நிறை ஓதம் நீர் நின்று !
நிறை ஓதம் நீர் நின்று !
கடை வானில் முயங்கும் பரிதியை தினம் தழுவும் நிரதி போல்இ என் எண்ணத்தழுவல்கள் எல்லாம் தினம் அல்ல கணமும் பாரதியிடம் சொக்கி நிற்கின்றன.
“தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
தமிழின் சொல்வளமும்இ உவமை அழகும்இ எதுகையும் மோனையும் ரசமும் சுவையும் கொஞ்சி விளையாடும் லகர ழகரமும் இ இதழொட்டும் நளினச் சொற்களும் கொண்டு காதலும் கனிவும் இனிமையும் இன்பமும் ததும்பும் நம் தமிழ் மதுரம் மதுரம் மதுரம்.
தமிழ் மழையில் முழுவதும் தோய்ந்து இயல் சுவை அறிந்த இசையில் ஊறித் திளைத்து நாட்டியத்தால் உய்வுற்றுப் பெறும் உவகையால் அபிநயக்ஷேத்திராவின் அண்மைக்கால ஆக்கங்கள் நெஞ்சள்ளும் மாமருந்தாய் எம்மை ஆரத் தழுவுகின்றன. அபிநயக்ஷேத்திராவின் அரங்கேற்ற நிகழ்வுகளில் கிடைக்கும் அனுபவமும்இ ஆய்வும்இ ஆனந்தமும் அதிகரித்துக் கொண்டே செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
நாட்டிய சம்பிரதாய அரங்கேற்ற கச்சேரி மார்க்கத்தின் முக்கியத்துவத்தையும்இ மரபினையும்இ உன்னதத்தையும் நன்கு அறிவோம். புஷ்பஞ்சாலி முதலாக தில்லானா வரை நேர்த்தியாக அமைக்கப்பட்ட மார்க்க உருப்படிகளில் காலாகாலமாக மாற்றங்கள் ஏற்பட்டும் வருகின்றன.
“ஞால வெளியினிலே” என்ற பாரதி மார்க்கத்தை 2019 இல் அரங்கேற்றும் போது கிடைத்த வரவேற்பும்இ பாராட்டும்இ சான்றோர்கள் பலர் எழுதிய விமர்சன கட்டுரைகளும்இ இந்திய கலைஞர்கள் பலராலும் இன்று வரை பேசப்படும் மார்கமாக அமைந்ததும்இ அதுபோல மற்றுமொரு மரபு மாறாத புதிய மார்க்கத்தை அமைக்க உந்துதல் தந்தது.
அதன் விளைவால் வடிவுருவானது ஐம்பெருங் காப்பிய மார்க்கம்.
” நிறை ஓதம் நீர் நின்று “
முத்தமிழ் செறிந்த காப்பியமாக போற்றப்படும் சிலப்பதிகாரத்தினை மையப்படுத்தி பல்வேறான நாட்டிய ஆய்வுகளும்இ அரங்க நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது போற்றுதற்குரியது. புகப் புகப் பேரொளி காட்டவல்ல காப்பியங்களுள் தமிழ் தந்த பெரும் பரிசு ஐம்பெருங் காப்பியங்கள்.
சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்
நந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா
வளையா பதி தருவான் வாசகனுக்கு ஈந்தான்
திளையாத குண்டலகேசிக்கும்
என கந்தப்ப தேசிகர் குறிப்பிட்டதற்கிணங்க சீவக சிந்தாமணி காலத்தால் முந்தியது என்ற கருத்துக்கும் வரலாம்.
நிறை ஓதம் நீர் நின்று நீள் தவமே செய்யினும் வாழி நீலம்
அறையோ அரிவை வரி நெடுங்கண்…..
என சீவக சிந்தாமணியில்இசீவகன்இ தன் மனைவியரில் ஒருத்தியான இலக்கணையைப் புகழ்ந்து வர்ணிக்கும் அற்புதமான வரிகள் எம் உள்ளத்தைக் கவரஇ உருப்பெற்ற ஐம்பெருங் காப்பிய மார்க்கத்திற்கு ” நிறை ஓதம் நீர் நின்று என்று தலைப்பிட்டோம்.
ஆமாம். இந்தப் பெருங் காப்பியங்கள் ஓதம் தான்இ பெருங் கடல் தான். அதுவும் சாதாரண கடல் அல்ல நிறைவான கடல். ” நிறை ” என்ற ஒற்றை சொல் தரும் ஆழம் தமிழின் சிறப்பின் உச்சம்.
இக்கடலுக்கு முன் எம்மை நாம் ஒப்படைத்து நின்றால் போதும்இ இவ்வாழ்வின் வெளிச்சம் காட்டும்இ விசாலம் காட்டும்இ எல்லையற்ற பெரும் தன்மை காட்டும்இ ஆஹா அத்வைதம் காட்டும்.
