நவயுகாவின் மன்மதம் நீ, வனயட்சி நூல் வெளியிட்டுகள்.

0
vm216

நவயுகா குகராஜா வணிகமாணிப் பட்டப்படிப்பை முடித்தவர். ஈழத்தின் தேசிய பாடசாலைகளில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியையாகக் கடமையாற்றிப் பின்னர் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகையாகவும் செயற்பட்டு வருகிறார்.

நவயுகா குகராஜாவின் முதலாவது கவிதைத்தொகுப்பு உயிர் உடையும் ஓசைகள் 2010 ம் ஆண்டு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இரண்டாவது கவிதைத் தொகுப்பு சூர்ப்பனகையும் ஒரு பவளத்தீவும் வாசகசாலை பதிப்பகத்தினால் 2023 ல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. நவயுகாவின் மன்மதம் நீ, வனயட்சி ஆகிய தொகுப்புகள் கடந்த வருடம் வெளியாகி இருந்தது.

பொட்டு, பெட்டைக் கோழி கூவி , வாகை, சிவப்புப் பெட்டி ஆகிய குறும் படங்களையும் கடவுளின் நிலம் உட்பட பல ஆவணப் படங்களையும் இயக்கிய இவரின் ‘பொம்மை’ திரைப்படம் 2025 ல் திரைக்கு வரவிருக்கிறது.
இங்கே மன்மதம் நீ, வனயட்சி நூல் வெளியிட்டு விழாக்காட்சிகள் கவிதைகள் சில.


மிகச் சிறந்த இதயத்தைக் கண்டடதைல்

ஒரு நல்ல காதல் பெரும் காத்திருப்புக்கும் பல தவறான காதலர்கள் கொடுத்த அனுபவங்களிற்குப் பின்னர் மாறுவேடத்தில் வரும் அதிஷ்டத்தைப்போல வந்து சேர்க்கிறது. ஒரு நல்ல காதலென்பது பேறு! கடுந்தவத்தின் பின்னரான வரம்!
“மன்மதம் நீ” காதலின் வலிகளைச் சுகமாக்கிய காதலைக் கொண்டாடும் இதயங்களுக்கானது. உங்கள் உண்மையான காதல் நிராகரிக்கப்பட்டு விட்டதா? நீங்கள் தூக்கி எறியப்பட்டு உடைந்து போய் கிடக்கிறீர்களா? இது உங்களுக்கான நேரம்.. உங்கள் இதயத்திற்குப் பொருந்தும் மிகச் சிறந்த இதயத்தைக் கண்டடையும் வரை மீண்டும் மீண்டும் காதலியுங்கள்!

காதல் இயற்கையின் அழைப்பு!
காதல் ஒரு கருவியாகி காயத்தின் விந்தைகளை
புரியும் படி சொல்லக்கூடிய இலகுபடுத்துவோன்!
காதல் அனந்தத்தை அடையப் பயணப்படும்
ஆத்மாவின் முதல் முயற்சி!
இருமை கடந்து ஒருமையைச் சுவைக்கத் தொடங்கும் போது
சுதந்திரத்தைக் கண்டடைய முடிவதால் காதல் செய்யுங்கள்!
காதல் பேரின்பத்தை அடையும் பாதைக்கான முதல் கதவு!

-மன்மதம் நீ
-நவயுகா குகராஜா

நட்சத்திரப்படுக்கையில்
நீல வானம்!
நீர்த்திரை நடுவில்
நிலவின் ஆலிங்கனம்!
ஆளைத்துளைக்குமோர்
அதீத காற்று!
கட்டுக்கரைக் குளத்தில்
கால் நனைத்துக் கொண்டு
குறுகிய என்
கூடாரம் நுளைந்து
இமை மூடி
மெல்ல விளக்கணைத்த போது
வில்லங்கமாய் நீ
விளையாடிக் கொண்டிருந்தாய்..
ஒற்றை மின்மினி நீ!
என் இரவுகளில்
கிறுக்குவதும்
வாசிப்பதுமாய்!


நீ கட்டிவிட்ட
சிலுவைகள்
இளகிப் போனதால்
அவை சிறகுகளாகும்
அவதானமிருக்கிறது!

வனயட்சி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *