தேவையானவர்கள்தானே எடுப்பார்கள்.

இன்று பாலியில் சரஸ்வதி பூஜை.
09.02.2025
கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து கடலில் குளித்து, கடவுளுக்கு, தாம் விரும்பும், உணவுகளை, ஓலைப்பெட்டியில் படைத்து, வழிபட்டனர்.
காலை 7.00 மணிக்கே கடற்கரையில் கூட்டம் அலையெனத் திரண்டது. சிறு சிறு தற்காலிக உணவுக்கடைகளும் உண்டு. ஆயிரக்கணக்கான மக்கள் மோடர்சைக்கிள்களில் வந்து கடற்கரையை நிரப்பினர்.
முதியவர்களை விட இளையவர்கள் அதிகம். ஆங்கிலத்தில் இளையவர்கள் சரளமாகப் பேசினர். கடற்கரை மணலில் படையலில் காசும் வைத்து இருந்தனர்.
யாருக்கு காசு எனக் கேட்டேன்
தேவையானவர்கள்தான் எடுப்பார்கள் என்றனர். சொன்னவர் எனக்கு கடவுள் போல் தெரிந்தார்.
எங்கே இங்கு முதியவர்கள் எவரையும் காணவில்லை. ஏன் என்றேன்.
அவர்கள் எமக்காக அன்று கடவுளை வேண்டினார்கள்.
இன்று நாம் அவர்களுக்காக கடவுளை வேண்டுகின்றோம்.
வாழ்க்கை ஒரு சக்கரம் என்றனர்.
எமக்கு முதியோரையும் அழைத்து சென்றே பழக்கம். அதில் ஒரு சுகம் மனநிறைவு என்றேன்.
முதுமையை ஏற்றுக்கொள்வதும் சுகம் என்றனர்.
உண்மைதான் ஆனால் எனக்குத்தான் முதுமை வரவில்லையே.
என் வீட்டுக்கண்ணாடிக்கு என் மீது 70 வருடமாகத் தீராத காதல்.
52 total views, 2 views today