கோகிலா.மகேந்திரன்
இன்று சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு சிறந்த எழுத்தாளரும் சமூக சிந்தனையாளரும் ஆன திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களை வெற்றிமணி பத்திரிகையின் பங்குனிமாத இதழின் கௌரவ ஆசிரியராக கௌரவித்து மகிழ்கின்றது.
இவர் விழி,விழிசைக்குயில்,பசுந்தி முதலிய புனைபெயர்களில் ஆரம்பத்தில் எழுதி வந்த கோகிலா மகேந்திரன் அவர்கள் ஆசிரியர்,முதன்மை ஆசிரியர்,தொலைக்கல்வி விரிவுரையாளர்,யாழ்.பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர்,அதிபர் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்,ஆகிய நிலைகளில் சேவை ஆற்றி ஒய்வு பெற்றவர். சிட்னி,அவுஸ்திரேலியாவில் சில காலம் தமிழ்ப் பாடசாலை ஆசிரியராகவும்,இந்து சமய ஆசிரியராகவும் பணி செய்தவர்.
எழுத்தாளர் என்ற வகையில் சிறுகதையும் நாடகமும் இவருக்குப் பெருமை சேர்த்த வடிவங்கள் ஆயினும் குறுநாவல் ,நாவல்,விஞ்ஞானக் கதைகள்,உருவகங்கள்,சிறுவர் கதைகள்,சிறுவர் கவிதைகள்,புனைவுப் பேட்டி,நடைச் சித்திரம், உரைச் சித்திரம்,கட்டுரைகள் என்று பல திசைகளிலும் இவரது எழுத்துப் பயணம் நடைபெறுகிறது.
தாய் நாட்டிலும்,அவுஸ்திரேலியாவிலும்,பல நாடகங்களை எழுதி,நடித்து,நெறியாள்கை செய்து புகழ் பெற்றவர்.வட இலங்கைச் சங்கீத சபை மூலம் தான் நாடக கலாவித்தகர் பட்டம் பெற்றதோடு பல மாணவர்கள் அப் பரீட்சையில் சித்தி பெற வழி காட்டியவர் .
இலங்கை வானொலி ,சக்தி தொலைக்காட்சி,அவுஸ்திரேலிய தமிழ் வானொலி ஆகியன இவரது உரைகளை ஒலி ,ஒளி பரப்பி மகிழ்ந்தன.
தாய் நாட்டைப் போர் மேகம் சூழ்ந்திருந்தபோது உளவளத் துணையாளர் பயிற்சி பெற்று ,அதன் தொடர்ச்சியாக நெருக்கீட்டுக்குப் பிற்பட் ட மன வடுவுக்குரிய விசேட சம்பவ விபரிப்புச் சிகிச்சையை இத்தாலி நாட்டின்” எiஎழ ”குழு வினரிடம் பயின்று பிரயோகித்தவர் .இரு நூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை உளவளத் துணையாளர்களாகப் பயிற்று வித்து மாணவர் நலம் பேண உதவியவர்.தொடர்ந்து அறிகை நடத்தைச் சிகிச்சை,யுஊவு ஆகியவற்றையும் உளவளத் துணையாளர்களுக்குப் பயிற்றுவித்துத் தானும் துணை நாடிகளுக்கு உதவி வருபவர் .
இவரது நூல்களுக்காகப் பல முறை தேசிய சாகித்ய விருது,மாகாண மட்ட இலக்கிய விருது,கொடகே தேசிய விருது ,எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது,ரூபராணி ஜோசேப் இலக்கிய விருது,இரா உதயணன் இலக்கிய விருது,வடக்கு மாகாண முதலமைச்சர் விருது சிவத்தமிழ்விருது (2020) எனப் பல விருதுகளையும் பரிசுகளையும் அள்ளிக்கொண்டவர்.
பண்ணிசை பயின்று திருவாவடுதுறை ஆதீனத்தின் ”திருமுறை நெறிச்செல்வர் ”பட் டம் வென்றுள்ளார்.
இலங்கை அரசும் கலை ,கலாசார சமூக நிறுவனங்களும் இவருக்கு ” இலக்கிய வித்தகர் ” ”கலைச்சுடர்” ”கலா பூஷணம் ” ”சமூக திலகம் ” ”கலைப் பிரவாகம் ” என்ற பட்டங்களை வழங்கியுள்ளன.
அண்மையில் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 90 வது 07.01.2020 அகவை நாளில் சிவத்தமிழ் விருது பெற்றார்.
இவர் தாயகத்தில் விழிசிட்டியைப் பிறப்பிடமாகக்கொண்டவர், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
பூர்வீகம்
தந்தையார் – செ .சிவசுப்பிரமணியம்
தாயார் – சுப்பிரமணியம் செல்லமுத்து
பாட்டன் – செல்லையா
பூட்டன் – சின்னக்குட்டி
ஓட்டன் – முத்தர்
சேயோன் – வீரகத்தி
பரன் – கார்த்திகேயர்
கார்த்திகேயரின் தந்தை ஆழ்வார் வட்டுக்கோட்டையில் இருந்து வந்து பங்கிலிட்டியில் ( விழிசிட்டியில் ஒரு காணிப்பெயர் ) குடியேறியவர்
2,399 total views, 6 views today