சீரடிக்குச் செல்வது எப்படி?
முன்பின் அறியாத பல முகங்கள் எங்கள் வாழ்க்கைப்பயணத்தில் நாம் துன்பப்படும் நேரம், அல்லது அவசியதேவை ஏற்படும் பொழுதுகளில் எமக்கு துணைசெய்துவிட்டு போய்விடுவார்கள். சின்னச் சின்ன உதவியாகக்கூட இருக்கலாம். நீங்கள் நடக்கும்போது உங்கள் கையில் இருந்த திறப்பு நிலத்தில் வீழ்ந்தால் ஒருவர் குரல்கொடுத்து உங்கள் திறப்பு நிலத்தடியில் வீழ்ந்ததைக் காட்டுகின்றாரே அவர் தெய்வமாகலாம்.
கடவுள் படங்களில் வருவதுபோல் முகத்திற்குப்பின்னால் மஞ்சள் ஒளி வட்டம் தெரிய வருவதில்லை. மனிதவடிவில் வருவார். ஏன் பூனையாகக்கூட வந்து குறுக்கே சென்று எம்மை ஒருகணம் நிதானிக்க வைக்கலாம்.
சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். காலம் நீண்டது. அது வாழ்வில் இவை வாடிக்கை என்பதனைக் காட்டலாம். காலத்திற்கு காலம் கடவுள் மாறவில்லை அவர் எமக்கு உதவ அனுப்பும் குருவானவர்களே மாறி மாறி வருகின்றார்கள். பாடசாலை ஒன்றுதான், ஆசிரியர்கள் காலத்திற்கு காலம் மாறி மாறி வருவதில்லையா? நம்பிக்கைதான் வாழ்க்கை. ஒரு நம்பிக்கையால் ஒருவரது உள்ளம் சாந்திபெறும், மகிழும் என்றால் அது பிறருக்கு எந்தக்கெடுதியும் கொடுக்கவில்லை என்றால் அது நல்லதுதானே
எங்கள் தாய்நாட்டில் வாழ்ந்து வரும் எனது பெரியம்மாவின் மகளே சீரடி சாய் பாபாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒன்பது வியாழனும் விரதமும் எடுக்கச் சொன்னார். நான் ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் விரதம் இருந்தேன். ஆனால் பின்னர் அவர் யார் என்பதை ஆராயத் தொடங்கினேன். இணையத்தளத்தில் பக்தர்கள் கூறுவதை கேட்டு அறிந்து கொண்டேன். அவரைப் பற்றிய விடயங்களைக் கற்றேன். அதன் பின்னர் சாய்பாபா மீது மரியாதையும் நம்பிக்கையும் அதிகரித்தன. அவரின் ஆலயங்களுக்குச் செல்ல ஆசைப்பட்டேன். ஆனால் யேர்மனியில் எங்கு கோயில் என்று தெரியாது.
ஒரு நாள் ஒருவர் என்னைப் பற்றி கனவு கண்டார். அக்கனவில் வந்த சம்பவம், எனக்கு முதல் நாள் நடந்தவை. நான் ஆச்சரியப்பட்டேன். அவருக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் கனவில் கண்டார். அப்போது நான் வட்சப்பில் சாய்பாபாவின் படம் வைத்திருந்தேன். நான் சாய்பாபா பக்தையோ எனக் கேட்டார். நான் ஆம் என்று கூறினேன். உடனே அவர் யுஅ துரபநனொநiஅ 3 ர்üஉமநடாழஎநn என்ற இடத்தில் ஆலயம் அமைந்திருப்பதைக் கூறினார். என் மனதில் மகிழ்ச்சி. அப்பொழுது நான் நினைத்தேன் இக்கனவு பாபாவின் அற்புதம் என்று. ஒரு நாள் அக் கோயிலுக்குச் சென்றேன். நாங்கள் வேண்டுவதை ஒரு தாளில் எழுதி வைத்து வணங்கச் சொன்னார்கள். நான் எழுதிய விடயம் எனக்கு நிறைவேறியது.
