புலம்பெயர் வாழ்வில் திருமணம் தேவைதானா?

— விமல் சொக்கநாதன்-இங்கிலாந்து

இங்கு பிரிட்டனில் வங்கிகள் போன்ற மிகப்பெரும் நிறுவனங்களுடன் நீங்கள் ழுடெiநெ தொடர்பை ஏற்படுத்தும்போது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றோடு ரகசிய கடவு வார்த்தை (Secret Password) ஒன்றையும் தெரிவு செய்ய வேண்டும். நீங்களாகவே தெரிவுசெய்த உங்கள் கடவு வார்த்தையை நீங்கள் மறந்து போனால், அதனை உங்களுக்கு நினைவூட்டும் சில கேள்விகளையும் அந்த நிறுவனம் கேட்கும்.

1..உங்கள் அப்பாவை உங்கள் அம்மா திருமணம் செய்ய முன் அவரது கன்னிப்பெயர் என்ன? அம்மாவின் அப்பா பெயர் என்ன? 2. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எங்கே முதலில் சந்தித்தீர்கள்? 3. நீங்கள் முதலில் படித்த பாடசாலை எது?

உங்களைத் தவிர வேறு மூன்றாம் பேர்வழிகளுக்கு இதற்கான பதில்கள் தெரிந்திருக்க முடியாது. உங்கள் அந்தரங்க தகவல்களை பாதுகாப்பதற்கு அந்த வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கை இது! இதில் இரண்டாவது கேள்வி, வித்தியாசமான ஒரு கலாசாரத்திலிருந்து வந்த எங்கள் தலைமுறையினருக்கு சிரமங்களை ஏற்படுத்தலாம். ஆனால் காதல் திருமணம் செய்து கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு இது சிரமமாக இருக்காது. சட்டக் கல்லூரி என்றோ, மருத்துவக் கல்லூரி என்றோ, கோயில் திருவிழாவில் என்றோ எழுதியிருக்கலாம். ஆனால் எங்கள் தலைமுறை தம்பதிகள் பலர் தமது வருங்கால வாழ்க்கைத் துணையை முதன்முதலாக சந்திப்பதே மணமேடையில்தான். அப்பா காட்டும் பெண்ணின் கழுத்தில் மறுபேச்சு பேசாமல் தாலிகட்டுவது எங்கள் தலைமுறையின் வழக்கம். அதேபோல பெண்களும் அம்மா யாரைக் காட்டுகிறாரோ அவருக்கு கழுத்தை நீட்டுவது ஒரு தலைமுறை.

தவில் வித்துவான் ஓங்கி அடிக்கும் அந்த கெட்டிமேள ஒலியில் பொதுமக்களின் பேச்சொலி மட்டுமல்ல, மணமகனும் மணமகளும் இந்த கல்யாண மேடைக்கு வரமுன்னர் பிறருடன் வைத்திருந்த ரகசியத் தொடர்புகள், கிசுகிசுக்கள், நடந்த கடலோரங்கள், பாடிய காதல் கீதங்கள் அனைத்துமே மங்கித் தேய்ந்து மறைந்துவிடும்.

திருமணம் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது முற்றாக இல்லை – பெரியோர் நிச்சயித்த திருமணங்களில். தங்கள் புதல்வி பிறந்தநாள் முதல் பெற்றோரே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் பொறுப்பிலிருந்து விலகுவதில்லை. திருமணம் பொருத்தும் வேலை வரை தாமாகவே இழுத்துப் போட்டு செய்கிறார்கள். “என் பெற்றோர் எனக்கு திருமண ஒழுங்குகள் செய்கிறார்கள். Why are they looking for a partner for you? Can’t you find someone yourself?”

இலண்டனில் படித்து பட்டம் பெற்று பெரிய பதவிகளில் இருக்கும் எமது இளைஞர்கள், யுவதிகள், தத்தம் அப்பா அம்மாவை இந்த திருமணப் பேச்சுக்களில் ஈடுபடுத்துவது பிரிட்டிஷ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரிந்துகொள்ள முடியாத வியப்பாக இருக்கிறது! திருமண வைபவம், மேளதாளம், மண்டப வாடகை உணவு உயவநசiபெ இப்படி எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்க்கும்போது இந்த ஆடம்பர திருமண விழா தேவைதானா என்ற கேள்வியே இளம் தம்பதிகள் மனதை குடையும் கேள்வியாக இருக்கும்.

Living Together (திருமணம் செய்யாமலே ஒருமித்து கணவன் மனைவிபோல வாழ்தல்) இளையவர்கள் மனதை அண்மைக்காலமாக கவர்ந்த ஒரு விஷயமாகும். இது அவசரமாக அவர்கள் எடுத்த முடிவேயல்ல. தங்கள் தோழர்கள் Ram, Siva, Boris, Sulaiman, Gaya, Ranji, Nazia திருமணமே செய்யாமல் ஒரு சமூகமாக, ஒரு பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்வது மற்ற இளசுகளுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது.

“Niru darling! நாங்கள் Elderly parents தரும் Advice நீங்கள் கேட்பதாக தெரியவில்லை. joint Life வாழும் உங்கட Friends வீட்டுக்கு போறீங்கள் வாறீங்கள். கல்யாணம் செய்வது பற்றி என்ன decide பண்ணி இருக்கிறீங்கள்?”

“Mummy, I need some more time”
“என்னம்மா இதென்ன Court வழக்கே? You are keeping on asking for more time! Niru”.

