விசில் அடித்தல்
விசில் அடித்தல் என்பது யாழ்ப்பாணத்தில் நாங்கள் அடிக்கடி கண்டும் கேட்டதுமான ஒன்று. பொதுவாக இதைன இளம் வயதினரான ஆண்பிள்ளைகளே செய்வார்கள். பெண்பிள்ளைகள் விசில் அடிப்பதில்லை. தப்பித்தவறி யாராவது அதைனச் செய்யமுனைந்தால் அது ஒருகெட்டபழக்கம் என்றேகருதப்பட்டது.
விசில் அடிப்பது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்றல்ல. மூச்சை அடக்கி குரைலக் காற்றோடுசேர்த்து வெளியேவிடேவண்டும். சிலர் இதைனச் செய்தால் சத்தேமவராது. விசில் அடிப்பைத ஒருவிதமான சங்கீதம் என்றும் கூறலாம்.
அண்மையில்மின்னஞ்சல் வழியாக ஒருசிலநிமிடே நேரவீடியோவைப்பார்த்தேன்.
புல வருடங்களாக மறந்திருந்த விசில் அடித்தலை இந்தவீடியோ துணுக்கு எனக்குமீண்டும் ஞாபகப்படுத்தியது.
துருக்கி என்ற ஒரு ஐரோப்பிய – ஆசியநாடுஉண்டு. இதன் ஒரு பகுதி மேற்கு ஆசியாவிலும், இன்னொருபகுதி ஐரோப்பாவின் போல்கன் குடா நாட்டிலும் உண்டு. இது முற்றிலும் ஒரு பீடபூமிப்பிரேதசம்.
இங்கு குஸ்கோய் என்றபெயரில் ஒரு கிராமம் உண்டு. சுமார் பத்தாயிரம் மக்கேள இங்கு வசிக்கிறார்கள். இவர்கள் விவசாயத்தை தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். இங்குள்ள மக்கள் விசில் அடித்தலை ஒரு மொழியாகப் பாவித்து, கூப்பிடுதூரமளவிலுள்ள தங்கள் சகாக்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். இந்த விசில்மொழியில் 250க்கும் மேற்பட்டவிதம் விதமான ஒலிகைள அமைத்து அவற்றை அதற்குரிய வார்த்தைகளாகப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக கமம் செய்யும் பொழுது, ஒரு சாக்குப்பை கொண்டுவா எனக்கூறினால் பதிலுக்கு மற்றத் தொழிலாளி அதற்குரியபதிலைக் கொடுப்பார்.
பிள்ளைகள்கூட தங்கள் நண்பர்கைள விளையாட அழைக்கும்போது விசில் மூலம் தொடர்பு கொள்வார்கள்.
அந்தக்கிராமத்து மக்கள் விசில் மொழியை தங்கள் பாரம்பரியத்துக்குரிய ஒருவிடயமாகக் கருதி அதைனப் போற்றி வளர்க்கிறார்கள்.
அதைன அழியாமல் பாதுகாப்பதற்காக பாடசாலைகளிலும் விசில் மொழிபோதிக்கப்படுகிறது. யுனெஸ்கோஅமைப்பு 2017ம் ஆண்டில் இதைன வளர்க்க வேண்டுமென்று சங்கல்பம் எடுத்துள்ளது. எனேவ இது அழியமாட்டாது.
மனம் சந்தோசமாக இருக்கும் போதும், ஒருகிலேசமும் இல்லாமலிருக்கும் போதுமாத்திரமே விசில் அடிக்க முடியுமென்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கவலையான நேரத்தில் எவரும்விசில் அடிப்பதில்லையாம்.
யாழ்ப்பாணத்தில் எங்கள்வீட்டு ஒழுங்கை ஒரு குறுக்குப்பாதை. தியேட்டர்களில் இரண்டாம் காட்சி படம் பார்த்துவிட்டு பலரும் இந்தக் குறுக்குப் பாதையைத்தான் பாவிப்பார்கள்.
சைக்கிள்களில் இரண்டுபேர் அல்லது அதிகமாகச் செல்பவர்களை பொலிஸ் பிடித்துவிடும் என்றபயம் இதற்குக்காரணம். இருள் நேரப்பயணத்தை இது மேலும்அதிகரிக்கும்.