என் பெரிய ஆசை, கோடை விடுமுறைக்கு என் யேர்மன் நண்பியுடன் இந்தியா, சீரடிக்குச் செல்ல நினைத்தேன். எனது தங்கைக்கு விடுமுறை கிடைக்கவில்லை. அப்போது நான் கூறினேன்: பாபா நினைத்தால், நீ சீரடிக்கு கட்டாயம் வருவாய்! அதேபோன்று என் நண்பிக்கு விடுமுறை கிடைக் கவில்லை.
ஆகவே நான் எனது விடுமுறையை மாற்றி என் தங்கையையும் அம்மாவையும் இந்தியாக்குக் கூட்டிச் சென்றேன். பலர் கூறினார்கள்,தனியச் செல்வது பயம் என்று. மொழி, இடம் வேறு. கடினம் என்றார்கள்.
பாபா மீது நான் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதனால் பயமின்றி பயணத்தைத் திட்டமிடத் தொடங்கினேன்.
சென்னையில் இருந்து சீரடிக்கு விமானச் சீட்டை பதிவு செய்தேன்.
இரண்டு மணிநேரத்தில் சீரடி விமானநிலையம் சென்றடைந்தோம். அங்கிருந்து வயஒi யில் நாங்கள் தங்கும் இடத்துக்குச் சென்றோம். ஆங்கிலத்தில் உரையாடினோம். அன்பான மனிதர்கள். மொழி தெரியாததனால் உதவிகள் செய்தார்கள். ஆட்டோ ஓடுபவரிடம் 10 ரூபாய் அதிகமாகக் கொடுக்க அவர் அப்பணத்தை வாங்கவில்லை. அவரின் நேர்மை எனக்குப் பிடித்திருந்தது.
ஓர் அழகிய ஊர். வயல்வெளி…ஆஹா… மாதுளம் பழங்கள். பார்க்கவே அருமையாக இருந்தது.நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகாமையிலே ஆலயமும்.எங்கு பார்த்தாலும் சாய் நாதர் பெயர். கடைகளில் சாய் நாதர் பொருட்கள். மிக்க மகிழ்ச்சி.
எந்நேரமும் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அவரைப் பார்ப்பதற்கு பொறுமையுடன் வரிசையில் நின்று சென்றோம். முதல் நாள் என் கண்களில் கண்ணீர். என்னால் உணர முடிந்ததை வார்த்தைகளால் கூறமுடியாது.
இரண்டு முறை ஒரு நாளைக்கு 200 ரூபாய் வழங்கி, நுழைவுச் சீட்டைப் பெற்று, பாபாவைப் பார்க்கச் சென்றோம். கைதொலைபேசி உள்ளே கொண்டு செல்ல முடியாது. 5 ரூபாய் கொடுத்து அதை பூட்டி வைத்தல் வேண்டும்.
பாபா வாழ்ந்த இடம், துவாரகாமாயி, அவர் அணிந்த உடை, அவர் தண்ணீர் எடுத்த கிணறு அனைத்தும் கண்டு மகிழ்ந்தேன். ஒரே இடத்தில் இவை காணப்படுகின்றன.
அனைவருக்கும் உதவுகின்ற உறுதியினைப் பெற்று வந்தேன்.
காணிக்கையும் வழங்கலாம். அன்னதானம் மற்றும் பலவிதமான தானங்கள் கொடுக்கப்பட்டன.
பொறுமை நம்பிக்கை இவை இரண்டும் பாபாக்கு மிகவும்முக்கியமானவை. வியாழக்கிழமைகளில் விருப்பமின்றி சைவம் உண்ட நான் தற்போது விருப்பத்துடன் சைவம் உண்டு வருகின்றேன். நெய்விளக்கும் ஏற்றி வருவதனால் இவ்விளக்கின் ஒளி என் மனதுக்கு வெளிச்சத்தைத் தருகின்றது. சாய்பாபா என் வாழ்வில் வந்த ஒளி போல.
— றஜினா தருமராஜா
3,529 total views, 6 views today