தெளிவும் தெரிவும்

Glass transparent ball on bridger background and grainy surface. Texture, outdoors
லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை..:
ஏதோ ஒரு இலக்கு குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதை நோக்கிய பயணத்தில் தான் வாழ்க்கையின் இனிமை இருக்கிறது.
முடி விடம் எது என்று தீர்மானித்து விட்டாலே போதும்…
அதற்கான பாதையை இலகுவாக கண்டுபிடிக்கலாம்.
இடையூறுகள் இல்லையென்றால் போராட முடியாது.
போராட்டம் என்பது இரத்தம் சிந்துவது மட்டுமல்ல…
வியர்வை துளிகளிலும் தங்கியிருக்கிறது.
கண்ணீர் துளிகளை நம்பி விடாதே அது உன்னை கோழை ஆகிவிடும்.
விட்ட தவறுகளை மறந்து விடக்கூடாது.
அதனை சீக்கிரம் திருத்திக் கொள்ள வேண்டும்
சுய பரிசீலனை என்பது !
எல்லாவற்றுக்கும் உன்னை நீ தயார்படுத்துவது.
இலக்கை நோக்கி நீ புறப்பட ஆரம்பித்தால்…
உன்னை யாராலும் இடைமறித்து விட முடியாது.
(2)
வலிகளை தந்து கொண்டே இருக்கும் ஒரு கொடிய நோய் மறக்க முடியாத நினைவுகள்.
அது உங்களை உள்ளே உருக்குவது வெளியே தெரியாது.
முகத்தின் புன்னகையை வைத்து யாரின் சந்தோஷத்தை கணக்கிட கூடாது.
சிலருக்கு நிம்மதியை கூட கண்ணீர் உருவாக்கி விடுகிறது.
இதற்கான நிரந்தர தீர்வு என்பது துயரத்தைத் தந்த அந்த உறவை மறந்து விடுவதுதான்!
உண்மையான அன்பை வெளிப்படுத்தியவர்களுக்கு ஞாபகங்களை அழிப்பது அவ்வளவு சுலபமானது அல்ல …
எவராலும் கடந்த காலங்களை மீட்டிப் பார்க்க முடியாமல் இருக்க முடியாது.
ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது.
நாட்களை வீணடிக்காமல் இன்னொரு உறவை தேடுவது – அதற்காக அவசரப்படக்கூடாது.
இதுவரை ஏமாற்றப்பட்டதற்கான காரணங்களை கண்டறியுங்கள்.
சந்தேகங்களை முகத்துக்கு நேரே கேளுங்கள் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள்.
அனுபவம்தான் நல்ல நண்பன் அவனால் உங்களை சீர்திருத்த முடியும்.
உங்களை ஏமாற்றியவரே இங்கு அழகான வாழ்க்கையை வாழ்கிறார். உங்களால் முடியாதா..?
மாற்றத்தின் மகத்துவம் கொடிய நினைவுகளை மறப்பது தான் !