இதிலிருந்து விடுபட அன்று படத்தில்கேட்ட பாடல்களை விசிலடித்தபடி இளையோர்கள் செல்வர். முதல்சாமநேரம், ஊரெ உறங்கும் அந்த நேரத்தில் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு வரும் அந்தவிசிலின் ஓசை கேட்பதற்கு இனிமையானது.
விசில் அடிப்பதை ஒருவைகயான சங்கீதம் எனக்குறிப்பிட்டேன். அதற்கு உதாரணமாக, சிவப்பிரசாத் என்ற சாயிபக்தர் சுவாமியின் பஜைனைகளை பக்கவாத்தியங்கள் சகிதம் பாடியகச்சேரியை கேட்டு அனுபவிக்கும் சந்தர்ப்பம் பலவருடங்களுக்கு முன்னர் எனக்குக்கிடைத்தது.
அந்த விசில் மேதையின் இறுவட்டுகைளக் கேட்கும்போது ஏதோ ஒரு வாத்திய இiசையக் கேட்பது போன்ற பிரமையை எமக்கு ஏற்படுத்தும். நாம் வாழும்நாட்டில் இரண்டாம் நிலைப் பாடசாலைகளின் பரிசளிப்புவிழாக்கள், போட்டிகள் என்பவற்றில் விசில் அடித்து உற்சாகத்தைத் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர் தலைவி உட்பட பலர்விசில் அடிப்பதைக்கண்டு நான்முதலில் ஆச்சரியப்பட்டேன். சில சமயங்களில் பரிசளிப்பு விழாக்களின் ஆரம்பத்தில் உபஅதிபர் “உங்கள் விசில் அடித்தலை எல்லோரும் பரிசுவாங்கியபின் செய்யவும்” எனவேண்டுகோள் விடுப்பதுண்டு.
ஸ்பெயின் நாட்டில் கெனரி தீவுகளில் ஆடுமேய்ப்போர் தமது மந்தைகளை வழிநடத்த விசில் மொழியையே பாவிப்பார்கள். இலங்கையில் நாய்கேளாடு விசில் மொழியில் பல கட்டளைகள் வழங்கப்படுவைதப் பார்த்திருக்கிறோம். அமெரிக்காவின் வட கெராலைனா மாகாணHappy Whistlers Week த்தில் 1973ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது. 1996, 1999, 2000 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் உல்மான் என்பவர் வெற்றியாளரானார்.
அவர்விசில் மூலம் வழங்கிய Happy Birthday பாடல் உலகப்பிரசித்திபெற்றது.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலும் விசில் அடிப்பதின் மூலம் மக்கள் தொடர்பு கொண்டதாக அறிந்தேன்.
மரக்கறி தோட்டங்களுக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்கு மூன்று ஆட்கள்தேவை. ஒருவர் கிணற்றுக்குள் கயிறு மூலம் பட்iடைய இறக்கிதண்ணீர் அள்ளுவார். அடுத்தவர் துலாமிதிப்பார். மூன்றாமவர் பாத்திகட்டேவண்டும். இவர்களின் வீடுகள் கூப்பிடுதூரத்திலேயே இருப்பது வழக்கம்.
முதலாம்ஆள் அதிகாலையில் தான் ஆயத்தம் என்பதை விசில்மூலம் தெரிவிக்க இரண்டாம் ஆள் அதனை மூன்றாம் ஆளுக்கு விசில் மூலம் தெரிவிப்பார். பின்னர் மூவரும் ஓர் இடத்தில் சந்தித்து தோட்டத்துக்கு செல்வார்களாம்.
இன்று அனைவர் கைகளிலும் கைத்தொலை பேசிகள் உள்ளன.
சொற்ப மாதாந்தக் கட்டணங்களில் இவை இருப்பதால் இதன்பயன்பாடு அதிகமாகியுள்ளது. இருப்பினும் இளம் வயதினர் தங்கள் சந்தோசமான மனநிலையை வெளிப்படுத்த அவ்வப்போது விசில்அடிப்பதும், விசில் ஊடாக பாடல்களை வெளிப்படுத்துவதும் தொடர்ந்து இடம்பெறத்தான் போகிறது.
நன்றி: தமிழர்தகவல் -கனடா
கனகேஸ்வரி.நடராஜா-கனடா
1,729 total views, 9 views today