விடுமுறைக்கு ஊருக்குப்போனால்….

நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை கற்பத்தரு என போற்றினர்.
பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.

கொஞ்சநாள் கள்ளு இறக்கிய பின்னர் வளரும் பாளையில், பனங்காய் காய்க்கும், இந்த காய்களில் தான் குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். அதற்கு அடுத்த கட்டமாக, காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும் முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதியை கத்தியால் சீவி எடுத்து வேகவைத்தும் உண்ணலாம்.

அதற்கு பின்னர், பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். அதுமட்டுமன்றி ஆண்மைக் குறைபாடைநீக்கிகும் தன்மையும் இதற்குண்டு.

நுங்கில் அதிகஅளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

நுங்கில் உள்ள நீர் சத்தானது, வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இவ்விரண்டிற்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும்.
நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பயன்பெற முடியும்.

2,590 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *