யேர்மனி எங்கும் கொரோனா தளர்ச்சி ஆலயங்கள் தோறும் அரோகரா எழுச்சி!!!
யேர்மனியில் கொரோனா கட்டுப்பாடு தளர்வு!
கம் நகரில் காமாட்சி அம்மன் தேரில் பவனி!
யேர்மனியில் கம் நகரத்தில் காமாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தேர்த்திருவிழா 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை அரச விதிகளுக்கு அமைய பதிவுசெய்து அனுமதிக்கப்பட்ட அடியார்கள் பலர் கலந்து கொண்டனர்.1000 பேருக்கு அரசினால் அனுமதி வழங்கப்பட்டது. மறுநாள் தீர்த்தோற்சவம் ஆலயம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் இடம்பெற்றது.
தேர் தீர்த்தம் என ஆலய பூசைகள் அனைத்தையும் ஆலய ஆதினகர்த்தா சிவஸ்ரீ பாஸ்க்கரகுருக்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. ஐரோப்பாவில் இருந்து வருடாந்த உற்சவத்தில் 20,000 க்கு மேல் கலந்து கொள்ளும் இவ்வாலயம் கொரோனா தொற்று சூழலினால் மட்டுப்படுத்தப்பட்ட மக்களே கலந்து கொண்டனர். இருந்தாலும் கொரோன கால கட்டுப்பாடு யேர்மனியில் தளர்த்தப்பட்டதால் அரோகரா ஒலி மீண்டும் யேர்மனியில் ஒலிக் வழிபிறந்துள்ளது. அடியவர்கள் கலந்து கொண்ட இரதபவனிக் காட்சிகளையும், அதில் சகநாயகன் சக்திவேல் மயநெநn வுஎ மூலம் நேரடி வர்ணனை செய்வதையும் படத்தில் காணலாம். படங்கள்: ஆன்மீகத்தென்றல் த.புவனேந்திரன்,நந்தா போட்டோஸ்,
1,272 total views, 3 views today