I Phone 12 Pro Max இல் கலக்கும் LiDAR என்ற கரு ஒளிக் கமரா

சி.சிவவினோபன்

” LiDAR” இதென்னடா புதுசா இருக்கே என்று நினைத்தால். கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுகின்ற இன்னொரு சொல் உங்களிற்குத் தெரியுமா என்று பாருங்கள்!

றேடார் (RaDAR) என்று கேள்விப்பட்டதுண்டா? கப்பல் றேடாறில் (RaDAR) மாட்டுப்பட்டது என்று சொல்லக் கேட்டிருப்போமே! அந்த றேடார் (RaDAR) உடைய இன்னொரு வடிவம் தான் இந்த LiDAR.

RaDAR என்பதன் விரிவாக்கம், Radio Detection And Ranging. அதாவது ராடியோக் கதிர்களை ஒரு டோச் லைட் போல அடிக்க வேண்டும். அந்த ராடியோக் கதிர்கள் எதிரில் உள்ள பொருளில் பட்டுத் தெறித்துத் திரும்பி வரும். அவ்வாறு வரும் கதிர்களின் எண்னிக்கை மற்றும் நேரத்தை கணித்து எமக்கு எதிரில் உள்ள பொருள் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதைக் கணிக்கும் முறையே றேடார் (RaDAR) ஆகும்.

இங்கு LiDARஎன்பதன் விரிவாக்கம், Light Detection And Ranging ஆகும். அதாவது ஒளிக்கதிர்களை டோச் அடிப்பதைப் போல அடித்தால் அந்தக் கதிர்களும் தெறிக்கும் அவ்வாறு தெறிக்கும் கதிர்களையும் நாம் கணிக்க முடியும் அதன் மூலம் இரவிலும் ஒரு பொருளின் தூரம் மற்றும் அதன் ஒளியின் நிறம் என்பவற்றை அதன் செறிவைப் பயன்படுத்திக் கணிக்க முடியும் என்று நான் இரண்டு வருடங்களிற்கு முன் வெற்றிமணியில் ஒரு கட்டுரையில் எழுதி இருந்தேன். அந்தக் கண்டு பிடிப்பின் பெயரைக் கூட கரு ஒளிக் கமெரா என்று பெயரிட்டிருந்தேன். அதுவே இந்த LiDAR தொழிநுட்பம் இப்போது 2020 இல் கைத்தொலைபேசியிலேயே தன் வித்தையைக் காட்டுகிறது.

2,108 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *