யாவருக்குமான கலையாக பரதம்

செல்வி.திவ்யகுமாரி சின்னையா – லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை
நூற்றாண்டு கால மானிட வாழ்வியல் தனக்கே உரிய அடையாளமாக, கலைகளை தம் சந்ததியினர் வழியே கடத்திக்கொண்டே செல்கின்றது . ‘கலை ‘ என்பது வெறுமனே ஒரு ஆற்றளாக கருதிவிட முடியாது. மனித வாழ்வியலை உணர்வுமிகு ஆற்றலாகவும்,உயிருக்கும், உணர்விற்குமான பரிமாற்றங்களை பகிரவல்ல கலைகளாகவே திகழ்கின்றன.
பரந்த அர்த்தத்தில்,கலை என்ற சொல் அறிவு, நடைமுறை, கருத்து, கட்பனை மற்றும், உள்ளுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு வளர்ந்த செயலையும் குறிக்கும்………………….
கலை என்பது மனித கலாசாரத்தின் படைப்பு ஆகும்.
கலை என்றவுடனேயே ஆயகலைகள் அறுபத்துநான்கு என்பதே எம் நினைவிற்கு வரும் ஆம் இக்கலைகள் அதன் இயல்பின் அடிப்படையில் நாம் பல்வேறு வகைகளாக ஆக்கிக்கொள்கிறோம்.
அடிப்படையில் கலை என்பது ஒரு வெளிப்பாடு எனலாம் . கலையை பிராசுவிப்பவர்களை நாம் ‘கலைஞர்’ என்போம். அகக் காட்சிகளை அல்லது மனம் சார்,உடல் சார்,புத்தி சார் திறமைகளையோ தன்னையும் தான் சார் பிறரையும் மகிழ்விப்பவனாகவே கலைஞன் விளங்குகிறான். கலைகள் இன்றைய காலப்பகுதியில் 64 யும் கடந்து நூற்றுக்கும் மேட்பட்ட வகைகளை பெற்று பல துறைகளில் பரிமாணங்களை கண்டுள்ள நிலையில். என்றுமே முதன்மை கலைகளை அல்லது நுண்களைகள் என்று நாம் முன் வைப்பது. ஓவியம், சிற்பம்,கட்டிடக்கலை, ஒளி படக்கலை, மற்றும் நிகழ்த்து கலை வடிவாங்களான நடனம், இசை. நாடகம் என்பனவும் ஆகும் .
அந்த வகையில் நடனக்கலை பற்றி சிந்திக்கயில். நடனம் ஆனது பொதுவாக ஓசைக்கும் இசைக்கும் உடலை அசைத்து நிகழ்த்தப்படும் கலை வடிவம். இதில் பரத நாட்டியம் தமிழ் பாரம்பரிய கலை வடிவமாகும்.ஆரம்பகால சதிர் நடனமே பரதநாட்டியம் ஆகிறது. அதாவது தேவர் ஸ்ரீ இறைவன் ூஅடியார் ஸ்ரீ தொண்டு செய்பவர். எனும் பொருள் படும் நடன பெண்டிர் கோயில்களில் இறைவனிடம் தம்மை அர்ப்பணித்து இறைவனுக்காக ஆடி வந்தன. எனினும் காலப்போக்கில் குறிப்பிட்ட சமூகத்தினரே சதிர் எனும் நடனம் ஆடுகைக்காக தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆரம்பகால சதிர் ஆடும் பெண்கள் தாமே பாடலை பாடியபடி இசைக்கேட்ப சதிர் ஆடினர்.
இக்காலகட்டத்தில் சதிர் தம் செல்வாக்கில் இருந்தமைக்கு சிறந்த உதாரணம். மாதவி ஆடிய பதினொருவகை ஆடல். இச் செய்திபற்றி சிலப்பதிகாரம் கூறும். பின் சோழர் காலத்தில் அவர்களுக்கான சகல மரியாதைகளையும் பெற்றிருந்த பொழுதிலும் காலப்போக்கில் நாயக்கர், முஸ்லீம் படையெடுப்புகாலத் தில் சதிர் நடனமும் சதிர் ஆடும் பெண்களும் போகப்பொருளாகவே பார்க்கப்பட்ட அவலநிலை எற்பட,பின் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கோயில்களில் நடனம் ஆட தடை விதிக்கப்படவே இது பரத கலையின் இருண்டகாலமாயிற்று. இவ்வாறு ஆதரவை இழந்த சதிர்,ஒரு புரட்சியின் பின்னரே பக்திசார் மட்டுமல்லாமல், ஒருவர் தன் எண்ணம் சார் வெளிப்பாட்டை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தும் ஒரு ஆடல் ஊடகமாக மேடை ஆற்றுகைகளுடன் புதிய பரிணாம விதிகளுடன் மிளிர தொடங்கியது. பின்னரே பரதநாட்டியம் என்ற பெயருடன் உலகிட்கு காட்டிய பெருமை. கலாஷேக்திரா நிறுவுனர். ருக்மணி அருண்டேல் அம்மையாரையே சாரும். மேலும் இதற்காக அக்காலத்தில் தஞ்சாவூர். பால சரஸ்வதி அம்மையார் போன்றொரும் பெரிதும் பாடுபட்டமைக்கான சன்றே கடந்த நூற்றாண்டின் வெளிப்பாடாக நம் அனைவராலும் பயிலப்படும் பரதம் ஆகும்.
இன்றைய சூழ்நிலையில் பரத்தநாட்டியமானது. சாஸ்த்ரியம் மாறாமல் மதிக்கக்கூடிய இடத்தில்வைத்து இறைசார் கொண்டாடப்படுவதற்கு இவர்களின் உழைப்பேகாரணம். மேடை நிகழ்வுகளில் பரதநாட்டியம் ஆற்றுகை செய்யப்பட்ட தன்பின்னரே அதன் அழகியல் ஈர்ப்பும்,இசைசார் அணுகுமுறையும், அதனால்பெறப்படும் இன்பமானது, கலைஞர் களாலோ பார்வையாலர்களாலோ உணர்வுபூர்வ உயிர்கலையாய் உள்வாங்கப்பட்டது.
கலாஷேக்த்ரா நிறுவுகையின் பின்னரே பெண்களுக்கு மட்டும் இன்றிருந்த பரதம் ஆண்களும் ஆடும் நடனக்கலை ஆனது. காலப்போக்கில் பிற்போக்குவாதிகளின் கண்ணோட்டம் மலுங்கடிக்கப்பட்டு பரதம் தன் செல்வாக்கினை மீட்டெடுத்தது. படிப்படியான வெற்றியை அடைந்த பரதமே தற்போழுது செல்வந்தர், ஏழை, உயர்குடி, தாழ்மைக்குடி,உள்நாட்டவர்,வெளிநாட்டவர் . என்ற பாரபட்சம் தகர்த்துத்தெரியப்பட்டு எல்லோராலும் பயிலும்கலையாக திறமையை முன்னிலைப்படுத்தி நிற்கும் கலையாக மெலெழுந்துநிற்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் .. சம காலத்தில் ஆண்,பெண் வேறுபாடுகளின்றி ஏன் திருநங்கை சகோதரிகளும் கூட தம்மை பரதத்தில் ஈடுபாடுத்தியுள்ளமை இதற்கு சிறந்த உதாரணம் இந்தியாவில் வாழும் பத்மஸ்ரீ நர்த்தக்கி நடராஜன் அம்மையாரை சிறந்த எடுத்துக்கட்டாக கூறலாம். “திறமைக்கே என்றும் பரதம் “என்ற தொனிக்குறளை உயர்த்துவதாய் உள்ளது. மேலும் பரதம் தம் தனித்துவத்தைன்மையால்தான் கடல்கடந்த நாடுகளில் மொழி கடந்து வாழ்கிறது. இன்னுமொரு சான்றாக கூறுவதாயின் இந்திய தேசத்தின் பழங்குடிகுழந்தைகளுக்கும் கூட அமெரிக்கபெண்ணான பேராசிரியர் கௌஷால்யா ஸ்ரீனிவாசன் அவர்கள்மூலம் பரதம் பயிற்றுவிக்கப்படுகிறது.
இவ்வாறு பல தேசங்கள் கடந்தும். பல ஆசிரியர்களின் சேவையினாலும், கலை படைப்பாளிகளினாலும், பாரபட்சமற்ற கலை ஊக்குவிப்பால் பரதக்கலை கல்வி நிறுவனகளிலும். பாடசாலைகளும்கூட எல்லோருக்குமான மதிப்புமிக்க மிளிர்கிறது என்று குறிப்பிடுதலே சரியானதாகும். ஆக முறையான கலைத்தாகம் கொண்ட யாவருக்கும் இவ்பரதத்தாய் சொந்தமானவள்.