செல்விகள். ராகவி,யாதவி, இராஐகுலசிங்கம் அவர்களின் சிறப்பான பரதநாட்டிய அரங்கேற்றம்! தொகுப்பு


நிருத்திய நாட்டியாலய அதிபரும், ஆசிரியையுமான, நாட்டிய கலைமணி திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார். அவர்களின் மாணவிகளான செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி. யாதவி. இராஐகுலசிங்கம், அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் 30.03.2019.அன்று யேர்மனியில் marl. நகரில் சிறப்பாக நடைபெற்றது. அரங்கேற்ற விழாவிற்கு தலைமை, விருந்தினராக வெற்றிமணி பத்திரிகை பிரதம ஆசிரியர் கலாநிதி, மு. க. சு. சிவகுமாரன். அவர்களும் பிரதம, விருந்தினராக திருக்கோணேஸ்வரர் நடனாலய (சுவிஸ்) அதிபர் நாட்டியக்கலைமணி திருமதி மதிவதினி சுதாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சிறப்பு விருந்தினராக திரு.கி.த.கவிமாமணி அவர்கள் கலந்து கொண்டார்கள். துர்க்காதுரந்தரர் ஜெயந்திநாதக்குருக்கள் அவர்களின் நடராஜர் பூஜையுடன் அரங்கேற்றம் ஆரம்பமானது.

விநாயகர் துதியில்; தொடங்கி மங்களம் வரை சிறப்பான முறையில் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அதில் ஆர்ப்பாட்டமில்லாமல் தேவையான அடவுகள் அங்கு காணக்கூடியதாக இருந்தது. மரபுமாறாத நடனத்தை கண்டு யாவரும் வியந்தனர். இசை வேளையில் நிரோஐன். ‘என்ன தவம் செய்தனை”. என்னும் பாடலை சிறப்பாகப் பாடியிருந்தார். அந்த இளம் வாய்ப்பாட்டு கலைஞனுக்கு எமது பாராட்டுக்கள். வயலினும், மிருதங்கமும் நடனத்துக்கு உயிர் கொடுத்தது.
தலைமை விருந்தினராக வெற்றிமணி பத்திரிகை, சிவத்தமிழ் சஞ்சிகை ஆகியவற்றின் பிரதம ஆசிரியர் கலாநிதி மு.கசு.சிவகுமாரன் அவர்கள் கலந்து உரையாற்றினார். அவர்தம் உரையில் பொதுவாக ஒரு மாணவிக்கு அரங்கேற்றம் செய்வது சுலபம். அங்கே ஒப்பீடு பரதத்துடன் மட்டுமே இருக்கும் ஆனால் இங்கு இருமாணவிகள் என்பதால் ஒப்பீடு இரு மாணவிகளின் அசைவிலும் அது இருக்கும். அது மட்டுமன்றி பாடல்கள் இருவருக்கும் ஏற்றவகையில் தேர்வு செய்யவும், பாடவும் வேண்டிய பொறுப்பு அதிகமாக இருக்கும். இப்பாரிய பொறுப்பினை சிறப்பாகச் செய்த குருவையும், அதனை சிறப்பாக அபிநயத்த மாணவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும் என்றார்.மாணவிகளின் குருவாகிய நாட்டியக்கலைமணி அமலா சுரேஷ் அன்ரனி அவர்கள் மாணவிகளுக்கு அரங்கேற்றச் சான்றிதழை வழங்கினார்.

பிரதமவிருந்தினராக திருக்கோணேஸ்வரர் நடனாலய (சுவிஸ்) அதிபர் நாட்டியக்கலைமணி திருமதி மதிவதினி சுதாகரன் அவர்கள் கலந்து மாணவிகளின் நடனத்தை மிகத் துல்லியமாக அவதானித்து ஒவ்வொரு அசைவுகளையும் மெச்சி வாழ்த்தி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திரு.கி.த.கவிமாமணி அவர்கள் நாட்டிய மங்கையரின் நடனச்சிறப்பையும், வாய்ப்பாட்டுக் கலைஞர் திரு நிரோஜன் அவர்களையும் சிறப்பாக வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.
சிம்மக்குரலோன், லோ. வலரன்ரையினதும், பென்சியா டொன் பொஸ்கோ. அவர்களது அறிவிப்பு, மேடையை மேன்மை படுத்தியது. ராகவி, யாகவி இருவரும். தொடர்ந்து இப் பரதக்கலையை பயின்று குருவுக்கும். பெற்றோர்க்கும் பெருமை சேர்க்க வேண்டி வாழ்த்துகின்றோம்..

-ஜெய சக்தி

2,938 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *