யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீடத்தில் பீறுநடைபோடும் ஒரு இளம் விஞ்ஞானி!
யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமாரின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு
யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழினுட்பத்தை பயின்றுவரும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கோவிலைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்னும் பல்கலைக்கழக மாணவனின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் 2019ம் ஆண்டுக்கான தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் இணைந்து போட்டிகளை நடத்தி வருகின்றது. இவ்வருடத்துக்கான தேசிய மட்ட கண்டுபிடிப்புப் போட்டி எதிர் வரும் செப்டம்பர் 20ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை இலங்கை வர்த்தக மற்றும் கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெறும் ஆக்கங்களிலிருந்து மிகச் சிறந்த கண்டுபிடிப்புக்களை சர்வதேச கண்டுபிடிப்பாளர் போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள். கிழக்கு மாகாண மட்டப் போட்டி கடந்த மே மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் சோமசுந்தரம் வினோஜ்குமார் பதின்மூன்று கண்டுபிடிப்புக்களை போட்டிக்காக காட்சிப்படுத்திருந்தார்.
அதில் பிறரின் துணையின்றி கணித தேற்றங்களை இலகுவாக படிக்கக்கூடிய ஆயவாள Helper – 2 எனும் கருவியும், இயந்திர வேலைகளின் போது தவறவிடப்படும் மிகச் சிறிய துணைப்பாகங்களை இலகுவாகவும் விரைவாகவும் கண்டுபிடிக்கக் கூடிய The Device to detect the lost nuts எனும் கருவியும், களைகளை அழிக்கக் கூடிய The Device to up root the Thorny plants எனும் கருவியும், இரும்புகளை மிகத் துள்ளியமான அளவுகளில் விரைவாக வெட்டக்கூடிய A Device to cut out Iron bars & Pipes எனும் கருவியும், பலகைகளை நேர்த்தியாக ஒழுங்கமைக்கக் கூடிய The Device to set up planks to Gather எனும் கருவியும், தளர்பாட இணைப்புக்களை துள்ளியமாக கழற்றக்கூடிய The device to Detect the Planks எனும் கருவியும், தட்டை வடிவான பொருட்களுடைய மையப் புள்ளியை கண்டுபிடிக்கக் கூடிய ஆனை Point Scaler எனும் கருவியும், தளர்பாட இணைப்புக்களின் போது மையப்புள்ளியை கண்டுபிடிக்க உதவும் Drill’s Helper எனும் கருவியும், தரையோடுகளின் உருவத்தை மாற்றியமைக்கும் General Scale Helper எனும் கருவியும், வீட்டில் நாளாந்தம் சேரும் உக்கலடையக் கூடிய கழிவுகளை விரைவாக மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் Novel Plant Pot எனும் கண்டுபிடிப்பும் மற்றும் ஐந்து புதிய தொழினுட்பங்களை உள்ளடக்கியதும் புத்தகங்களை இலகுவாக கற்கக் கூடியதுமான Smart Book Cover எனும் கண்டுபிடிப்பும் தேசிய மட்ட கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
~~இந்தவருட கண்டுபிடிப்புடன் எனது மொத்தமாக 99 கண்டுடிபிடிப்புக்களை செய்துள்ளேன். நான் இதுவரை 99 கண்டு பிடிப்புக்களைச் செய்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எனது மிகச் சிறந்த கண்டுபிடிப்பை நான் இன்னும் செய்யவில்லை. தற்போது புவியீர்ப்பு விசை மூலம் வீட்டுகளுக்குத் தேவையான மின்சாரத்தை பெறல் மற்றும் டெங்கு நோய்கான நுளம்புகளை அழிக்கும் கருவி போன்ற ஆய்வுகளைச் செய்து வருகின்றேன். இவ்ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கு உதவிகள் மற்றும் ஆலோசணைகளை வழங்கி வரும் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜெயவர்த்தன சேர் அவர்களுக்கும், இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் ஹல்வதுர சேர் அவர்களுக்கும், றுகுனு பல்கலைக்கழக பேராசிரியர் பௌதிக சேர் அவர்களுக்கும், யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரவிராஜன் சேர் அவர்களுக்கும், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் முசாதிக் சேர் அவர்களுக்கும், இலங்கை புலமைச்சொத்து அலுவலகத்தின் பணிப்பாளர் அவர்களுக்கும் மற்றும் யாழ். பல்கலைக்கழக தொழினுட்ப பீட நிர்வாகத்திற்கும் பணிவன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் அத்தியாவசியமான கண்டுபிடிப்புக்களை வணிகமயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றேன்.” என இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் தெரிவித்தார்.
இவர் தனது பல்கலைக்கழக விடுமுறை தினங்களில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வரும் பணப்பரிசில்களில் மூன்றில் ஒரு பங்கில் பாடசாலை மாணவர்களின் புத்தாக்க திறனை ஊக்குவிப்பதற்கான ‘INNOVEX’ எனும் இலவச கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளை நடாத்தி வருகின்றார்.
இந்த வருடம் பெப்ரவரி தாய்லாந்தின் பேங்கொக் வர்த்தக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சிப் போட்டியில் மூன்று சர்வதேச விருதுகளையும் ஐந்து நாடுகளுடைய சிறப்பு விருதுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாயத்தின் பழைய மாணவராகிய இவர் இதுவரை 38 தேசிய விருதுகளையும் 6 சர்வதேச விருதுகளையும் 5 நாடுகளுடைய சிறப்பு விருதுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் நடைபெற்ற தேசியமட்ட கண்டுபிடிப்பாளர் போட்டியில் வினோஜ்குமார் அவர்கள் கீழ்வரும் பரிசில்களைப் பெற்றுக்கொண்டார்
- ஒரு தங்கப்பரிசும் மற்றும் 100,000,00 பணப்பரிசும்
- ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் 50,000,00 பணப்பரிசும்
- மூன்று வெண்கலப்பதக்கங்கள் மற்றும் 90,000,00 பணப்பரிசு
1,829 total views, 6 views today