‘நோர்வேயின் கூரை’


நோர்வேயில் அமைந்துள்ள (வட ஐரோப்பாவின்) மிக உயரமான மலை: ஒரு பயண அனுபவம்!
-ரூபன் சிவராஜா-நோர்வே

Galdhøpiggen என்பது ஒரு மலையின் பெயர். இது நோர்வேயின் மட்டுமல்ல வட ஐரோப்பாவினதும் மிக உயரமான மலை. கடல் மட்டத்திலிருந்து 2469 மீற்றர் உயரம். இம்மலை உச்சிக்கு ஏறுவதற்கான பயணம் ஒன்றினை ஜூன் இறுதியின் வார இறுதியில் மேற்கொண்டிருந்தோம். இந்த மலையானது தென்-நோர்வேயின் மத்திய பகுதியினை அமைவிடமாகக் கொண்ட துழவரnhநiஅநn பிரதேசத்தில் உள்ளது. ஒஸ்லோவிலிருந்து கிட்டத்தட்ட 400 கி.மீற்றர் தூரம். 5 மணிநேர கார்ப் பயணம். 3500 சதுர கி.மி பரப்பளவைக் கொண்ட துழவரnhநiஅநn, பெருமலைகளாலால் சூழப்பட்ட பிரதேசம். திடகாத்திரமான கற்களையும் கற்பாறைகளையும் பனிப்பாறைகளையும் கொண்ட பரந்த நிலத்தோற்றமுடையது.

மலை உச்சியை நாம் அடைந்தபோது மேகத்திரள் விலக்கிச் சூரியன் தன்முகம் காட்டிய கணங்கள் மிகச் சொற்ப நிமிடங்களே. அந்தச் சில நொடிகளில் உச்சிமலையிலிருந்தபடி வானப் பெருவெளியை, அதன் நீலத்தை, கூர்முனைகளையுடைய மலை உச்சிகளை, பனிபடர்ந்ததும் பனிநீங்கியதுமான மலைத் தொடர்கள், பனிப்பாறைகள் என துழவரnhநiஅநn பிரதேசம் முழுவதையும் ஒரு அகலப்பரப்புக் காட்சியாகக் (Panoramic view) காணக்கிட்டியது. உயர்ந்த கருமை படிந்த அந்த மலை பிரமிடு வடிவத்தில் காட்சியளிக்கிறது.

மலைப் பயணத்திற்கு முதல் நாளே ஒஸ்லோவிலிருந்து சென்று அப்பிரதேசத்திலுள்ள ‘Juvasshytta’ என்ற ஓய்வுவிடுதியில் தங்கினோம். இந்த ஓய்வுவிடுதியின் அமைவிடம் மிக உயரமானது. கடல்மட்டத்திலிருந்து 1850 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒடுக்கமான பாதையெனினும காரில் அங்கு செல்லமுடியும். பாதையின் இருமருங்கிலும் கட்டுகள் ஏதும் இல்லை. மிக அவதானமாகவும் மெதுவாகவும் வாகனத்தைச் செலுத்தவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல, சற்றுத் தடம் தவறினால் பாதையின் இரு மருங்கும் பெரும் பள்ளத்தாக்குகள். மரங்களற்ற பெருவெளியில், மலைகளுக்கு நடுவில் இவ்விடுதி அமைந்துள்ளது. புயடாøpபைபநn செல்பவர்ளில் பெரும்பாலானவர்கள், குறிப்பாக தூர இடங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் செல்வோர் இவ்விடுதியில் தங்கியே மலைக்கான நடைபயணத்தினை மேற்கொள்கின்றனர்.

இவ்விடுதியிலிருந்து ‘நோர்வேயின் கூரை’ என்றும் அழைக்கப்படுகின்ற Galhøpiggen மலையின் உயரம் கிட்டத்தட்ட 600 மீற்றர்கள் மட்டுமே. ஆயினும் இந்த 600 மீற்றர் உயரத்தை அடைவதற்கான நடைபயணம் 6 கிலோ மீற்றர் தூரத்தினைக் கொண்டுள்ளது. சென்றுதிரும்புவதற்கான மொத்தத் தூரம் 12 கிலோ மீற்றர். உச்சிக்குச் சென்று திரும்புவதற்கு மொத்தமாகத் தேவையான நேரம் 6 – 7 மணித்தியாலங்கள். முழுமையான ஒரு பகற்பொழுதைக் கோருகின்ற பயணம் இது.

முதலில் கற்பாறைகள் நிறைந்த பரந்த வெளியில் கிட்டத்தட்ட இரண்டு கி.மி தூரமும் – இரண்டாவது கட்டமாக பனிப்பாறைகளின் ஊடான 3 கி.மீ தூரமும் – பாறைகள், மலைகளின் ஊடான ஒரு கி.மீ தூரம் இறுதியும் மூன்றாவதுமான பயணப் படிநிலைகளாகும். இறுதிப்பகுதி கிட்டத்தட்ட 70 பாகை மேல்நோக்கிய சாய்வுக் கோணத்தில் ஏறவேண்டும். இரண்டாவதும் மூன்றாவதுமான கட்டங்கள் மிகச் சவாலானவை.

இப் பயணம் அனுபவமும் பயிற்சியுமுடைய மலையேற்ற வழிகாட்டிகளால் குழுநிலையில் நெறிப்படுத்தப்படுகின்றன. நாம் சென்ற குழுவில் கிட்டத்தட்ட 150 பேர் இடம்பெற்றிருந்தனர். இத்தனை பேரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையிலேயே பெருமளவு தூரமும் நடக்க வேண்டும். பரந்தவெளியாயினும் பெரும்பாலும் ஒற்றையடிப் பாதையிலேயே நடக்க முடியும். பயணவழியின் தன்மை அத்தகையது. கற்களும், பாறைகளும், பனியும் பனிப்பாறையுமான அந்தப் பயணவழியில் காலடிகளைக் கவனமாகவும் குறித்த சமநிலையுடைய வேகத்திலும் எடுத்துவைக்க வேண்டும்.

மலைப்பயணத்திற்கும் காலநிலைக்குமுரிய உடைகள், சப்பாத்துகள், போதியளவு தண்ணீர் மற்றும் உணவு முக்கியமாக எடுத்துச் செல்லவேண்டும.; மலை உச்சியில் நின்ற போதும் தான் குளிராடைகளின் தேவையை அதிகம் உணர முடியும். இரண்டாவது கட்டமான பனிப்பாறை மேல் நடக்கும் போது, அனைவரும் கயிற்றினால் ஒருவருடன் ஒருவர் பிணைக்கப்பட்ட நிலையில் நடக்க வேண்டும். இது ஒரு முக்கிய பாதுகாப்பு ஏற்பாடு. மேற்பகுதியில் உதிர்பனி பரந்திக்கின்றபோதும் அதன் கீழ் உறைபனி படிந்துள்ளது. உறைபனிப் பரப்பில் நடக்கும் போது வெடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. உதிர்பனிக்குக் கீழ் மறைந்துள்ள பனிப்பாறைகளில் கண்ணுக்குத் தெரியாத வெடிப்புகள் இருக்கக்கூடும் எனவும்வழிகாட்டிகள் கூறினர்.

வெடிப்பு ஏற்படுமாயின் பெரும் ஆழத்திற்குள் விழுகின்ற ஆபத்து உள்ளது. அவ்வாறான விபத்துகள் நடந்து யாரேனும் பாறைவெடிப்பினூடு கீழே விழநேர்ந்தால் அவரை அல்லது அவர்களை ஏனையவர்கள் கூட்டுப்பலத்துடன் வெளியில் தூக்கி எடுப்பதற்கானதே கயிற்றினால் அனைவரும் பிணைக்கப்படுவதற்கான முதன்மைக்காரணம். பனிப்பாறைகள் எந்நேரமும் அசைந்துகொண்டிருப்பவை எனப்படுகிறது. வெடிப்புகள் விரிவடைவதும் சுருங்குவதுமாக காலநிலைக்கேற்ப மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்.

பனிக்காலங்களில் மலையேற்றப் பயணங்கள் நிகழ்வதில்லை. பனிப்பொழிவு இல்லாத, ஜூன் ஆரம்பத்திலிருந்து செப்ரெம்பர் நடுப்பகுதி வரையான 4 மாதங்கள் மட்டுமே மலை உச்சிக்கான பயணங்கள் நடைபெறுகின்றன. ஆயினும் கற்பாறைகள் மற்றும் திடமான நிலப்பரப்புகள் தவிர்ந்த இப்பிரதேசத்தின் பல பகுதிகளில் கோடை முழுவதும் பனி கரையாமல் இருக்கின்றது. பனிப்பாறைகளும் உள்ளன. ஆண்டு முழுவதும் பனிச்சறுக்கல் பயிற்சிகள், விளையாட்டுகள் இடம்பெறக்கூடிய தனி இடங்கள் அங்கு உள்ளன.

பனிப்பறை மீது நடப்பது கிட்டத்தட்ட ஒரு மணிநேரப் பயணம். அதற்கு முன்னரான பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய தகவல் வழங்கல் மற்றும் கயிற்றில் அனைவரையும் பிணைக்கும் செயற்பாட்டுக்கு கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகியிருந்தது. பனிப்பாறை மீது நடக்கும்போது நினைத்த நேரம் இளைப்பாற முடியாது. அனைவரும் ஒரே வேகத்தையும் கயிற்றில் ஒரே அளவு இடைவெளியைப் பேணியபடியும் நடக்கவேண்டும். நடைபாதைகூட ஒற்றையடிப் பாதைதான். ஒற்றையடிப்பாதையிலிருந்து விலகிக் காலடிகளை வைக்கும் போது பனிச்சேற்றுக்குள் கால்கள் புதைந்து விடும்.

இறுதிப்பகுதி கத்தியின் கூரினையொத்த முனைகளைக் கொண்ட பாறைகளும் கற்களினாலுமானது. நீளமான காலடிகளை வைத்து ஏறவேண்டும். தருணங்களில் தொடர்ச்சியாக பாறைகளின் விளிம்புகளில் கைகளை ஊன்றி ஏறவேண்டும். இத்தனை மணிநேரக் கடினமான நடைபயணம் என்றாலும் மலை உச்சியை அடைந்தவுடன் பட்ட பாடுகள் மறைந்து புத்துணர்வு கிட்டிவிடுகிறது. இதுவே இந்தப்பயணத்தின் உளரீதியான அடைவு. ஆண்டுதோறும் சராசரியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 25,000 பேர் வரை மலை உச்சிக்குப் பயணம் மேற்கொள்கின்றனர் எனத் தரவுகள் கூறுகின்றன.

1,605 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *