தமிழ் சினிமா
முதல் பார்வையில் காதல் வரும் என்பதில்
நம்பிக்கை இல்லை!
- ரகுல் பிரீத் சிங்
முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை, அப்படி வந்தால் அது கவர்ச்சிதான் என நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். தமிழில் தடையற தாக்க படத்தில் அறிமுகமாகி புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் முக்கியம். சந்தோஷம் இல்லாமல் பணம், புகழ் இருந்து எந்த பயனும் இல்லை. உண்மையாக இருப்பதுபோல் போலியாக நடிப்பவர்களை எனக்கு பிடிக்காது. எனது எண்ணங்களில் ஆன்மீக தாக்கம் இருக்கும். வெற்றி, தோல்வி இரண்டும் என்னை பாதிக்காது.
காதல், கவர்ச்சி. முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை. அப்படி வந்தால் அது கவர்ச்சிதான். பழகி ஒருவரை ஒருவர் புரிந்து அதன்பிறகு காதலிப்பதுதான் உண்மையானது. எனக்கு இன்னும் காதல் வரவில்லை. ஒருவேளை நான் காதலிக்கும் நபர் மோசம் செய்தால் அவரை விட்டு விடுவேன். கவர்ச்சி என்பது அழகில் இல்லை. அவர்களுக்குள் இருக்கிற தன்னம்பிக்கையில் வரும்.
சர்ச்சையை ஏற்படுத்தப்போகும் ”இனம்”
2013 ஆம் ஆண்டு சந்தோஷ் சிவன் இயக்கத்தில் இனம் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்த படம் ஈழத்தைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். அதன் துணைத்தலைப்பாக வாந அழடி (அதாவது கூட்டம்) என்று தமிழர்களை இழிவு செய்யும் பொருள் கொண்டு குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் படமும் இலங்கை தமிழ் மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து திரையுலகினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து 3 நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. மேலும் படத்தை வெளியிட்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி மன்னிப்புக் கேட்டார்.இந்நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த படம் மீண்டும் இப்போது ஓ.ரி ரி. யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் அமைப்புகளிடம் இருந்து மீண்டும் எதிர்ப்புக்குரல்கள் உருவாகலாம் என சொல்லப்படுகிறது.
அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா
ஈரம் படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அறிவழகன். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக நயன்தாராவுக்கு ஒரு கதை சொல்லி இருந்தார்.இந்நிலையில் இப்போது திடீரென அறிவழகன் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம், நயன்தாரா. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தங்களின் ரவுடி பிக்சர்ஸ் மூலமாகவே தயாரிக்கும் முடிவிலும் இருக்கிறாராம்.
கமலுடன் நடிக்கும் விஜய் சேதுபதி
தேவர் மகன் இரண்டாம் பாகமாக தயாராகும் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் தொடங்கப்படவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் பேசி வந்தனர். இதுகுறித்து விஜய்சேதுபதி கூறும்போது, “விக்ரம் படக்குழு என்னை அணுகியது உண்மைதான். அது வில்லன் கதாபாத்திரம். ஆனால் தேதிகள் ஒதுக்கப்படவில்லை. விக்ரம் படத்தில் ஏதேனும் சிறப்பான விஷயங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதை செய்வதில் அர்த்தம் இல்லை” என்றார். இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,தகவல் வெளியாகி உள்ளது.. இப்போது விஜய்சேதுபதிக்கு சம்பளம் பல கோடி. அது பத்துக் கோடியாகவும் இருக்கலாம்.
1,254 total views, 3 views today