகலும் நிகழ்ந்துள்ளது)

கனடாவின் இளம் கதாநாயக பிரதமரான ட்ரூடோ மிகவும் தீர்க்கமற்ற எதிர்காலத்துடன் தனது கட்சியையும் தனது பதவியையும் விட்டு வெளியேறுகிறார். இவை அனைத்தும் கனடாவிற்கு ஸ்திரமற்ற – நிச்சயமற்ற பொருளாதார தருணத்தில் நிகழ்ந்துள்ளன என்பதே உண்மையாகும்.அமெரிக்கவின் வரிச் சுமை, ட்ரம்பின் அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைத்தல் போன்ற நெருக்கடியான காலத்தில் ட்ரூடோவின் பதவி விலகலும் நிகழ்ந்துள்ளது.

பொருளாதார குழப்பம், குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, கியூபெக் பிரிவினைவாதம் மீண்டும் வளரும் நிலையில் பிரதமரின் பதவி விலகலும் நிகழ்ந்து உள்ளது. இந்த மாதம் ஜனவரி 21 முதல் ஒட்டாவா அரசு, அயல் நாடான அமெரிக்காவில் ஒரு புதிய டிரம்ப் நிர்வாகத்தை எதிர்கொள்கிறது. வர்த்தகப் பேச்சுக்கள், எல்லைப் பாதுகாப்பு, மற்றும் பரந்த வெளியுறவு பாதுகாப்புக் கொள்கைகளில் அமெரிக்கவின் புதிய அரசுடன் முரண்களை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கருத்துக் கணிப்புகளின் படி முன்னணியில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி எதிர்பார்த்தபடி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், அவர்கள் அமெரிக்க-கனடா உறவுகளில் சீரமைப்பது தொடங்கி, வரிகளைக் குறைப்பது, வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது போன்ற வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் பல கொள்கை முனைகளில் வெற்றியை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரத்திற்கான எழுச்சி:

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ, ஜனவரி 6,2025 அன்று கனடாவின் லிபரல் கட்சித் தலைவர், பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார்.கனடாவின் 15வது பிரதம மந்திரி பியர் எலியட் ட்ரூடோ மற்றும் மார்கரெட் சின்க்ளேர் ஆகியோருக்கு கிறிஸ்துமஸ் தினமான 1971 இல் ஜஸ்டின் பியர் ஜேம்ஸ் ட்ரூடோ பிறந்தார்.

ஒரு இளைஞனாக, 2000 ஆம் ஆண்டில், அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் அவர் உணர்ச்சிவசப்பட்ட பேச்சு, அவரை ஒரு எதிர்காலத் தலைவராக ஆக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இளமையில் ட்ரூடோ வக்கீல் தொழிலில் ஈடுபட்ட போது 2005 இல் ஊடக ஆளுமை சோஃபி கிரிகோயரை சந்தித்து திருமணம் செய்தார். இந்த ஜோடி “கனடாவின் கென்னடிகள்” என்று அழைக்கப்பட்டனர்.

2007 இல், ட்ரூடோ பாபினோவில் வேட்புமனுவைத் தேடிப் பெற்று, 2008 தேர்தலில் அவர் வெறும் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2012 இல் கன்சர்வேடிவ் கட்சி சென். பேட்ரிக் பிரேஸோவுக்கு எதிராக போட்டியில் வென்றபோது இளம் எம்.பி.யாக மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். இந்த நிகழ்வுகள் ட்ரூடோவை லிபரல் தலைமைக்கான முன்னணி போட்டியாளராக நிலைநிறுத்தியது.
அனுபவமுள்ள அரசியல் போட்டியாளர்களை எளிதில் தோற்கடித்து அவர் 2013 இல் பாரிய வெற்றி பெற்றார்.

காலநிலை நடவடிக்கை, பழங்குடி மக்களுடன் நல்லிணக்கம், தேர்தல் சீர்திருத்தம் மற்றும் கனடாவின் உலகளாவிய நிலையை மீட்டெடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் முற்போக்கான சாதனைகளை அடைய
ட்ரூடோவின் பதவிக்காலம் பெரும் வாக்குறுதிகளுடன் தொடங்கியது. 2015இல் ட்ரூடோ தனது கூட்டாட்சி மூலம் கனடாவின் 23 வது பிரதமரானார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போன்ற தாராளவாதிகளின் வெளிப்படையான வாரிசிற்கு தகுதியானவராக ட்ரூடோ கருதப்பட்டார். அத்துடன் ட்ரூடோ 2019 மற்றும் 2021 இல் இரண்டு அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்றார். அவரது சிறுபான்மை அரசாங்கத்திற்கு புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவைத் தக்கவைக்க, அவர் தேசிய பகல்நேர பராமரிப்பு மற்றும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான இலவச பல் பராமரிப்பு ஆகியவற்றையும் இயற்றி, மேலும் தேசிய மருந்தகத் திட்டத்திற்கு வழி வகுத்தார்.

தொடர் தோல்விகள்:

இருப்பினும் ட்ரூடோவின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், நெறிமுறை மீறல்கள் குறைபாடுகளால் பாரியளவில் பாதிக்கப்பட்டது. மேலும் தேர்தல் சீர்திருத்தத்தை செயல்படுத்துவதிலும் அவர் தோல்வியடைந்தது உள்ளார் என்று ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் அரசியல் குறுக்கீடு காரணமாக ஊழல், ட்ரூடோவின் ஆடம்பர விடுமுறைகள் மற்றும் அவரது, சர்வதேச இனப் பிரச்சினைகளில் அவரது நம்பகத்தன்மையை மேலும் சேதப்படுத்தியது. அத்தோடு நல்லிணக்கத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றம் அடையவில்லை என்று பழங்குடியின தலைவர்கள் குற்றம் சாட்டினர். அதே சமயம் பணவீக்கம், வீட்டுச் செலவுகள் மற்றும் மிகையான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் மீதான விரக்தி பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியது.

2022 மற்றும் 2024 க்கு இடையில் ஆயிரக் கணக்கான புதியவர்கள் நாட்டிற்குள் நுழைய குடியேற்றக் கொள்கைகளுக்கு ட்ரூடோ பச்சை விளக்கு காட்டியதற்காகவும் பலத்த எதிர்ப்பை சம்பாதித்தார்.

சர்வதேச உறவில் சர்ச்சை:

சர்வதேச நிறுவனமான ர்ரயறநi நிர்வாகி ஆநபெ றுயணொழர கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீனாவுடனான கனடாவின் உறவும் மோசமடைந்தது. கனேடிய மண்ணில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதியை படுகொலை செய்ய நரேந்திர மோடியின் அரசாங்கம் சூழ்ச்சி செய்ததாக ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்தியாவுடனான கனடாவின் உறவும் பாதிக்கப்பட்டது. சமீபத்திய பொது விசாரணையில் கனேடிய தேர்தல் முறையில் வெளிநாட்டு தலையீடுகளை வெளிப்படுத்தியதுடன், ட்ரூடோ தனது சொந்த எம்.பி.க்கள் பற்றிய முக்கியமான தகவல்களில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ளார்.
ஆதரவு வீழ்ச்சி:

டிரம்பின் முஸ்லீம் எதிர்ப்பு தடையை மீறி, கனடாவிற்கு அகதிகளை வரவேற்கும் ட்ரூடோ ஊக்கப்படுத்தியதால், அதைத் தொடர்ந்து குடியேற்றம் மற்றும் அகதிகள் கோரிக்கைகள் அதிகரித்தன. இப்போது குடியேற்ற எதிர்ப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. ஆனாலும் கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் ட்ரூடோ விரைவான நிதி நிவாரணத் திட்டங்களுக்காக ஆரம்பப் பாராட்டுகளைப் பெற்றார். ஆனால் தடுப்பூசி கொள்முதல் தாமதங்கள் மற்றும் தடுப்பூசி உத்தரவுகளுக்கான விமர்சனங்களையும் கடுமையாக பெற்றார்.

2025இல் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் வாழ்க்கை ஒரு முற்றுப்புள்ளிக்கு வந்ததுள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் அதிர்ச்சியூட்டும் ராஜினாமாவுக்குப் பிறகு, லிபரல் கட்சி ஆட்சி விழத் தொடங்கியது. ஜனவரியில் பாராளுமன்றம் மீண்டும் தொடங்கும் போது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு அச்சுறுத்தல் இருப்பதால், நான்கு லிபரல் பிராந்திய காக்கஸ்களில் மூன்று ட்ரூடோவை வெளியேறுமாறு கோரியது. மேலும் பொதுக் குழுக் கூட்டத்துடன், ட்ரூடோ இறுதியாக முரண்பாடுகள் சமாளிக்க முடியாதது என்று முடிவு செய்தார். ஜன. 6, 2025 அன்று, லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது திட்டத்தை அறிவித்தார்.

ஈழத் தமிழருடன் ஜஸ்டின் ட்ரூடோ:

கனடாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பல தீர்மானங்கள் நிறைவேறி வெற்றி கண்டதும், அதில் முக்கியமாக இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் தற்போது பதவி விலகிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் தமிழ் சமூகம் கடந்த பத்து வருடங்களில் அரசியல் ரீதியான குறிப்பிட கூடிய வளர்ச்சியை அடைந்ததும்,
தமிழ் மரபு திங்கள் கனடாவில் அறிமுகப் படுத்தப்பட்டதும் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலத்தில் தான் எனக் கூறினால் மிகையாகாது. அத்துடன் தமிழ் சமூக மையத்துக்கான பெரு நிதியை பெற்று கொடுத்ததும், ஆளும் கட்சியில் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொண்டு, முதலாவது கனேடிய தமிழ் மந்திரியை பெற்றுக் கொண்டதும் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலத்தில் தான். அத்துடன் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கிறதுக்கு முக்கியமான நாடாக கனடா உள்ளமையும் , அதன் தொடர்ச்சியை உறுதி செய்தமையும் முக்கியமானது அதில், தற்போது பதவி விலகிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பங்கு முக்கியமானது.

18 total views, 10 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *