சக்தி நிறுவனம், திருகோணமலை யேர்மனியில் இருந்து கல்விக்கான ஓர் அறப்பணி

சக்தி அறக்கட்டளையை திரு. திருமதி நிஷாந்தி நவநீதனால் (28.03.2018) ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் தமது தனிப்பட்ட வருமானத்தில் குழந்தைகளுக்கு யேர்மன் அரசாங்கத்தால் கொடுக்கும் பணத்தையும், அவருடைய கணவர் நவநீதன் உதவியுடனும் இவ் அறக்கட்டலையை 3 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றர்கள். இவர்களின் அரும் பணியால் பலனடைந்த மாணவனின் ஓர் கடிதம்.

சக்தி நிறுவனம், திருகோணமலை
அன்புடையீர்
நன்றி தெரிவித்தலும் வேண்டுகோளும்!

மேற்படி கிராமத்தில் வசித்து வரும் தனோஜன் ஆகிய நான் தரும் பணிவான விடயமானது. எனது கிராமமானது ஒரு பின்தங்கிய கிராமம் ஆகும். அனைத்து வசதிகளும் குறைந்த ஒரு கிராமமாகும். போக்குவரத்துப் பிரச்சினை, மின்சார வசதி பூரணமாக இல்லை, நீர்வசதி குறைவு, நிறைவான கல்வியினை பெறுவதற்கான போதியளவு ஆசிரியர்கள் இன்மை.
நான் எனது க.பொ.த. சாதாரணப் பரீட்சை வரையிலான கல்வியினை எனது கிராமத்தில் படித்துள்ளேன். எனது உயர்தரக் கல்வியினை சேனையூர் மத்திய கல்லூரியில் மேற்கொண்டேன். எனது கிராமத்திலிருந்து சேனையூர் மத்திய கல்லூரிக்கு வருவதற்கான தூரம் 10 கிலோ மீற்றர் ஆகும். வரும் பாதை முற்றாக கட்டினால் சூழப்பட்டது. ஆகையால் இதில் பயணம் செய்வது ஆபத்தானது. எனது அப்பா கூலி வேலை செய்து எங்களை பராமரித்து வந்தார். தற்போது அவருக்கு சுகவீனம் காரணமாக எனது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் தான் 2018 ஆம் ஆண்டு சேனையூர் மத்திய கல்லூரியில் தங்கள் சக்தி நிறுவனம் எனது கிராமத்திலிருந்து என்னையும் இன்னும் இரண்டு மாணவர்களையும் ஏனைய மாணவர்களையும் சேர்த்து சேனையூர் மாணவர் விடுதி ஒன்று திறக்கப்பட்டது. அங்கு சக்தி நிறுவனத்தினால் சகல கல்வி வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதனை உரிய முறையில் பயன்படுத்தி பல்கலைக்கழக அனுமதியினை பெறும் அளவிற்கு என்னை வளர்த்துள்ளார்கள். விடுதியில் இருந்து கற்கும் சந்தர்ப்பம் கிடைக்காவிடின் எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்திருக்காது.
அத்தோடு எனது கிராமத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவான முதல் மாணவர் என்ற பெருமை; சக்தி அமைப்பையே சேரும். இந் நிறுவனத்திற்கும் நிதிகளை வழங்கி கொண்டிருக்கும் பிரங்போட் யேர்மனியில் வசிக்கும் திருமதி நிசாந்தி நவநீதன் அவர்களுக்கு, என் குடும்பம் சார்பாக மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றன். அத்தோடு எனக்கும், என்னைப் போன்று வறுமையான மாணவர்களுக்கும், பல்கலைக்கழகப் படிப்பினை மேற்கொள்ள வசதிகளைச் செய்து தருமாறு தங்களைக் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சக்தி நிறுவனத்தின் முலம் உதவிபுரியுமாறு, வெளிநாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்களை கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் சேவை என்றும் தொடர இறைவனை மெய்யன்போடு பிரார்த்திக்கின்றேன்.

நன்றி
சௌ.தனோஜன்
வீரமாநகர்-தோப்பூர்- திருகோணமலை – 2021.04.08

1,263 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *