கனடாவில் ஊடக ஆளுமைக்கு மதிப்பளித்த ஷஊடகத்திரு
- எஸ்தி 50+| நூல் வெளியீடு
வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் அதிமூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், கனடா தமிழர் தகவல் முதன்மை ஆசிரியருமான திரு எஸ். திருச்செல்வம் (எஸ்தி) அவர்களின் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த ஊடக வாழ்வைக் குறிக்கும் வகையிலான ஷஊடகத்திரு – எஸ்தி 50| என்னும் நூலின் வெளியீடு ஸ்காபரோ சத்யசாயி மண்டபத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. ஷஎஸ்தி நண்பர்கள் வட்டம்| ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு ரொறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியர் அமுது யோசப் சந்திரகாந்தன் தலைமை தாங்கினார். செல்வி. பிரதி~;னி மதீஸ்வரனின் தமிழ் வாழ்த்தைத் தொடர்ந்து நூல் தொகுப்பாளர்களில் ஒருவரான திரு. எஸ். ஜெகதீசனின் வரவேற்புரையுடன் விழா ஆரம்பமானது. திருமதி மைதிலி தயாநிதி, திருமதி வனிதா இராஜேந்திரம் ஆகியோர் நூலின் உள்ளீடுகள் பற்றி ஆய்வுரைகள் நிகழ்த்தினர். தாயகத்தின் போர்க்காலச் சூழலில் உண்மையை உண்மையாக எழுதிய ஒரு பத்திரிகை ஆசிரியர் சந்தித்த அவலங்களையும் நெருக்கடிகளையும் இக்கட்டுரைகள் நன்கு சித்தரிப்பதாக இவர்கள் இருவரும் தங்கள் உரைகளில் தெரிவித்தனர். எஸ்தியுடன் இணைந்து பணியாற்றிய, அவருடன் நெருங்கிப் பழகிய, அவரது ஊடக வாழ்வை நன்கறிந்த 51 பிரமுகர்களின் கட்டுரைகளைக் கொண்ட 188 பக்க நூலின் முதற்பிரதியை பெற்றுக் கொண்ட சர்வதேசப் புகழ் பெற்ற எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் மதிப்புரை வழங்கினார். நூலின் தொகுப்பாளர்களில் இன்னொருவரான கல்வியியலாளர் பொன்னையா விவேகானந்தன் வெளியீட்டுரை நிகழ்த்தினார். திரு திருச்செல்வம் அவர்களின் ஊடக வாழ்வின் சோதனைகளையும் சாதனைகளையும் பற்றி இதுவரை மற்றையோருக்குத்; தெரிந்திராத பல விடயங்களை எடுத்தியம்பிய இவரது உரை சபையோரை நெகிழ்வடையச் செய்தது. கொழும்பு தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வார இதழ் ஆசிரியர் திரு. இராஜநாயகம் பாரதி இவ்விழாவின் பிரதம விருந்தினராகக் கலந்து முதன்மை உரை நிகழ்த்தினார். 1984ஆம் ஆண்டு யாழ்;ப்பாணம் ஈழமுரசு, முரசொலிப் பத்திரிகைகளில் ஷஎஸ்தி| பிரதம ஆசிரியராகப் பணியாற்றியபோது பயிற்சிப் பத்திரிகையாளராக தமது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த பாரதி தமதுரையில் ஈழத்தமிழரின் ஊடக வரலாற்றில் திரு திருச்செல்வம் அவர்களுக்கு தனித்துவமான இடமுண்டெனக் குறிப்பிட்டதோடு, போர்க்கால நெருக்கடிகளின்போது திருச்செல்வம் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் சோதனைகளையும் இழப்புகளையும் விபரித்துக் கூறினார். திருச்செல்வம் அவர்களின் நிறைவுரை அவரது ஐம்பதாண்டைத் தாண்டிய ஊடக வாழ்வின் மேலும் பல சம்பவங்களை முதன்முறையாக சமூகத்துக்குத் தெரியப்படுத்தியது. பிற்பகல் ஐந்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வு சரியாக ஏழரை மணிக்கு நிறைவுபெற்றது. அப்பலோ பயணத்தின் ஐம்பதாவது ஆண்டைக் குறிக்கும் முகமாக கமல் கேகைலிங்கம் குழுவினர் வழங்கிய நவீன வில்லிசை ஒரு வரலாற்று நிகழ்வாக இவ்வரங்கில் இடம்பெற்றது.
(தொகுப்பு: ராஜி)
972 total views, 1 views today
1 thought on “கனடாவில் ஊடக ஆளுமைக்கு மதிப்பளித்த ஷஊடகத்திரு”