இசையாம்பவான்களுக்கு யேர்மனியில் உணர்ச்சிபூர்வமான. இசையஞ்சலி!
“இசைவாரிதி” அமரர்.வர்ணராமேஸ்வரன் மற்றும் “
மிருதங்க கலாவித்தகர்” அமரர்.சதா.வேல்மாறன்.
கடந்த 17.10.21( ஞாயிற்றுக்கிழமை) யேர்மனி டோட்மூண்ட் தமிழர் அரங்க மண்டபத்தில் இசையஞ்சலி நிகழ்வு பி.ப 4.15 மணிக்கு ஆரம்பமானது. “இசைவாரிதி” அமரர்.வர்ணராமேஸ்வரன் மற்றும் ” மிருதங்க கலாவித்தகர்” அமரர். சதா. வேல்மாறன் ஆகியோரை நினைவுகூர்த்து பொதுச்சுடர் ஏற்றல் வைப்பவத்துடன், தேவாரம்,அகவணக்கம் தொடர்ந்து மங்கள இசை நாத சமர்ப்பணம் நடைபெற்றது. வருகைதந்த அனைவரும் மலர்அஞ்சலியுடன், திருச்சுடர் ஏற்றி வணக்கம் செய்தனர். தொடர்ந்து யேர்மன் வாழ் சங்கீத ஆசிரியர்களின் இசைச்சமர்பண நிகழ்வுகள்,எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஆகியோரது அஞ்சலி உரைகளும், இளையோர்களின் பாடல்களும இடம் பெற்றது.
இலங்கையில் இருந்து திரைவிம்பத்தில் யாழ்ப்பாண தமிழ்ச்சங்க தலைவர், “செந்தமிழ்சொல்லருவி” சந்திரமௌலீசன் லலீசன், நுண்கலைப்பீட ஓய்வுநிலை பேராசிரியர் மு.நவரட்னம், நல்லூர் திருஞானசம்மந்த ஆதீன குருமணி. சோமசுந்தரதேசிக ஞானசம்மந்த பரமாச்சார்ய சுவாமிகள், மற்றும் ஐரோப்பிய வாழ் ஓய்வுநிலை சங்கீத ஆசிரியர்கள், ஆகியோரின் உரைகளும் கனத்த இதயத்துடன் நடைபெற்றது. நிகழ்வினை சிறப்புற திரு.சி.சக்திவேல் அவர்கள் தொகுத்துவழங்கினார். மிகுந்த உணர்வோடு சிறப்பாக அஞ்சலி நிகழ்வினை ஒழுங்கமைத்த அன்பர்களுக்கு நன்றிகள். படப்பிடிப்பு சுவெற்ரா தினேஷ். செய்தி:கி.த.குகதாசன்(கவிமாமணி)
1,037 total views, 6 views today