யேர்மனியில் சிவராத்திரி சிறப்பாக அனுட்டிப்பு!
சிவராத்திரி தினத்தில் சிவத்தமிழ் நூலகம்.
கடந்த சிவராத்திரி தினத்தில் 04.03.2019 சிவத்தமிழ்ச்செல்வி அவர்களின் ஆலயங்கள்தோறும் சிவத்தமிழ்நூலகம் அமைப்போம் என்ற எண்ணத்தை விதைக்கும் நிகழ்வாக சைப்பிரசங்கங்கள் அமைந்திருந்தன. இதற்கான ஏற்பாட்டினை வெற்றிமணியும் சிவத் தமிழும் இணைந்து செய்தன.
சுவெற்றா கனகதுர்க்கா ஆலயத்தில் முதல் தொகுதி நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. அடுத்து டோட்மூண் சாந்தநாயகி சமேத சந்திரமௌலீவரர் ஆலயம் (சிவன் கோவில்) ஆலயத்திலும் சிவத் தமிழ் நூலகம் உருவாக்குவதற்கான சிறப்பான முயற்சிகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. சிவராத்திரி தினத்தில் இரு ஆலயங்களிலும் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களது சொற்பொழிவும் சிவத் தமிழ்ச்செல்வி அவர்களது சொற்பொழிவும் வெண்திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.
அன்றையதினம் சிவன் ஆலயத்தில் ஆன்மிகச் சொற்பொழிவினை கரிணி கண்ணனது உரை அடியவர்களை ஈசன்பால் ஈர்த்து வைத்திருந்தது. ஆலயத்தில் நான்கு யாமப்பூசைகளும் சிறப்பாக இடம் பெற்றன.
மேலும் கம்போடியாவில் அமைந்துள்ள ஆற்றில் 1000 சிவலிங்கங்கள் ஒளிப்படமும் காண்பிக்கப்பட்டன. தயாரிப்பு சிவத்தமிழ். இலவசமாக மேற்கொள்ளப்படும் இந்த நற்காரியங்களுக்கு ஆதரவு தந்த ஆலய நிர்வாகத்தினருக்கு நன்றி. சிவராத்திரி யேர்மனியில் பல ஆலயங்களிலும் சிறந்த வழிபாட்டுன் கூடிய பூசைகள் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. தகவல்: ஜெய-சக்தி
740 total views, 1 views today