இடியாப்ப பரம்பரையை எதிர்த்து தன் ஆட்டத்தை ஆடிய நடிகர் ஆர்யாவுடன் ஒரு சந்திப்பு…

ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம்.படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் கதையில் கபிலனாக இடியாப்ப பரம்பரையை எதிர்த்து தன் ஆட்டத்தை ஆடிய நடிகர் ஆர்யாவுடன் ஒரு சந்திப்பு…
‘சார்பட்டா’வில் நடிக்க வேண்டும் என நீங்கள்தான் இயக்குநர் ரஞ்சித்தை துரத்தி பிடித்தீர்கள் என கேள்விப் பட்டோம். அவருடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
இப்படி ஒரு ‘ படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் என தோன்றியது. அதனால்தான் அவரை நான் துரத்திப் பிடித்தேன். அவர் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து செய்வார். இந்த படத்தில் கதைக்காக ஒவ்வொருவரின் தோற்றம் மட்டுமில்லாமல், கதாப்பாத்திரம் வழியாகவும் கதையின் காலத்தை குறிப்பிடும்படியாக அமைத்தது சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் அமைந்தது.
சார்பட்டா பரம்பரையின் வாத்தியாராக பசுபதி நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கும் உங்களுக்கும் இடையிலான அந்த பிணைப்பு குறித்து சொல்லுங்கள்?
ரங்கன் வாத்தியாராக பசுபதி கதாப்பாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. சார்பட்டா பரம்பரைக்கே அவர்தான் வாத்தியார். அந்த கதையில் நிறைய விஷயங்கள் அவரை சுற்றி நடக்கும். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நாங்கள் எல்லோரும் கற்றுக் கொண்டோம்.
நான் கடவுள்’ போல உங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய படங்கள் செய்திருந்தாலும், அந்த முயற்சிகள் கவனிக்கப்படாமல் போக நிஜத்தில் உங்களுடைய ஜாலியான குணாதிசியமும் ஒரு காரணமா ?
நாம் படங்கள் நடிக்கிறோம். சில சமயங்களில் அந்த முயற்சிகள் கவனிக்கப்படாமல் போகின்றன. அதில் நிறைய விஷயங்கள், எண்ணங்கள் உள்ளே இருக்கலாம். அதனால், கூட அது மக்களிடம் போய் சேராமல் இருக்கும். ஆனால், படங்களில் சீரியஸான விஷயங்களை நிச்சயம் நாம் முயற்சி செய்ய வேண்டும். அடுத்த படங்கள்? “‘அரண்மனை 3’, ‘எனிமி’ என அடுத்து இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன.