நிகழ்காலக் கல்வியும் நிலைத்தடுமாறும் பெற்றோரும்…
மாலினி மோகன் – கொட்டக்கலை – இலங்கை
சமக்காலாத்தல் கல்வியானது அத்தியாவசியமான தேவையாக ஆளுமையுடன் இணைய வடிவில் உருவெடுத்துள்ளது. தற்கால கற்றலை இணைய ஊடகங்களினூடாகவே முன்னெடுத்துச் செல்கின்ற கல்வியறிவை வழங்கும் செயற்பாடுகள், நவீன வாழ்க்கையின் முக்கிய செயலாகும்.
கற்றலின் தேர்ச்சி குறிப்பிட்ட அம் மாணவனின் விளங்கிக் கொள்ளும் தன்மையிலேயே தங்கியுள்ளது, மனனஞ் செய்வதில் அல்ல.
தேர்ச்சி பெறுபேறானது பெற்றோரின் ஆசையாகவும் பிள்ளையின் கனவாகவும் இருப்பதை விட, கல்வியறிவிற்கு முன்னிடமளிப்பது தான் எக்காலத்திற்கும் தேவையானது. மனனம் செய்வதிலும் உயர் பெறுப்பேறு பெறுவதும் தான் கல்வி, என்பதினை கருவாக கொண்ட பெற்றோர்கள் நிலைத்தடுமாறிப் போய் அறிவும், கல்வியும் வெவ்வேறு என்பதனேயே மறந்துப்போய் “பரீட்சைப் பெறுபேறே வாழ்க்கையின் தீர்மானம்” என அவர்களே தீர்மானித்துள்ளனர்.
பெற்றோரின் நிலைத்தடுமாற்றம் பிள்ளையின் இயல்பான ஆற்றலை முடக்கி தனக்கு இயலாத ஒன்றை வெளிப்படுத்தும் இயந்நதிரமாக செயற்பட்டு, எதைப் எதற்காக படிக்கின்றோம் என்ற கேள்வியை தன்னிடத்தில் தானேக் கேட்டுக்கொள்ளாமல் புத்தகப்பூச்சியாக கல்வியை மனனம் செய்யும் கருத்துப்படிவில் கற்று பெறுப்பேறுகளைப் பெற்று தமது எதிர்கால வாழ்க்கையில், இவ் எண்ணக்கரு தோற்று தமது வாழ்க்கையில் கஷ்ட்டப்படுவர். _”தொழில் இல்லாத கல்வி நீரின்றி வாடும் மரத்தைப் போன்றது”
கல்வியறிவோடு உலகினை பற்றிய அறிவையும் ஏற்றி, விளங்கி, அனுபவப்படலே கற்றலின் அறிவாகும். கற்றலின் மூலம் அறவினையும், அறிவின் மூலம் கற்றலையும் விருத்தி செய்யும் முறை தனது சுற்றுவட்ட வடிவில் பயணிப்பதே அனுபவக்கல்வியாகும், இவ் அனுபவ கல்வியை விளங்கி கற்றலை நாடுபவனே வாழ்க்கையில் வெற்றியடைகின்றான், வெறுமனே அனுபவத்தையும் மனனம் செய்பவன் அல்ல.
விளங்கிக் கொள்வதே கல்வி என பெற்றோர் உணரும் தருனம் நீண்ட தூரத்திலும், தூரமான நோக்குடனும் இருப்பதே தவறு. நவீனமயத்திற்கு உள்ளாகியுள்ள தற்போதய உலகத்தின் தேவையிலுள்ள விருப்பங்கள் கல்வியினுள் பல தேர்வுகளை உள்ளடக்குக்கின்றது. பெற்றோர் பிள்ளைக்கிடையிலான தலைமுறை இடைவெளியின் உறவானது பாம்பு கீரி உறவிற்கு ஒப்பானது. இரு வெவ்வேறு காந்த துருவங்கள் போல் கருத்துக்கள் கொண்ட பெற்றோர்களும் பிள்ளைகளும் கல்வி போர் ஒன்றினை எதிர்நோக்குக்கின்றனர்.
இலங்கையில் மலையக மக்களின் கல்வித்திறன் இப்போதுதான் ஒரு உன்னதமான திசையைநோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. இந்த தாமதத்திற்கு மாணவர்கள் எவ்விதத்திலும் பொறுப்பானவர்கள் அல்ல. பெற்றோர் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி வேலைக்கு அனுப்பியதும்,அரசவழிகாட்டலில் உள்ள உதாசினங்களுமே காரணமாகும். இன்று மலலையக மாணவர்கள் விழித்துக்கொண்டனர்.
இந்நேரத்தில் சமகாலத்தில் பிள்ளையின் தேவையை (விருப்பங்கள் அல்ல) பிள்ளை உணரும் கட்டத்தில் அதனை ஆராய்வு செய்து வழிநடத்துவதே பெற்றோரின் கடமையே தவிர தமது விருப்பத்தினை திணிப்பது அல்ல. “கல்வியே அறிவு” என உணரும் பிள்ளையின் பெறுபேறு, சித்தி. “அறிவே கல்வி” என உணரும் பிள்ளையின் பெறுபேறு, வாழ்க்கை சித்தி!
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
1,154 total views, 6 views today