இனிமேல் நான் நயந்தாரவின் விசிறி அல்ல

கிராமத்து அழகியாக வந்து பட்டினத்துத் தாரகையான நயந்தாரவின் மாற்றம், பல தமிழ் நடிகைகளின் வராலாற்றை ஒத்தது. இருந்தும் இவரது தனிப்பட்ட சர்ச்சைகள், அதற்குள் குறிப்பிட்ட நடிகர் நடன-இயக்குனருடன் காதல்தொடர்பு, அவரது பெயரைப் பச்சைகுத்தி, மாதத்திற்கொரு மதம் மாறி, நினைத்ததைப் பேசியும், நினைத்துப் பேசாமல் விடும் நயன்தாராவின் சுபாவம் என்னை ஒரு வகையில் தட்டியது. சில்க் சுமிதா காலத்தில் இருந்து, நினைத்ததைச் செய்வதுபோல் தெரியும் நடிகைகளைக் காணாத எமக்கு, நயன்தாரா ஒரு மாற்றமாக வந்தார். நிச்சயமாக நயன்தாராவின் அழகிற்கு ஈடு இல்லை, ஹம்சத்வனி ராகத்தில் வரும் இவரது நகைக்கடை விளம்பரம் வந்தால், இருந்து பார்த்து முடித்து எழும்பிச் செல்லும் பலரில் நானும் ஒருவன். “அறம்|| “இருமகன்|| திரைப்படங்களின் பின், பெண்களுக்கு முக்கிய இடம் கொடுத்த திரைப்படங்களினால் நான் நயந்தார விசிறி ஆனேன். கனமான கதாபாத்திரங்களை இவர் நெறியாள்வதை நான் கண்டேன். முக்கியமாக உண்மைக்குரலில் பேசியது அருகிப்போன நடிப்புத்திறனாக ஏற்றுக்கொண்டே கவர்ச்சியைக் குறைத்து அர்த்தங்களைக் கூட்டிய நயன்தாரா, “கோலமாவு கோகிலா|| திரைப்படத்தினூடாக நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த பெண்ணிய action comedyயை வழங்கினார்.

இருந்தும் அண்மைய காலத்தில் நயனின் திரைப்படங்களைப் பார்ப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஏனெனில், இங்கே ஐரா படத்தின் trailer பார்த்ததும் நயந்தாரா இதில் இரட்டைவேடம் நடித்திருக்கிறார் என புரிந்துகொண்டேன். ஒரு வேடத்தில் மேற்கத்தேய உடைகளையும் நவீன சுபாவத்தையும் கொண்டவராகவும், இன்னொரு வேடத்தில், கிராமத்துத் தோற்றதுடனும் இருந்தார். இவரது வேடம், முக்கியமாக கிராமத்து நயன்தாராவின் மேனி இருட்டானதாகத் தெரிந்தது. நவீன ஊடக விழுமியங்களில் கருமையான மேனி கொண்டவர்களாக வேடம் போடுவது கடுங்குற்றம். அதை எங்களது நயன்தாரா செய்திருப்பாரா என்ற கேள்வி எனக்குள் எழும்பப் படத்தின் சுவரொட்டியை google செய்து பார்த்தேன், அங்கே இரு நயன்தாராக்களில் ஒருவர் கறுத்த மேனி வேடம் போட்டிருந்தார். ஐரா படத்தில் யமுனா (நயன்தாராவின் முதற் கதாபாத்திரம்) என்கிற ஒரு இளம்பெண் பவானி என்னும் பேயைச் சந்திக்கிறார். பவானியின் வாழ்க்கை பரிதாபங்களின் சங்கமம். பவானி பிறந்ததும், அவரது அப்பா மீண்டும் ஒரு பெண்குழந்தையை ஈன்றதை நினைத்து அழுகிறார். அந்தத் தந்தை இறக்க, ஊர்மக்கள் பவானியின் விதியினால் தான் அவர் இறந்ததாகச் சொல்கிறார்கள். (சின்ன வயது பவானியாக நடிகை கறுப்பழகி Gabrella வருகிறார்) இவரைத் திருமணம் பேச வருபவர்கள் அனைவரும், அவள் கறுப்பாக இருப்பதையும், ராசியில்லாமல் இருப்பதையும், சுட்டிக்காட்டி மறுத்துச் செல்கின்றனர். (வயது வந்த பவானியாக நயன்தாரா நடிக்கிறார்). அவள் தன்னைத்தானே கண்ணாடிமுன் நின்று தாழ்த்திப் பேசுகிறாள். பவானியின் அத்தான் அவரை பாலியல் பலாத்காரம் செய்யப் போனதை அக்காவிடமும், தாயிடமும் சொல்ல அவர்கள் மருமகனை நம்பி பாவானியை வீட்டை விட்டு துரத்துகின்றனர். பவானி பட்டினத்திற்கு வந்து கூலி வேலைகளைச் செய்து பிழைக்கிறார். கூலி வேலை செய்யும் போதும் பவானி சித்திரவதைகளை சந்திக்க ஓரிடத்தில் தனது இளமைக்காலத்து காதலன் அமுதனைக் கண்டு, இருவரும் மணம் புரிய சம்மதிக்கின்றனர். தனது கல்யாணத்திற்கு தயாராகிச் செல்லும் பவானி, யமுனாவின் துடுக்குத்தனத்தால் ஆரம்பித்த ஒரு விபத்தினால் இறக்கிறார். திரைப்பட்டத்தின் பொறியியல் ஒகேயாக இருந்தாலும், கதையின் முடிவு வித்தையானதாக இல்லை. எனது ஆய்விற்கு முடிவு முக்கியமானதுமல்ல.

@karupazhahi_gabrella_official என்கிற ஐளெவயபசயஅ முகவரியினூடாக புயடிசநடடய என்னும் இளம் நடிகை கறுப்பு மேனி அழகானது எனவும், அதை பழிக்கக்கூடாது எனவும் பறைசாற்றுகிறார். சிறிய காணொளிகள் மூலம் தனது நடிப்புத்திறனை சர்ச்சையான விடையங்களை நடித்துக்காட்டி வெளிப்படுத்துகிறார். இந்தியா முழுவதும் இவரது திறமையை சிறப்பிக்கிறது. இருந்தும் ஐரா இயக்குனர் சர்ஜுன்
Gabrellaவை பவானியெனும் பரிதாபமான பெண்ணாகவே நெறியாள விட்டுருக்கிறார். Gabrellaவின் அழகான, சராசரி தமிழ்ப்பெண்ணின் தோற்றங்கள் சிறப்பிக்கப்படாமல், துரதிஷ்டமான வாழ்வின் அடையாளமாக காட்டப்பட்டன. அதைவிட, வயதுவந்த பவானியாக நயன்தாரா நடித்ததினால், வருங்காலத்தின் முக்கிய நடிகை ஒருவரின் screentime தேவையின்றி குறைக்கப்பட்டதுபோல் எனது உணர்வு. என்றுமே அனுகூலங்கள் நிறைந்தவர்கள் வென்று செல்ல, ஏனையோர் பாதாளமே முடிவென இருப்பது ஐரா படத்தின் முடிவெடுப்புகளிலும் தெரிகிறது. கப்ரெல்லாவின் விசிறிகள் நயன் தாராவின் விசிறிகள் படத்தை பார்க்கவேண்டும் என்னும் திட்டம் இங்கே வெளிவருகிறது. தமிழ் மக்களிடையே கறுப்பு மேனி அழகில்லை என்பது யதார்த்தம். வெள்ளையாவதற்கு எது உண்ணவேண்டும், எதைப் பூசவேண்டும் என்பதை, இளையவர்களிடம் இன்னும் எடுத்துரைக்கின்றனர். ஒரு பெண்ணின் மதிப்பு, அவளது வெள்ளை மேனியிலே கணிக்கப்படுகிறது என்பதை ஐரா எதிரொலித்தாலும், பவானியின் காதாலன் அமுதனும் அவளை, அவளது உள்ளத்து அழகிற்காக விரும்புவது, கறுப்பு மேனி அழகில்லை என்பதை மீண்டும் நிர்ணயிப்பதை எதிர்ப்பதாக இல்லை.

வறுமையான, பரிதாபமான வாழ்வு, அக்கிரமங்கள், சித்திரவதைகள், துன்பங்கள் மற்றும் அசிங்கங்கள் என்பவை முக்கியமாக கறுப்பு மேனி கொண்டவர்களுக்கே நடைபெறும் என்பதையும் பவானியின் துரதிஸ்டமான வாழ்க்கையினால் இத்திரைப்படம் மீண்டும் நிலைநாட்டுகிறது. 
செம்மேனி யமுனாவாக, நயன்தாராவின் கதா பாத்திரம் நினைத்தைச் செய்து, வரும் வரன்களை எதிர்த்துப்பேசி, தன் தொழிலில் சிறந்தவளாக வீர நடை போடுகிறாள். இருட்டுமேனி பவானியோ, சுற்றியுள்ளோரின் அக்கிரமங்களை தாங்கிக் கொண்டே உள்ளாள். ஒரு ஆணையும் வாழ்க்கையில் விடாது யமுனா செல்ல, பவானியின் வாழ்க்கை காதலன் அமுதன் மூலமாக மட்டுமே சிறு இன்பத்தைக் காண்கிறது. பெண்ணியம் என்பது அழகான பெண்களுக்கு மட்டும் தானா?

கறுப்பு மேனி கொண்டவர்களாக வெள்ளையர்கள் வேடம் போட்டு, கறுப்பினத்து மக்களை அசிங்கபடுத்தியது உலகறியும் அக்கிரமம். அதுவே நயன்தாரா இங்கு செய்ததுடன் நேரடியாக ஒப்பிடமுடியாது. ஏனெனில், கறுப்பு மக்களின் தாக்குதல் வரலாற்று ரீதியாக எம்மிலிருந்து வேறுபட்டது. இருந்தும் நயன் தாராவின் பவானி வேடம், வெறும் வேடம் அல்ல. இன்னொருவருடைய துரதிருஸ்டத்தை இவர் வேடமாகப் போட்டுக் கொண்டு நடத்திச் செல்லலாம், ஆனால் சராசரி பவானி தனது மேனியை எப்படிக் கழுவினாலும் அது வெள்ளையாகாது. படத்தின் போக்கை முற்போக்குச் சிந்தனையாகக் கொண்டு செல்ல நிறைய இடங்கள் இருந்தன. ஆனால், இயக்குனர்கள் முன்வரவில்லை. நயன்தாரா போன்ற தேர்ச்சி பெற்ற நடிகைகள் நியாயமற்ற இத்தகைய படங்களை மறுத்துச்செல்லாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம். நயன்தாரா தனது சமூகப்பொறுப்பை விட்டுச் சென்றதால் என்னைப் போன்ற பல விசிறிகளை இழந்தார்.

2,244 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *