பெர்முடா முக்கோண பகுதியின் மர்மம் என்ன?

வேற்றுலக உயிரியாக இருக்குமோ? பேய்களின் உலகமாக இருக்குமோ? இதனுள்ளே இன்னொரு உலகம் இருக்குமோ? மிகப்பெரிய அளவிலான உயிரினங்கள் உள்ளே இருக்குமோ? அல்லது வேறொரு உலகம் அல்லது பிரபஞ்சத்தின் பிற பகுதிக்குச் செல்வதற்கான குறுக்குப் பாதை இதன் வழியே இருக்குமோ? இப்படி எதுவுமே இல்லையென்றால் இதனுள் சென்ற படகு, கப்பல், விமானங்கள் அனைத்தும் எங்கே மாயமாக மறைந்தன? அடடா… இது என்னடா ஆரம்பத்திலேயே இப்படிக் கேள்விகளுடன் அடுக்கிக்கொண்டு போகின்றேனே, அப்படி எதைத் தான் சொல்கிறேன் என்று யோசிக்கின்றீர்களா? அது வேறொன்றும் இல்லை, பலருக்கு இன்று வரை புரியாத புதிராக இருந்து வரும் “பெர்முடா முக்கோணத்தை” பற்றித்தான் கூறுகின்றேன். அப்படி என்னதானப்பா இந்த பெர்முடா முக்கோணத்தில் இருக்கிறது?
பெர்முடா முக்கோணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? சரி, இந்தக் கேள்வியை அலசி ஆராய்வதற்கு முன்பு, முதலில் இந்த பெர்முடா முக்கோணம் எங்கே இருக்கிறது என்பதைப் பார்ப்போம். இது Florida, Bermuda மற்றும் Puerto Rico ஆகிய மூன்று பகுதிகளுக்கும் பொதுவாக அமைந்துள்ள கடல்பகுதியினைக் குறிக்கும். கடந்த சில நூற்றாண்டுகளாக இந்த கடல்பகுதியின் வழியே செல்லும் படகுகள், கப்பல்கள் காணாமல் போய்விட்டன. கடல்வழியே மட்டுமல்லாமல் வான்வழியாகச் செல்லும் விமானங்களும் காணாமல் போய்விட்டன. இதனால் இந்தப் பகுதிக்கு Devil’s Triangle என்கிற இன்னொரு பெயரும் உண்டு.
இது குறித்த மர்மமான செய்திகள் எப்போது இருந்து ஆரம்பித்தன என்று தெரியுமா? ஊhசளைவழிhநச ஊழடரஅடிரள வாழ்ந்த காலத்திலே கிடைத்து விட்டது. கொலம்பஸ் 08.10.1492 கடற்புறமாகப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். பெர்முடா முக்கோணத்தின் அருகே சென்றபோது அவரின் திசைகாட்டி வித்தியாசமான திசைகளைக் காட்டுவதை இவர் அவதானித்தார்.
அப்படி இந்த பெர்முடா முக்கோணத்தில் என்ன தான் மர்மம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே அமெரிக்கக் கடலோர காவல்படை 1970ம் ஆண்டில் பெர்முடா முக்கோணத்தை நோக்கிச் சென்றது. அவர்கள் அதில் அவதானித்தது என்னவென்றால் பெர்முடா முக்கோணத்தில் திசைகாட்டி சுமார் 20 டிகிரி கோண மாறுபாட்டுடன் தான் திசையைக் காட்டுகிறது. இந்த மாற்றத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு சரியான திசையில் செல்லாமல் இருந்தால், பெரும் விபத்துகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க நவீனக் காலத்தில் நடந்த பல சம்பவங்கள் இந்த இடத்தின் மீதான ஆர்வத்தை மக்களுக்கு அதிகரித்தது. அவற்றில் 05.12.1945 அமெரிக்கக் கடற்படையின் ஐந்து இராணுவ விமானங்கள் காணாமல் போனது ஒன்றாகும். இதைத் தவிர்த்து 30.01.1948 மற்றும் 17.01.1949 பயணிகள் விமானங்களான Star Tiger மற்றும் Star Aerial விமானங்கள் இதே பகுதியில் காணாமல் போனவை. இதில் 135 பேர்கள் என்ன ஆனார்கள் என்கிற தடயமே தெரியாமல் போனது அதிர்ச்சிக்குரிய விஷயம் ஆகும்.
1955ம் ஆண்டில் வெளிவந்த The case for the UFO என்கிற புத்தகத்தின் மூலம் இந்த நிகழ்வுகளுக்கு ஏலியன்கள் அல்லது வேற்றுக்கிரக வாசிகள் ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்கிற கேள்வியைப் புத்தகத்தின் ஆசிரியர் M. K. Jessup மக்கள் மனதில் விதைத்தார். இதைத் தொடர்ந்து பலர் இது தொடர்பான தகவல்களைச் சேகரித்து புத்தகமாகவும், குறும்படங்களாகவும் வெளியிடத் தொடங்கினர். இதனால் 1970ம் ஆண்டிலிருந்து 1985ம் ஆண்டு காலகட்டங்களில் பெர்முடா முக்கோணம் பெரிய அளவில் பேசப்பட்டது. இவை பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் அனைவராலும் பேசப்பட்டதால் பெர்முடா முக்கோணம் தொடர்பான பல கட்டுக்கதைகளும் வெளிவந்தன. அவைதான் இன்று பெரும்பாலானோரை வியக்க வைத்துள்ளன.
ஆனால் பெர்முடா முக்கோணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதற்குக் கடலோர காவல் படை தெளிவாக ஒரு விளக்கத்தைக் கூறியிருக்கிறது. அது என்னவென்றால் கப்பல்கள் மற்றும் விமானங்கள் இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் காணாமல் போவதற்கு அந்தப் பகுதியின் சில விசேஷ பண்புகளே காரணமாக இருக்கின்றன. இந்தப் பகுதியிலுள்ள வளைகுடா நீரோட்டம் மிகவும் கொந்தளிப்புடன் உள்ளது. இதனால் அதனுள் விழும் பொருட்களை, தடையமே இல்லாமல் எளிதாக எதிர்பாராத இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான சக்தி இந்த இயற்கைக்கு உள்ளது.
இதைத் தவிர்த்து கரீபியன் மற்றும் அட்லாண்டிக் கடல்கள் உருவாக்கும் கற்பனையே பண்ண முடியாத புயற்காற்று மிக உயரமான அலைகளையும், பலம் வாய்ந்த சுழல்காற்றையும் உருவாக்கக்கூடியது. இதனால் தான் விமானிகளும், கடல் மாலுமிகளும் பெரும் பிரச்சனைக்குள் மாட்டு படுகின்றார்கள்.
சரி நண்பர்களே, பெர்முடா முக்கோணத்துக்குப் பின்னால் ஒரு பெரிய மர்மம் மட்டும் இல்லை, பல்வேறான கட்டுக்கதைகளும் கூட இருக்கின்றன. அதில் எது உண்மை எது சும்மா கற்பனையில் தோன்றிய கதை என்று கூடத் தெரியாது. இருந்தாலும் உங்களுக்கு இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மமான கேள்விகளுக்கு ஒரு சில அறிவியல் விளக்கங்களைத் தந்திருக்கிறேன் என்று நம்புகிறேன். இனி நீங்கள் கூறுங்கள்? இன்று நான் உங்களுக்குக் கூறிய இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மம் பற்றி நீங்கள் முன்பே அறிந்திருக்கின்றீர்களா? எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh