கொலஸ்டரோல் சிகிச்சையில் புதிய அணுகு முறைகள்

கொலஸ்டலோல் அளவு இப்ப குறைஞ்சு போட்டுதெண்டு.
குளிசையின் அளவைக் குறைக்கலாமா? நிப்பாட்டலாமா?

“பாருங்கோ டொக்டர் என்ரை கொலஸ்டலோல் அளவு எவ்வளவு குறைஞ்சு போட்டுதெண்டு. ஆனால் குளிசையின் அளவைக் குறைக்கவோ நிப்பாட்டவோ வேண்டாம் என்று ஸ்பெசலிஸ்ட் சொல்லுறார்” ரிப்போட்டை நீட்டியபடி சொன்னார்.
நான் அவரது கேள்விக்கு நேரடி மறுமொழி சொல்லவில்லை. எதிர்க் கேள்வி கேட்டேன்.
“நீங்கள் ஏன் கொலஸ்டரோல் மருந்து பாவிக்கிறனீங்கள்”
ஒன்றும் தெரியாத அடிமடையன் ஒருவனைப் போல என்னைப் பார்த்துக்கொண்டு “வேறை என்னத்துக்கு இரத்தத்திலை கொலஸ்டரோல் அளவைக் குறைக்கத்தான். இப்ப அளவு குறைஞ்சு போட்டுது மருந்தைக் குறைக்கலாம்தானே.” என்றார்.
‘உங்களுக்கு ஹாட் அட்டக் அல்லது பக்கவாதம் எதிர்காலத்தில் வரவேண்டும் என விரும்பினால் மருந்தை நிப்பாட்டுங்கோ’ என்று முகத்தில் அடிக்குமாற்போலச் சொல்லி அவரது மனத்தை நோகடிக்க விரும்பவில்லை.

மாரடைப்பு பக்கவாத பாதிப்புகள்
அவர் எண்ணுவதுபோல வெளிப்படையான காரணம் குருதிக் கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதுதான் என்ற போதும் அடிப்படைக் காரணம் வேறு ஆகும்.

காரணத்தை விளக்கினேன்.
இன்று மனிதர்களை மரண வாயிலில் தள்ளுவதில் முன் நிற்பவை மாரடைப்பும் பக்க வாதமும் ஆகும். இவை இரண்டும் வருவதற்கு முக்கிய காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து அவை அடைபடுவதுதான். இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது கொலஸ்டரோல் அதிகரிப்பதால் ஆகும்.

இருந்தபோதும் மாரடைப்பு பக்கவாதம் ஆகியன வருவதற்கு குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் மட்டும் காரணம் அல்ல.ஒருவரது வயது என்ன என்பது ஒரு முக்கிய காரணமாகும். வயது அதிகரிக்க அதிகரிக்க மேற்கூறிய பாதிப்புகளுக்கான சாத்தியங்கள் அதிகமாகும்.

உலகின் எந்தப பகுதியைச் சார்ந்தவர் என்பது மற்றொரு காரணமாகும். வெள்ளையனா, ஆபிரிக்கனா, ஆசியனா என்பது முக்கியமாகும். இதற்குக் காரணம் உங்களையும் என்னையும் போன்ற ஆசிய நாட்டவர்களுக்கு மாரடைப்பு பக்கவாதம் போன்ற நோய்ப் பாதிப்பு வருவது அதிகமாகும்.
புகைப்பவர்களும் புகைக்காதவர்களை விட இவை வரும் சாத்தியம் மிக அதிகமாகும். இவற்றைத் தவிர நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட அதிகமாகும்.
பாதிப்பு வரக் கூடுமா என்பதை முற்கணித்தல்

மேற்கூறிய காரணிகளை எல்லாம் ஒட்டுமாகக் கணக்கில் எடுத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் மேற்கூறிய பாதிப்புகள் வருவதற்கான சாத்தியம் எவ்வளவு (ASCVD Risk) என்பதை முன்னதாகவே கணக்கெடுக்க முடியும். அதற்கு ஏற்பவே கொலஸ்டரோல் மருந்தைக் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள மருத்துவக் கழகங்கள் பொதுவான பரிந்துரை செய்துள்ளன.

ஆபத்தைக் இலகுவாகக் கணிப்பதற்கான ஒரு கல்கூலேட்டரை உருவாக்கி மருந்துவர்களின் பாவனைக்காக இணையத்தில் கிடைக்க வசதி செய்து தந்துள்ளார்கள். ASCVD Risk calculator என்பதே அது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் குருதியில் கொலஸ்டரோலின் அளவு எவ்வளவாக இருக்கிறது என்பதை விட ஒருவருக்கு மாரடைப்பு பக்கவாதம் மற்றும் காலிலுள்ள குருதிக் கலங்கள் அடைபடாமல் தடுப்பதற்கு மருந்து தேவைப்படுமா என்பதையும் எவ்வளவு மருந்து தேவைப்படும் என்பதையும் கவனத்தில் கொள்கிறார்கள்.

கொலஸ்டரோலுக்கு அதிகம் உபயோகிக்கும் மருந்துகளான ஸ்டரின் வகை மருந்துகள் பற்றிய ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டும். இவை பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பலர் தவறாகக் கருதுவதற்கு மாறாக மிகவும் பாதுகாப்பான மருந்துகளாகும் அவை.
Rosuvastatin , Atrovastatin, Simvastatin போன்ற ஸ்டரின் வகை மருந்துகள் ஒருவரது குருதியில் உள்ள கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதற்காகப் பொதுவாகக் கொடுக்கப்பட்டுகிறது. ஆனால் இந்த மருந்துகள் அதற்கு அப்பாலும் செயற்படுகின்றன. ஆவை குருதிக் குழாயில் ஏற்கனவே படிந்துள்ள கொழுப்பையும் (Atheroma) படிப்படியாகக் கரையச் செய்யக் கூடியவையாகும்.

இதைப் பலர் உணர்ந்து கொள்ளாததாலேயே தாங்களாகவே மருந்தின் அளவைக் குறைப்பது அல்லது நிறுத்துவது போன்ற தவற்றைச் செய்கிறார்கள். ஸ்டரின் வகை மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்து வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு படிப்படியாக் கரைந்து வரும். இதனால் குருதிச் சுற்றோட்டம் சீரடையும்.

“சமுதயா ரீதியில் பார்க்கும்போது லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும். மக்கள் நீண்ட காலத்திற்கு நோயின்றி நலமாக வாழ வைக்க முடியும்”; என மருத்துவ நிபுணர்கள் கருத்துரைக்கிறார்கள்.

யார் யாருக்கு மருந்து தேவை

பலவகைப்பட்டவர்கள் இதன் மூலம் பயனடைய முடியும்.

40 முதல் 75 வயது வந்தவர்களிடையே மேற்படி கல்கூலேட்டவர்கள் மூலம் கணிக்கும் போது அவர்களுக்கு அடுத்த பத்து வருட காலத்திற்குள் பக்கவாதம் மாரடைப்பு போன்றவை வருவற்கான சாத்தியம் 7.5 அல்லது அதற்கு மேல் எனில் மருந்து அவசியமாகும்.
ஏற்கனவே மாரடைப்பு வந்தவர்கள், அதற்கான பைபாஸ் சத்திரசிகிச்சை அல்லது ஸ்டென்ட் வைக்கப்பட்டவர்களுக்கும் அவசியமாகும். அத்துடன் வழமையான நாளாந்த செயற்பாடுகளின் போது இருதயத்திற்கு குருதி செல்வது போதாத நோய்களான stable or unstable angina, transient ischemic attack உள்ளவர்களுக்கும் மிக அவசியமாகும்.

வயது குறைந்தவர்களிலும் நோய் எற்படாமல் தடுப்பதற்கு அவசியமாகும். 21 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் கெட்ட கொலஸ்டரோலான LDL ன் அளவு 190 ற்கு மேற்பட்டால் ளவயவin மருந்து அவசியமாகும் என புதிய வழிகாட்டல் சொல்கிறது. 40 முதல் 75 வயதான நீரிழிவு நோயுள்ள அனைவருக்கும் ளுவயவin மருந்து அவசியம் தேவைப்படும்.

மேற்குறிப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என மருத்துவர்கள் கணிப்பீடு செய்யும் இன்னும் பலருக்கும் இந்த ஸ்டரின் மருந்துகளைக் கொடுக்க வேண்டும் எனச் சிபார்சு செய்கிறார்கள்.

கெட்ட கொலஸ்டரோலான LDL ன் அளவை 50மூ ற்கு அதிகமாகக் குறைக்க வேண்யவர்களுக்கு Rosuvastatin 20- 40mg, Atrovastatin20- 40mg கொடுக்க வேண்டும் எனச் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது. டுனுடு ன் அளவை 30மூ முதல் 50மூ மட்டுமே குறைக்க வேண்யவர்களுக்குRosuvastatin 5- 10mg, Atrovastatin 10- 20mg, Simvastatin 20- 40mg கொடுக்க வேண்டும் எனச் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது. டுனுடு ன் அளவை 30மூ ற்கு மட்டுமே குறைக்க வேண்யவர்களுக்கு Simvastatin 10mg மட்டுமே போதுமானதாகும்.

ஸ்டரின் மருந்துகளை மேற் கூறிய வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஆரம்பித்த பின்னர் மூன்று மாத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை எனக் குருதிப் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப மருந்துகளின் அளவைக் மாற்ற வேண்டியதில்லை. முதலில் கணித்த மருந்தின் அளவைத் தொடர வேண்டும். அவ்வாறு தொடர்வதால்தான் எதிர்கால ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்பதை இங்கு வலியுறுத்தி சொல்ல வேண்டியுள்ளது.

குருதியில் கொலஸ்டரோல் அளவு மிக அதிகமாக இருந்தால் இந்த ஸ்டரின் மருந்துகளுடன் கொலஸ்டரோலைக் குறைக்கும் Fibrates, Niacin போன்ற வேறு பல மருந்துகளையும் மருத்துவர்கள் இதுவரை கொடுத்து வந்துளார்கள். கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதற்காக அவ்வாறு இரண்டாவது மூன்றாவது மருந்துகளை சேர்ப்பதால் பயனில்லை எனப் புதிய வழிகாட்டல் சொல்கிறது.

ஸ்டரின் மருந்துகள் மட்டும் எதிர்கால ஆபத்துகளைத் தடுக்க முடியுமா? நிச்சயமாக இல்லை.
நலமான வாழ்க்கை முறை

எமது வாழ்க்கை முறை சரியானதாக இருக்க வேண்டும். நலவியல் ரீதியாக சிறந்த வாழ்க்கை முறை என்பது என்ன? ரீவி அல்லது கணனி முன் பெருமளவு நேரம் இருந்து கொண்டு நொட்டு நொறுக்குத் தீனிகளை கொறிப்பதையே இன்று பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். முறையான உடல் உழைப்போ ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களோ பெரும்பாலனவர்களிடம் இல்லை.
நார்ப்பொருள் அதிகமுள்ள தானியங்கள் காய்கறிகள் பழவகைகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். கொழுப்பு வகைகள் மற்றும் பொரித்த உணவுகளைக் குறைக்க வேண்டும். மென்பானங்கள் போன்றவற்றையும் அதிகம் பாவிக்கக் கூடாது. தினசரி உடற் பயிற்சி செய்ய வேண்டும். அல்லது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும். எடையை அதிகரிக்க விடக் கூடாது. புகைத்தலைத் தவிர்க்க வேண்டும்.
ஆம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் நோயற்ற நீண்ட வாழ்விற்கான பலமான அத்திவாரமாகும். நன்றி:ஹாய் நலமா

Dr.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Co

1,269 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *