யேர்மனியில் இரதமும் பங்காக் புகையிரதமும்
யேர்மனியில் தேர்க்காலம் முடிந்து இனி இலையுதிர்காலம் ஆரம்பிக்கின்றது. ஆனால் தேர்க்கால நினைவுகள் பல உதிராமல் நெஞ்சில் உள்ளது. அவற்றில் சிலவற்றை மீண்டும் தேர்க்காலம் வரும் வரை தொடர்ச்சியாக பார்ப்போம். அரசாங்கம் மக்கள் போக்குவரத்திற்கு செய்யும் சேவையில் புகையிரதத்தின் பணி முக்கியமானது. அச் சேவையாற்றும் அரசு மக்களுக்கு அரசனே!
அரசனுக்கு வழிவிட்ட மக்கள்
பாங்காக் நகரில் (The Famous Maeklong Railway Market, Bangkok Thailand ) நதியில் மிதக்கும் சந்தையுண்டு. அதனை அடுத்து தரையில் ஒரு பெரிய சந்தை உண்டு. அந்த சந்தையின் நடுவே சந்தையை கூறுபோட்டுக்கொண்டு ஒரு புகையிரதப்பாதை உண்டு. அப்பாதை பாவனை கைவிடப்பட்ட பாதை அல்ல. தினமும் புகையிரதம் காலையும் மாலையும் செல்லும் பாவனையில் உள்ள பாதை. அந்த தண்டவாளத்தை மூடி இருமருங்கிலும் சந்தை நடக்கும். பெரும்திரளான மக்கள் அங்கு கூடுவார்கள்.
புகையிரம் காலை சரியாக 8.10. வரும். வியாபாரிகள் தம் கூடாரங்களை மடக்க்கி கடைகளை ஒதுக்கிட,கூடிநின்ற மக்கள் ஒதுங்கி வழிவிட, பேர் அரசன் பேல் புகையிரதம் சந்தைக்கு நடுவால் வரும். அரசனும் (புகையிரதமும்) தான் அரசன் என்ற எந்த திமிருமின்றி மெதுவாக மக்கள் சந்தைக்கும் அவர்களது தொழிலுக்கும் இடையூறு செய்யாமல் மெதுவாகக்கடந்து செல்லும். இது தினமும் நடைபெறும் காட்சி. இந்தக்காட்சியனைக்காண சந்தைக்கு கூடும் மக்களைவிட உல்லாசப் பயணிகள் அதிகமாகக் கூடுவார்கள். ஆபத்து விழைவிக்கக்கூடிய ஒரு போக்குவரத்து சந்தைக்குள் விழிப்புடனும் பொறுப்புடனும் அழகாக நிகழ்த்தப்படுவது ஓர் அற்புதமே!
பாங்காக்கில் மக்கள் விலகி அரசனுக்கு வழிவிடுகிறார்கள். அரசனும் மக்கள் வேலை சிதறாமல் அவதானமாக மெதுவாக செல்கின்றான். அவன் பாதையில் பாய்விரித்து வியாபரம் செய்தவர்கள் கூட, கூடாரங்களை மடக்கி இடம் விடுகின்றார்கள். அவன் வரும் நேரம் தெரிந்து மக்களும் உஷாரக இருக்கிறார்கள்.
கடவுளுக்கு வழிவிட்ட அரசன்
யேர்மனியில் டோட்மூண்ட் சிவன் ( சாந்தநாயகி சமெத சந்திர மௌலீசர் ஆலயம்) ஆலயத்தில் வருடாந்த தேர் உற்சவகாலத்தில் தேர் தெருவீதி வலம்வருவது வழமை. இந்த ஆண்டும் (24.06.2018) சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். சிவனின் இரதம் செல்லும் பாதை ஓர் இடத்தில் அரச போக்குவரத்து இராம் (புகையிரதம்) செல்லும் பாதையில் சில தூரம்சென்று கடக்கவேண்டும். அப்படிச் செல்லும்போது அந்த பாதையில் இரதம் அல்லது புகையிரதம் மட்டுமே செல்லலாம்.
இங்கே அரசன் (அரசு) தெய்வத்திற்கு வழிவிட்டான். புகையிரதம் வர, நகரக்காவலர்கள் உதவ, அரசின் புiயிரதம் அமைதிகாத்து தரித்து நின்று, தெய்வம் இரதத்தில் தன் பாதையைக் கடக்குவரை வழிவிட்டு காத்திருந்து சென்றது. அதுமட்டுமன்றி வழிபாடு செய்யும் மக்களுக்கும் வழிவிட்டு அமைதியா விழிப்புடனும் பொறுப்புடனும் கடந்து (ராம்) சென்று அரசனும் தெய்வமாகினான்.
யேர்மனிய அரசு அவரவர் சமயப் பின்னணியின் பிணைப்பைக் குறைத்து மதிப்பிடுவது கிடையாது. தெருத் தெருவாக தங்கள் சமயச் சின்னங்களை வைக்வேண்டும் என்ற வெறியும் கிடையாது.
இரவிரவாக தெருக்களைத் திருத்தவும்;, தெருவோரங்களில் மரங்களை நடவும் இத்தகைய பணிகளை மேற்கொள்ளவுமே முனைவார்கள் அன்றி. ஊர் உறங்கும் நேரத்தில் நம்தேசத்தில் போல் தெருவோரத்தில் மரங்களின் கீழே புத்தர் சிலைகளை வவைக்க, வாகனங்களில் சிலையுடன் அலைய மாட்டார்கள்.
பக்தனின் அழகு உள்ளத்தை ஆலயமாக்குவதில் உண்டு. அரசனின் அழகு மக்களை கடவுளாகக் காண்பதில் உண்டு.
— madhavi
2,661 total views, 6 views today
1 thought on “யேர்மனியில் இரதமும் பங்காக் புகையிரதமும்”