Nசைரவின் தாயார் இதைச் சொல்லும்போது அவளது குரல் தளதளத்தது. அவளுக்கும் கணவருக்கும் வயது எழுபதை தொட்டு நின்றது. Nசைர இனி கல்யாணம் செய்து ஒரு பேரப்பிள்ளையை தமது கையில் தருவதற்கு வயது 75 ஆகிவிடலாம். இந்த விரக்தி – நிலையற்ற தன்மை அவளது குரலில் தெரிந்தது.

Nசைர இலண்டனில் பிறந்து வளர்ந்து பட்டம் பெற்றாலும் சிறுவயதில் தாயார் அவளை தமிழ் Schoolலுக்கும், Carnatic Music lessonகும் கொண்டு போனதால், தன் பெற்றோர் மீதிருந்த அன்பும் மதிப்பும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. ஆனாலும் அம்மா வற்புறுத்துகிறாள் என்பதற்காக யாரோ ஒரு Spoilt Bratக்கு கழுத்து நீட்ட அவள் தயாரில்லை. Hindu Marriage என்பது Friends போல ஒன்றாக வாழ்வது என்பது Tamil Boys ஏன் புரிவதில்லை?

திருமணம் முடிந்தவுடன் வீட்டின் Ownership, Bank Account என்பன தமது பெயரில் மாற்றப்படவேண்டும் என்று தமிழ் Groomsஏன் கேட்கிறார்கள்? Grooms அல்ல Groomsஇன் Parents ஏன் வற்புறுத்துகிறார்கள்? தன் குசநைனௌக்கு திருமணம் என்ற பெயரில் நடந்த நாடகம், அதனைத் தொடர்ந்த Horror Stories Niru வுக்கு வயிற்றைக் கலக்கி அச்சுறுத்தின; வயிற்றோட்டம் வரச் செய்தன.

இந்த Horror Stories இல் இருந்து தான் தப்பவேண்டும். அப்பா அம்மாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும், ஒரு பேரப்பிள்ளையை தான் கொடுக்கவேண்டும்! எப்படி இதை செய்து முடிப்பது என்று இரவு முழுவதும் யோசித்தாள் நிரு. அதிகாலை நேரம், ஞானோதயம் வந்ததுபோல எழுந்து டீயவாசழழஅ போனாள். சுவாமி அறையில் வினைகள் தீர்க்கும் விநாயகனை வணங்கினாள். காப்பி அருந்திவிட்டு IVF Clinic க்கு Phone செய்து Appointment வைத்தாள். தான் யார் என்று நிரூபித்து Passport வேலை விபரங்களை கொடுத்தாள். Deposit பணம் செலுத்தினாள்.

தன் பெற்றோர் பற்றியும் எப்படியான மகவு வேண்டும் என்றும் விரிவாகச் சொன்னாள். நான் Sri Lankan Tamil. நீங்கள் தெரிவு செய்யும் Donor சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ எனக்கு பரவாயில்லை. ஆனால், அவர் தோற்றம் ஃ குழந்தையின் தோற்றம் மிக முக்கியம் என்று வலியுறுத்தினாள். “ழும நிரு! நீங்கள் போகலாம். உங்கள் தேவைகள் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கிறோம்!” என்று மருத்துவர் சொன்னதும் மகிழ்ச்சியடைந்தாள். நிறைவாக உங்கள் விபரங்கள் னுழழெசக்கோ, Donorஇன் விபரங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படமாட்டா.

நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டாள் நிரு. இரண்டு வாரங்களில் மருத்துவரின் சிகிச்சை சிறப்பாக நிறைவுபெற்றது. கைநிறைய சம்பளம், பெரிய கார், நீண்ட விடுமுறை என்று வாழ்க்கை இனிமையாக செல்லும்போது, கணவன் என்ற பெயரில் ஒரு தோட்டத்து ‘கண்காணி’ அவசியமா? அவனுடைய தொல்லை போதாது என்று பொறாமையே உருவாய் கொண்ட அவனது அம்மாவையும் சகோதரிகளையும் தான் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா?

உறவுகள் முறிவடைந்தால், நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்பதும், அதற்காக பல மாதங்கள் காத்திருப்பதும் நிருவுக்கு கசந்தது. இந்த தொல்லைகளிலிருந்து விடுதலை பெறவே அவள் IVF முறையை தெரிவுசெய்து குழந்தைபெற ஆயத்தமாகிறாள்.

ஓரினச் சேர்க்கையில் வாழும் இரு பெண்கள்கூட குழந்தை பெற்றுக்கொள்ள இந்த IVF முறையையே தெரிவுசெய்கிறார்கள். ஆனால் நிருவுக்கு ஓரினச் சேர்க்கையும் இல்லை. சாமான்ய ஆண் உறவுகளும் இல்லை. அப்பா அம்மாவுடன் அன்பு மகளாக வாழ்ந்து, நண்பர்களுடன் கூட்டாக வாழ்ந்து காதல் ஃ கல்யாணம் எல்லாம் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டன. ஆனால் நல்ல மருத்துவ முன்னேற்றங்களால் குழந்தைப்பேறை தான் அடைய நினைத்து ஆயத்தம் செய்தாள்.

நிரு இப்போது ஒரு கர்ப்பிணி. கருவுற்று மூன்று மாதங்கள். குழந்தைக்கு தந்தையின் பெயராக தன் பாட்டனாரின் பெயரையே வைப்பது என்று நிரு தீர்மானித்தாள். தன்னை பெற்றெடுத்து அன்புடன் ஆளாக்கிய அப்பா அம்மாவுக்கு தனது சிறிய பிரதியுபகாரமாக இந்தப் பேரப்பிள்ளையை நிரு வழங்கப் போகிறாள். இது கட்டுரையாளரின் கற்பனைக் கதை அல்ல.

1,163 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *