யார்ரடி இந்த சீரடி?
இந்த உலகில் உள்ள மிகப் பெரிய மூன்று மதங்களாகிய இந்து , முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவம் என்று மூன்றுடனும் தொடர்புடைய வகையில் வாழந்த மகா முனிதான் இந்த சீரடி சாயிபாபா என்றால் நம்புவீர்களா? 1838 புரட்டாசி 28 இல் பிறந்தார் என்று நம்பப்படும் இவரின் சிறப்பு இப்போது சில காலமாகவே பலரால் போற்றிக் கொண்டாடப்படும் மாபெரும் புகழ் மிக்க மஹா புனிதரின் சிறப்பாகக் கூறப்படுகின்றது.
பிறப்பால் சிவ பக்தர்களின் வீட்டில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்த பாபா வளரும் போது இஸ்லாமிய குருவின் ஆஸியில் வளர்ந்தார். அதனால் இன்றும் சீரடி சாயிபாபா கோவிலில் இந்து முஸ்லீம் பக்தர்களை ஒருமையாகக் கணலாம். அப்படி என்றால் எப்படி இங்கு கிறிஸ்தவம் நுழைகின்றது என்பது தான் மூன்றாவாது அதிசயம். சாய்பாபா ஜேசுவைப் போலவே மக்களை ரட்சித்தார். நோய்வாய்ப்பட்ட மக்களின் நோயைத் தீர்ப்பது சாதாரணம் ஆனால் சாய்பாபா நோய்வாய்ப்பட்ட மக்களின் நோயை தானே எடுத்துக்கொள்வாராம். அதனால் அந்தத் துன்பங்களை தன் உடலில் ஏற்று மக்களை மீண்டும் சுகப்படுத்துவாராம் ஆனால் அந்த நோய்கள் எல்லாம் அவரை எதுவும் செய்யாதாம் என்று நேரில்க கண்ட வணிகர்கள், சீடர்கள் எழுதிய குறிப்பில் இருந்து தெரியவருகின்றது.
சீரடி கோவிலின் சிறப்பு பூசை செய்வதற்கு எந்த பணமும் இல்லை, நீங்கள் ஆண் பெண் ஏழை பணக்காரன் எந்த மதம் என்று எப்படி இருந்தாலும் சாதாரண சாயிபாபா பக்தனாகத் தான் அங்கு பார்க்கப்படுவார்கள். நான் எங்கும் கேள்விப்படாத இன்னுமோர் அற்புதம் தான் பெண்கள் குழந்தைகளிற்கு பால்கொடுப்பதற்கு என்று தனி இடம் இங்கு உள்ளதாம் அங்கு பெண்கள் அமைதியாக இருந்து எந்த இடையூறும் இன்றி தங்கள் குழந்தைகளின் பசியாற்ற முடியும் என்பதை விட உயர்ந்த பெண்ணியம் எங்கும் பேசிவிட முடியாது. கோவிலிற்குள்ளே ஒரு உண்டியல் உண்டு அதில் நீங்கள் விரும்பிய தொகை போட விரும்பினால் போடலாம். நகையாக பொருளாக நன்கொடை செய்ய விரும்பினால் செய்யலாம். காரணம் சாயிபாபா பிச்சை எடுத்து வாழ்ந்த மஹா சித்தர் என்பதனால் அதே போன்றே இன்றும் கடைப் பிடிக்கப்படுகின்றது.
பிச்சை எடுத்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கையாலேயே சமைத்து உணவு கொடுப்பாராம். பிச்சை எடுத்த பொருட்கள் குறைவாக இருந்தாலும் அன்று அவரிடம் வந்த அனைவருக்கும் போதும் என்று கூறும் வகையில் எடுக்க எடுக்க குறையாமல் அவர் சமையல் செய்த பாத்திரத்தில் இருந்து உணவு வந்தவண்ணம் இருக்கும் என்றும் குறிப்புக்களில் அதிசயிக்கப்படுகின்றது. சாயிபாபா சொன்னதில் சிறப்பு அன்பு ஒன்றே இறைவனை அடையும் மார்க்கம், நீங்கள் எந்த மதத்தில் உள்ளீர்களோ அதே மதத்தில் இருங்கள். ஆனால் மற்றைய உயிர்களை நேசியுங்கள் என்று சொன்ன அவர் ஜேசுவைப் போன்றே இறந்து மூன்று நாளில் மீண்டும் உயிர்த்தார் என்பது தான் மீண்டும் கிறிஸ்தவ மதத்தை நினைவு படுத்தும் இன்னுமோர் சிறப்புச் செய்தி. ஆம் இவர் சமாதியில் இறங்கும் முன் தன் உடலைப் பாதுகாக்கும் படி சொல்லிவிட்டு சமாதியில் இறங்கினாராம். அப்போது பலர் சாய்பாபாபின் உடலைப் புதைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் பூசாரி அனைவரையும் தடுத்து மூன்று நாள் காத்திருக்க மூன்றாம் நாள் உயிர்த்துவந்து ஆசிவழங்கி அனைவரையும் ஆச்சரிய படுத்தினார் சாய்பாபா என்பது கண்கூடு நடந்த ஆச்சரியமாம்.
இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் சேர்ந்து வாழவைத்த சாய்பாபா மூன்று முக்கிய மதங்களை நினைவு படுத்தி வாழ்ந்த இன்றும் வாழ்ந்துகொண்டுள்ள மஹா சித்தரே எங்கள் சீரடி சாய்பாபா என்று பக்தர்கள் போற்றிக் கொண்டாடிவருகின்றார்கள்.
ஆய்வு சி.சிவவினோபன்
1,767 total views, 6 views today