தந்தையின் புரிதலும் கணவனின் புரிதலும்

நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த அன்னை அறிமுகப்படுத்தும் முதல் கதாநாயகன் உன்
அப்பாவே. எட்டி உதைத்த கால்களை கட்டி அணைத்து முத்தமிட்டு பூரித்து போவரும் அவரே.

திருமணத்துக்கு பின்னர் அப்பா என்பவரை மறந்து விடாதே! உன்னை ஏணியில் ஏற்றி விட்டவர் அவரே!
அப்பா என்கிற உறவு மகள் என்பவளுக்கு கடவுள் கொடுப்பது ஆகும். கணவன் என்பவரை மட்டுமே அவளாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வாள்.

கூடுதலான மகள்கள் அனைவரும் தந்தை செல்லமாகவே இருப்பவர்கள்!
என்ன நண்பர்கள் சரி தானே?! அப்பா என்பவரை விட வேறு யார் இவ்வுலகில் உன்னைக் கவனமாகப் பார்த்துக் கொள்வார்? உனக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர் அல்லவா? கோபம் கொண்டு கதைத்தால், என் மகள் தானே என்னை திட்டுகிறாள் என்று தானே கூறுவார். ஆனால் கணவன் சில சமயங்களில் அப்படி நினைக்கமாட்டார். ஆனால் அவர் தந்தை ஆகிய பின் விட்டுக் கொடுத்து விடுவார்.

இப்பூமியில் பிறந்த பின்னர் அப்பா என்பவர் பாதுகாத்தும் அன்பு செலுத்தியும் வருவார். திருமணத்துக்கு பின்னர் கணவர் அப்பாவின் இடத்தில் இருப்பார். கணவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதனை எமக்கு உணர்த்தியவண்ணம் இருப்பார்.

கடையில் ஒரு பொருளைவாங்கி அதனை கையில் எடுத்து வந்தால், தந்தை மகளிடம் பிடுங்குவார். அப்பா பாரமில்லை என்று சொல்லிப்பாருங்கள். பதிலுக்கு காத்திருக்காமல் அது பிள்ளைக்குப்பாரம் என்று எடுத்து தான் நடப்பார். இதே குணம் கணவனுக்கும் இருப்பதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்.
கடைக்குப்போனால் என்ன வேலைக்குப்போனால் என்ன தந்தைக்கும் கணவனுக்கும் உறவுமுறை மாறினாலும் உணர்வுகள் ஒருமித்து இருப்பதை அவர்கள் செயல்கள் காட்டும்.

பெண்ணின் first love அப்பா. உன்னை முதல் முதலில் புரிந்து கொள்பவர் உன் தந்தை, அதன் பின் வருபவர் உன் கணவர். இரண்டு பேரிலும் யாரின் புரிதல் சிறப்பு என்று கூறமுடியாது.

நல்ல கணவனைப் புரிந்து கொண்ட பெண்ணுக்கு மட்டுமே தெரியும், கணவன் பேசும் போது உள்ள கோபத்தை விட, அவர் பேசாதபோதுது தன் மனைவி மீது கொண்ட பாசம் அதிகம் என்று..!

கணவனுக்கு மனைவி இரண்டாவது தாயாக இருக்கலாம்.. ஆனால் மனைவிக்கு அன்பு கணவன் எப்போதும் முதல் குழந்தைதான்.
ஒரு பெண்ணுக்கு பிறந்தவீடு வீடு ஞாபகம் வாரமல், ஒரு தந்தைபோல் அன்னை போல் தன் மனைவியை பார்க்கும் ஒரு கணவன் வரப்பெற்றால் ஒரு மனைவிக்கு அதனைவிட பெருவரம் ஏது.
திருமணம் அவளுக்கு சொர்க்கமாகும். அந்த சொர்க்கத்திற்கான வழிக்கு வழிகாட்டியாக அவர்களின் பெற்றோரும் இருப்பார்கள்.
திருமணத்துக்கு பின்னர் அப்பா அம்மா இவர்களை மறந்து விடாதே! உன் அறிவும் ஆற்றலும் அழகும் அவர்கள் தந்தது.

–றஜினா.தருமராஜா

1,952 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *