தலைவாழை இல்லை போட்டு விருந்துவைப்பேன்

கீதா இரவி.(நோர்வே)
பெயர்கள் மட்டுமே முகவரியாகும் வண்ணம் தம்மைத்தாமே செதுக்கிக்கொண்டவர்கள் வரிசையில் கீதா இரவியும் இடம் பெறுகின்றார்.
இலங்கையில் குரும்பசிட்டி கிராமத்தை சேர்ந்த கீதா, தற்போது நோர்வே நாட்டில் வசித்துவருகிறார்.
ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு ஆற்றல் புதைந்து கிடக்கும். தன்னுள் இருக்கும் ஆற்றலைக் கண்டு கொண்டவர்கள், தளிர்க்கத் தொடங்குவர். அவர்கள் தமக்கான துறையில் துணிவுடன் கால்பதிக்கும் போது உலகம் அவர்களை அடையாளம் காணும். நோர்வே நாட்டில் அடையாளம் காணப்படுகிறார் கீதா இரவி.
நோர்வே தேசியப் போட்டியில் 2024 ஆம் ஆண்டுக்கான வெண்கலப் பரிசு.
கீதா இரவி (இராசாலிங்கம்) ‘Akersvannet’ நீரேரியின் மருங்கில் ஒரு ரம்மியமான தருணத்தைத் தன் ஒளிப்படக்கருவிக்குள் சட்டகப்படுத்தியுள்ளார். அதன் விளைவு ‘டுழஎந’ என்ற தலைப்பைப் பெற்ற ஒளிப்படமாக உருவானது. அத்துடன் அந்த ஒளிப்படம் நோர்வே தேசியப் போட்டியில் 2023 ஆம் ஆண்டுக்கான வெண்கலப் பரிசினையும் பெற்றுள்ளது. சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் கீதா ஒளிப்படக் கலை சார்ந்து தனக்கெனத் தனித்துவமானதோர் அணுகுமுறையை உருவாக்கியுள்ளார். ஒளிப்படத்திற்கான உகந்த தூண்டுதலைப் பெறும்நோக்கில் அவர் வாகனத்தில் பயணிக்கின்றார்.
Akersvannet’ நீரேரிக்கான தனது ஒரு பயணத்தில், கலவியில் இணையவிருந்த ஒரு சோடி நீலத்தட்டான் பூச்சிகளை காண்கின்றார். அவற்றின் நிறங்களை மெருகூட்டி, பொன்நிறப் பின்னணியுடன் அழகான படத்தை உருவாக்க விரும்பினார். ‘அன்றைய காற்றின் தன்மையால் புற்கதிர்கள்; அவ்வப்போது வளைந்து கொண்டிருந்தன. அந்தச் சூழல் சட்டகமிடலைப் பரிசோதிக்க எனக்கு வாய்ப்பை வழங்கியது’ என்றார் கீதா. சுற்றிலும் தேடிய பிறகு, பொன்நிறப் பின்னணியைக் கொடுக்கக்கூடிய ஒரு ‘Buttercup/ Smørblomst’ மலர்ச்செடியைக் கண்டார். தட்டான்பூச்சிகள் ‘Buttercup’ மலரை நோக்கி வளையும் தருணம்வரை கீதா பொறுமையாகக் காத்திருந்தார். ‘தட்டான் பூச்சிகள் வளைந்த புற்கதிரின் மீது இறங்கும் தருணம் வந்ததும், நான் கற்பனை செய்ததற்கு அமைய அக் காட்சியைப் படம்பிடித்தேன் ’ என்று அவர் கூறுகிறார்.
கீதா இதற்கு ஒரு ஒலிம்பஸ் கமராவையும், 300mm Zuiko லென்ஸையும், 1.4 × டெலிகான்வெர்டரையும் பயன்படுத்தினார் (Olympus camera with a Zuiko 300mm lens and a 1.4× teleconverter). இது தூரத்தில் இருந்து ‘பெருப்பிக்கப்பட்ட (macro)’ படங்களை எடுக்க அவருக்கு உதவியது – சக்கர நாற்காலியில் இருப்பவருக்கு இது பயனுள்ளது. ‘டுழஎந’ ஒளிப்படம் கீதாவின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுக்குச் சான்று பகர்கின்றது. இதன் மூலம் அவர் உடற் சவால்களைக் கடந்து இயற்கையின் வனப்பினை ஒளிப்படங்களாக உருவாக்க உந்துதலளிக்கின்றது.
இவர் அண்மையில் தாயகம் சென்றபோது மண்ணுக்கு அழகும் உயிரும் கொடுக்கும்,காட்சிகளைப் படம் பிடித்தார். பலருக்கும் பிடித்த சில படங்கள் இங்கு இடம் பெறுகின்றது.
தலைவாழை இல்லை போட்டு விருந்துவைப்பேன்
அடுத்து ஆகா தலைவாழை இல்லை போட்டு விருந்துவைப்பேன் என் தலைவி வருகைக்காய் காத்திருந்தேன் என வாழை இலைமீது இருந்து தலைவியைத்தேடும் ஆண் கிளி. பங்குனி 08 பெண்கள் தினத்திற்கான கௌரவம் கொடுக்கிறது.
ஓளித்து விளையாடல்
கோவிலில் ஒளித்துப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளைத் தூரத்தில் ஒளிந்து இருந்து வநடந டநளெ ஆல் படம் பிடித்தேன். பால்யம் ஒரு தடவை குளிர்வித்துச் சென்றது.
முகபாவனைகள்…
அவனது பட்டத்தை அண்ணன் வானத்தில் ஏற்றிக் கொடுத்ததும் விண்வெளிக்கு ராக்கெட் விட்ட ஆனந்தம் அவனுக்கு. தரையில் கால்கள் படாமல் அந்தரத்தில் பறந்தான். பட்டம் விட ஆயத்தமானதில் இருந்து அது பறந்து கொண்டிருக்கும் வரை அவனிடம் எத்தனைவகை முகபாவனைகள்…
புத்திசாலிக் கிளி!
இப்பொழுது பச்சைக்கிளிகளும் புத்திசாலிகளாகத் தான் இருக்கின்றன. தோட்டக்காரனிடம் மாட்டிக் கொள்ளாமல் ஒரு பயற்றங்காயைப் பிடுங்கிக் கால்களில் பற்றிக்கொண்டு வந்து அடுத்த வீட்டுத் தென்னோலையில் இருந்து ரசித்து ருசித்தது….