எங்கு பார்த்தாலும் மின்காந்த அலைகள்!!!

Dr.நிரோஷன்.தில்லைநாதன்.யேர்மனி
நம்மைச் சுற்றி எவ்வளவோ நடைபெறுகின்றது. சில விஷயங்கள் நமது கண்களுக்குத் தெரிந்தும் நமது வாழ்க்கைக்கு உபயோகமானவை இல்லை, ஆனால் வேறு சில விஷயங்கள் நமது கண்களுக்குத் தெரியாமலே நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றன. அப்படி ஒன்றானது தான் நடநஉவசழnஅயபநெவiஉ றயஎநள என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்காந்த அலைகளும் கூட. இந்த மின்காந்த அலைகள் நம்மைச் சுற்றி எப்போதுமே இருக்கின்றன. உண்மை சொல்லப் போனால், இந்த அலைகள் இல்லாமல் நமது இன்றைய நவீன உலகமும், வாழ்க்கையும் இருக்க முடியாது. இவ்வாறு முக்கிய இந்த அலைகள் பற்றி சில சுவாரசியமான விஷயங்களை அறியப் போகின்றீர்களா?
வானொலிப்பெட்டி, செல்லிடத் தொலைபேசி (Mobile Phone) றுiகுi, புவியிடங்காட்டி (GPS Navigation) போன்ற பலவற்றை இந்த மின்காந்த அலைகள் இல்லாமல் செயல்படாது. இந்த மின்காந்த அலைகளின் றயஎநடநபெவா என்று கூறப்படும் அலைநீளம் பொறுத்து, இவை வெவ்வேறு வகையாகப் பிரிக்கப் படுகின்றன. அந்த வகைகளில் ஒன்று தான் ஒளி (டiபாவ). ஒளியைத் தவிர்த்து மேலும் வானொலி அலைகள் (radio waves), நுண்ணலைகள் (micro waves), அகச்சிவப்புக் கதிர்கள் (infrared waves) புற ஊதா கதிர்கள் (ultraviolet waves) ஊடு கதிர் அலைகள் (x-ray) மேலும் காம்மா அலைகள் (gamma waves) என்கிற வகைகள் காணப் படுகின்றன. நமது நவீன உலகில் இந்த அனைத்து வகையான மின்காந்த அலைகளும் ஒவ்வொரு விதமாக உபயோகிக்கப்படுகின்றன. இதற்கு சில உதாரணங்களைத் தருகிறேன்.
வானொலி அலைகள் இருப்பதால் தான் வானொலிப் பெட்டியில் தினமும் பாடல்களைக் கேட்க முடிகின்றது. நுண்ணலைகளின் உதவியுடன் செல்லிடத் தொலைபேசியூடாக தூரத்தில் இருக்கும் நண்பனுடன் பேச முடிகின்றது. அகச்சிவப்புக் கதிர்கள் இருப்பதால் தொலைக் கட்டுப்படுத்தியின் (remote control) உதவியுடன் தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல்களை மாற்ற முடிகின்றது. புற ஊதா கதிர்கள் மருத்துவத்தில் சில பாக்டீரியாக்களைக் கொல்ல உபயோகிக்கப் படுகின்றது. ஊடு கதிர் அலைகள் உங்களுக்கு நன்றாகவே தெரியும். டாக்டரிடம் சென்று எக்ஸ் ரேய் (x-ray) படம் எடுப்பதற்கு ஊடு கதிர் அலைகள் தேவைப்படுகின்றன. மற்றும் காம்மா அலைகளும் மருத்துவத்தில் சில விதமான புற்றுநோயைக் குணப்படுத்த உதவுகின்றது.
மின்காந்த அலைகளில் உள்ள விசேஷம் என்ன தெரியுமா? இந்த அலைகள் ஒரு பொருளில் படும் போது, அதன் அலைநீளம் பொறுத்து ஏற்படும் விளைவு மூன்று விதமாக இருக்கக் கூடும். ஒன்று அந்த அலை அந்தப் பொருளில் பட்டுத் தெறிக்கின்றது, இல்லை என்றால் அந்தப் பொருளை ஊடுருவிச் செல்கின்றது அல்லது அவ்வலை உறிஞ்சி எடுக்கப் படுகின்றது. இந்தக் காரணத்தால் தான் உதாரணத்திற்கு ஒளி ஒரு வீட்டுச் சுவரில் பட்டுத் தெறிக்கின்றது, ஆனால் வானொலி அலைகள் அந்தச் சுவரை ஊடுருவிச் செல்கின்றன. அப்படி ஊடுருவிச் செல்வதால் தான் வீட்டுக் கதவும், ஜன்னல்களும் மூடி இருந்தும், நம்மால் வானொலிப் பெட்டியில் பாடல்களைக் கேட்க முடிகின்றது. மேலும் இதே காரணத்தால் தான் நாம் வீட்டில் ஒரு அறைக்குள் இருந்தும் செல்லிடத் தொலைபேசியில் பேச முடிகின்றது.
சரி, கடைசியாக மின்காந்த அலைகள் பற்றி இன்னும் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றைக் கூறுகின்றேன். 100 வருடங்களுக்கு முன்பு வானொலிப் பெட்டி கண்டுபிடித்து உபயோகித்த போது அனுப்பப் பட்ட வானொலி அலைகள் இன்று கூட விண்வெளியில் பறந்து செல்கின்றன. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா, நண்பர்களே? விண்வெளியில் ஏதாவது வேற்றுலக உயிரிகள் (யடநைளெ) உள்ளன என்று எடுத்துக்கொள்வோம். அந்த உயிரிகள் நமது பூமியிலிருந்து அனுப்பப்பட்ட அந்த வானொலி அலைகளை தமது வானொலிப் பெட்டியில் பெற்றுக்கொண்டால், அதில் 100 வருடங்களுக்கு முன்பு புவியில் ஒலித்த பாடலை தான் கேட்பார்கள்.
நண்பர்களே, நமது கண்களுக்குத் தெரியாத இந்த மின்காந்த அலைகள் நமது நவீன வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பார்க்க ஆச்சரியமாகவும், சுவாரசியமாகவும் இல்லையா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இதற்குரிய பதிலை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்!