மார்க்க உருப்படியின் ஆரம்ப நிகழ்வான புஷ்பாஞ்சலி தமிழ் வணக்கமாக அமையப்பெற்றது. காப்பியங்கள் யாவுமே நாயகன்- நாயகி பாத்திரங்களோடு பிணைவதால் ஆணும்-பெண்ணுமாக இரு மாணவர்கள் இப்படிப்பினூடாக அரங்கேறுகிறார்கள். இருவர் இணைந்து ஆடல் வடிவம் தருவதால் துவி ராகம் துவி நடையில் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து சீவகன் கவுத்துவத்தினூடாக சீவக சிந்தாமணியின் சாரம் கவி வரிகளுக்குள் பொதித்து சொற் கட்டுகளின் சேர்க்கையுடன் வழங்கப்பட்டது. இது காந்தாமணி ராகத்தில் அமைந்தது.
மார்க்கத்தின் நடுநாயகமாக விளங்கும் வர்ணம் என்னும் உருப்படி நாடகத் தமிழின் நல்லிசைக் காப்பியமான இளங்கோ எழுதிய இயற்றமிழ் ஓவியமாம் சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்டது.
” இலங்கு பெரும் புகழ் தமிழ் காவியம் இன்ப சொல் ஓவியம் ” என பல்லவி ஆரம்பிக்கஇ கோவலன் – கண்ணகி இ கோவலன்- மாதவி என பெண்ணெனும் பெருந் தெய்வமாய் விளங்கும் காப்பிய நாயகிகள் இருவரையும் அனுபல்லவி சித்தரிக்கிறது.
” தேரா மன்னா செப்புவதுடையேன்” என வழக்குரை காதை சிட்டைஸ்வர சாகித்யத்தில் தத்ரூபமாக வெளிக்கொணரப்பட்டது.
வர்ணத்தின் பிற்பகுதியில் சிலம்பு சொல்லும் செய்தியென ஒவ்வொன்றாக சிட்டைசெய்யப்பட்டு 4 ஸ்வர சாகித்தியத்துள் அடக்கப்பட்டது. இராகமாலிகையாக அமைந்த வர்ணத்தில் 4 ஜதிகள் சேர்க்கப்பட்டன.
இதில் குறிப்பாக மாதவியை சித்தரிக்க முன்னதாக வரும் ஜதி மிகுந்த நுட்பமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மாதவி பதினொரு வகை ஆடலை ஆடியதால் ஜதி கணக்கு முழுவதும் பதினொரு அட்சரமாக அமைந்துள்ளது . மாதவியின் ஆடலுக்கு பிரயோகிக்கப்பட்ட சொற்கட்டுகளை ஆய்ந்து அதனை மட்டுமே உபயோகித்து இந்த ஜதி ஆக்கப்பட்டுள்ளது. ஆகையால் பழம்பெரும் கூத்தின் தொனியை காட்டி நிற்கிறது. அதே போல இந்த ஜதிக்கு சேர்க்கப்பட்ட அசைவுகளும் மாதிவியின் ஆடலில் இருந்த அசைவுகளை ஆய்ந்து கோர்க்கப்பட்டுள்ளது.
இந்த வர்ணத்தில் உள்ள அனைத்து ஜதிகளுமே கதி பேதம் உள்ள கடினமான ஜதிகளாகவே அமைக்கப்பட்டு சிலப்பதிகாரத்தில் உள்ள ஆடலின் மகிமையை மறை பொருளாக தாங்கி நிக்கிறது.
தெய்வம் உண்டென்று தெரிந்திட வேண்டும். தேர்ந்த சான்றோரை துணைகொள்ள வேண்டும். தவம் செய்ய வேண்டும் . தானம் செய்ய வேண்டும். பிறருக்கு துன்பம் தரும் காரியங்களை விட்டொழிக்க வேண்டும். பொய் சொல்லப் பயப்பட வேண்டும். புறங் கூறக் கூடாதுஇஊன்இ உணவு உட்கொள்வதைஇ விலங்குகள் உயிர்க் கொலை செய்வதை கைவிட வேண்டும்..இ தீயோர் நட்பு வேண்டாம்இ வாய்மையே வெல்லும்இ அறநூலோர் இஅறிவுடையோர் கூட்டத்தை விட்டகலாது நெருங்கியிருங்கள்இ மாற்றான் மனை விரும்ப நினையாதிருங்கள். துன்பப்படும் உயிர்களுக்குத் தொண்டு செய்து உதவுங்கள். கள்இ திருட்டுஇ காமம்இபொய் இபயனில சொல்வதை விட்டொழியுங்கள். அனைத்துக்கும் மேலாய் நிலையில்லாத பொருட்கள் மீது பற்றுக் கொள்வதில் பயனில்லை. அறநெறி பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும். பத்தினி பெண்டிரை உலகமே போற்றும் என சிலம்பு சொல்லும் செய்தியாக மேற்சொன்ன விடயங்களை தாங்கி நிற்கிறது இவ்வர்ணம். தொல்லுதமிழ் தந்த திரவியத்தை நல்லியல் நாட்டியத்தில் கலந்திடச் செய்த ஐம்பெருங்காப்பிய மார்க்கத்தின் இரண்டாம் பகுதியை அடுத்த இதழில் எழுத முயல்கிறேன்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல்இ இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை
ஊமைகளாய் செவிடர்களாய் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒரு சொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
737 total views, 3 views today