நாட்டிய அரங்கேற்றம்
யேர்மனியில் கடந்த 15.09.2018 சனிக்கிழமை செல்வி அபிரா தயாபரனது பரதநாட்டிய அரங்கேற்றம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இவர் கிறிபீல்ட் ஆடற்கலாலய அதிபர் ஆடற்கலைமணி திருமதி ரஜினி சத்தியகுமார், நாட்டியக் கலாவித்தகர் செல்வன் நிமலன் சத்தியகுமார் அகியோரது மாணவியும் திரு.திருமதி தயாபரன் ஆகியோரது அன்புப் புதல்வியுமாவார்;.
சுவெற்றா கனகதுர்கை ஆலயக் குருக்கள் செல்வன் சங்கர் சர்மா அவர்களின் பூஜையுடன் அரங்கேற்றம் ஆரம்பமானது. பிரதம விருந்தினராக தாயகத்தில் இருந்து, கொக்குவில் கலாபவனம் நடனப்பள்ளி அதிபரும் பிரபல நடன ஆசிரியையுமாகிய கலைச்செல்வன் அமரர் ஏரம்பு சுப்பையா அவர்களின் மகளும் மாணவியுமான கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அவர் தனதுரையில்; யேர்மனியில் வாழும் தமிழ்மக்கள் மொழியும் கலையும் இரு கண்கள் எனப் போற்றி வளர்ப்பது கண்டு பூரிப்படைந்தேன் என்றார். தனது மாணவியான திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்கள் தான் கற்றகலையை ஜ்Pவநதியாக யேர்மனியில் பாயவும் வழிசமைத்துள்ளார். அது மட்டுமன்றி, நதி வற்றாது பாய மாணவர்களையும் உருவாக்கியுள்ளார். இந்த வகையில் அவரது மாணவனும் புதல்வனுமாகிய செல்வன் நிமலன் சத்தியகுமார் அவர்கள் பரதக்கலையின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கின்றார் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாhர்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் பக்கவாத்தியக்கலைஞர்கள் தாளம் பாவம் உணர்ந்து பாடுவதாகவும். அரகேற்ற நாயகி அற்புதமாக பாவங்களை வெளிப்படுத்துவதாகவும். நடனத்துக்குரிய ஆடைகள் அணிகலன்கள் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்து. இசையை இரசிப்பவர்களுக்கு இசையும் பரதத்தை இரசிப்பவர்களுக்கு பரதமும் அலங்காரத்தை இரசிப்பவர்களுக்கு அலங்காரமும் என ஒன்றை ஒன்று விஞ்சும்வண்ணம் அமைந்து யாரையும் மகிழ்சியில் மூழ்கடித்துவிட்டது, என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த வெற்றிமணி, சிவத்தமிழ் பிரதம ஆசிரியர்மு.க.சு.சிவகுமாரன் அவர்கள். யேர்மனியில் கலை வளர்த்தவர் களுக்கும் தமிழ் வளர்த்தவர்களுக்கும் தலைவணங்கி தன் உரையை ஆரம்பித்தார்.
மதுரக்குரலோன் கண்ணனும் அவர் புதல்வி அனுஷா கண்ணனும் இணைந்து பாடிய கண்ணன் பாட்டில் தன்னை மறந்து ஆடிய செல்வி அபிரா, பாடலின் இறுதியில் அலாக்காகத் திரும்பி ஒரு பார்வையில் யாவரையும் வீழ்த்தி, பின் திரும்பாது மிடுக்காகக்க சென்ற காட்சி அபிரா தயாபரனது ஆற்றலுக்கும் ஆசிரியர் செல்வன் நிமலனது பயிற்றுவிக்கும் பாணிக்கும் கிடைத்த பெரும் அங்கீகாரமாக அமைந்தது.
மேடையில் இருந்த அந்தனை கலைஞர்களும் நம் கண்முன்னே வளர்ந்த பெரும் கலைஞர்கள்.
அவர்கள் வளர்ச்சியை அருகில் இருந்து பாரர்க்க கிடைத்தது வாழ்வில் தனக்கு கிடைத்த பெரும்பாக்கியம் என்றார். சிறப்புற அரங்கேற்றம் கண்ட நாயகி அபிரா தயாபரன் அவர்களுக்குவெற்றிமணி சார்பாக வளர்கலை விருதினை வழங்கிக் கௌரவித்தார். இந்த விருதினை நான்கு தலைமுறை கலைஞர்களாக கலைச்செல்வன் அமரர் ஏரம்பு சுப்பையா அவர்களின் பாதம் பணிந்து, கலாகீரத்தி திருமதி சாந்தினி சிவநேசன், ஆடற்கலைமணி திருமதி ரெஜினி சத்தியகுமார், நாட்டியக் கலாவித்தகர் செல்வன் நிமலன் சத்தியகுமார் ஆகியோர் ஒருமித்து நிற்க, சபையோரின் பலத்த கரகோஷத்தின் மத்தியில் வழங்கப்படது.
மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த சங்;கீத ஆசிரியை வித்தியாபூசணம் மீரா நித்தியானந்தன் அவர்கள் செல்வி அபிராவின் ஆடற்திறனைப் போற்றியதுடன் பரதக்கலைக்கு அவசியமாகத் திகழும் இசைக்லையை பயில மாணவர்கள் முன்வரவேண்டும். என்ற ஆதங்கத்தையும் முன்வைத்தார்.
வாழ்த்துரை வழங்கிய திரு. கி.த.குகதாசன் அவர்கள் தனது உரையில். இந்த அரங்கில் அத்தனை கலைஞர்களும் இளைய முத்துக்கள். இவர்கள் எமது கலாச்சாரத்தை தொடர்ந்து எடுத்துச் செல்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறி அவர்களை வாழ்தினார்.
இறுதியாக ஒரு குச்சியுடன் ஓர் இசை நடனம் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை அந்தக் குச்சி எப்படி நம்மைத் தொடர்கிறது என்பதனை தன் அபிநயத்தால் சிறப்புற படைத்தாள் அபிரா. குச்சிக்கும் கதை சொல்லும் ஆற்றல் உண்டா என வியக்கவைத்த நடனம் அது. அந்த வியப்புடன் அற்புதமாக அரங்கேற்றம் நிறவுற்றது. அரங்கேற்றம் நிறைவா நடைபெற்றதற்கான சான்றிதழை ஆடற்கலாலய அதிபர் செல்வி அபிரா.தயாபரனுக்கு வழங்கி வாழ்த்தினார். அரங்கேற்ற நிகழ்வானது தமிழ் மொழியில் திரு ரமேஸ் அவர்களும் யேர்மன்மொழியில் செல்வி கிலார். ஜஸ்ரின் அவர்களும்; சிறப்பாக தொகுத்துவழங்கினார்கள்.
3,890 total views, 3 views today