ஜெனிவாவில் நடைபெறப்போவது என்ன?

கொழும்பிலிருந்து ஆர்.பாரதி

ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஈழத் தமிழா்களுக்கு எதனையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கின்றது. செப்ரெம்பர் 12 ஆம் திகதி ஆரம்பதினத்தன்று இடம்பெற்ற மனித உரிமைகளுக்கான பதில் உயர் ஸ்தானிகர் நடா அல் நஷிப்பின் அறிக்கை சற்று கடுமையானதாகக் காணப்பட்டாலும், தற்போது வெளியாகியிருக்கும் இலங்கை குறித்த பிரேரணையின் நகல் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையின் மூலமாக தமிழ் மக்களுக்கு தீர்வு எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை என்பதை இது மீண்டும் உணா்த்தியிருக்கின்றது.

இந்தப் பிரேரணை இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே கையாண்டு தோல்வியடைந்த பொறிமுறைகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கே அழைப்புவிடுத்திருக்கின்றது. கடந்த இரண்டு தீர்மானங்களின் போதும் முன்வைக்கப்பட்ட யோசனைகளை வலுவுட்டுவதுதான் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணையின் சாராம்சமாகும். அதேவேளையில், இலங்கையை ஐ.சி.சி.க்கு பாரம்படுத்த வேண்டும் என்ற தமிழர் தரப்பின் நீண்டகால கோரிக்கையை இது புறக்கணித்திருப்பது தமிழ் மக்களுக்கு கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இதன்மூலம் இந்தப் பிரச்சினையை தொடா்ந்தும் ஜெனிவாவுக்குள் வைத்திருப்பதற்கே சர்வதேச சமூகம் விரும்புகின்றது என்ற செய்திதான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. 2012 க்கு பின்னர் ஏழு தீர்மானங்கள் ஜெனிவாவில் கொண்டுசரப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதற்கான ஆக்கபுர்வமான பலமான பொறிமுறை ஒன்றும் அங்கில்லை. ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒன்றை இலங்கை நிராகரித்தால், அதனை மீறி அதனைச் செயற்படுத்த ஐ.நா.வினால் முடியாது. குறிப்பிட்ட நாட்டின் ஒப்புதல் இல்லாமல் அந்த நாடு குறித்த தீர்மானம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை. “நல்லாட்சி” எனப்படும் மைத்திரி – ரணில் ஆட்சியின் போது பிரேரணைக்கு இணை அனுசரணையை வழங்கிவிட்டே அதனை நடைமுறைப்படுத்தத் தவறிய “பெருமை” இலங்கைக்குள்ளது.

இந்த நிலையில், பிரச்சினையை ஐ.சி.சி.க்குக் கொண்டு செல்வதன் மூலமாக மட்டும்தான் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆனால், சர்வதேச சமூகம் எனப்படும் அமெரிக்கா – பிரித்தானியா – இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவது என்பதைவிடவும், இலங்கையைத் தமது பிடிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய தேவையாகவுள்ளது. இலங்கையை ஓரேயடியாகப் பகைத்துக்கொள்ளவோ, அதற்கு கடுமையான நெருக்கடியைக் கொடுப்பதற்கோ அவை தயாராகவில்லை. ஆக, தீர்மானமும் அதற்கேற்றதாகவே அமையும்!

தமிழ் மக்களுடைய நீண்டகாலக் கோரிக்கையாக ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டும் என்பதே முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் அந்தக் கோரிக்கை புதிய பிரேரணையில் புறக்கணிக்கப்பட்டிருப்பது தமிழர் தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தரப்புக்கள் nஜிவாவில் களமிட்டிருந்தாலும், இந்த விவகாரத்தை கையாள்வதில் போதிய வேலைத் திட்டங்களைச் செய்திருக்கவில்லை. அதனால்தான், இந்த நிலை தொடர்கின்றது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

பிரதான நாடுகளுடனான பேச்சுக்களின் போதும் தமிழர் தரப்பினர் ஐ.சி.சி. விவகாரத்தையே தமது பிரதான கோரிக்கையாக முன்வைத்திருந்தார்கள். பேரவைக்கு அனுப்பிய கடிதங்களிலும், ஜெனீவாவுக்குள் இந்தப் பிரச்சினையை கையாள்வதில் கடந்த காலங்களில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இதனை ஐ.சி.சி.க்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. இருந்த போதிலும் அதனைப் புறக்கணித்துள்ள பிரதான நாடுகள், ஏற்கனவே தோல்வியடைந்த உள்நாட்டுப் பொறிமுறைகளுக்கு வலுவுட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பை விடுக்கும் வகையிலேயே தமது பிரேரணை வரைபைத் தயாரித்துள்ளன.

இது ஆரம்ப வரைவபாக இருப்பதால் இதற்கான திருத்தங்களை முன்வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை உட்பட பல நாடுகள் திருத்தங்களை முன்வைத்தாலும் கூட, இறுதி வரைபு தமிழ்த் தரப்பினருக்கு ஆதரவானதாக வெளிவருமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கும் எனவும் தமிழ்த் தரப்பினா் தெரிவிக்கின்றார்கள். கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ரெலோ பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட தாயகத்திலிருந்து பெருமளவிலான அரசியல்வாதிகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் ஜெனிவா வந்திருந்தனர். இதனைவிட புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து பெருமளவு செயற்பாட்டாளா்கள் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர்.

வெளிவந்திருக்கும் தீh்மானத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றபோதிலும், அதற்கான இராஜதந்திரக் காய்நகா்த்தல்களை முன்னெடுப்பதற்கான ஆளுமை தமிழ்த் தரப்பினரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால், இறுதியில் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசத்தைக் கொடுப்பதாகவே இந்தப் பிரேரணை அமையும் வாய்ப்புக்களே அதிகமாகத் தென்படுகின்றது.

ஜெனிவா சென்ற சுமந்திரன் குறிப்பிட்ட வரைபு தொடா்பாக ஆராய்வதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றாh் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரைபைத் தயாரித்த பிரித்தானியா தலைமையிலான ஆறு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனா்.

இதேவேளையில், ஜெனிவா சென்ற ரெலோ பேச்சாளா் சுரேந்திரனும், இந்த வரைபில் மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவித்திருக்கின்றாh். “தற்போது வெளிவந்திருப்பது நகல் வரைபே தவிர, இறுதி வரைபு அல்ல” என சுரேந்திரன் ஜெனிவாவில் தெரிவித்தாh். “இதில் மேலும் பல திருத்தங்கள் செய்யப்படலாம்” எனவும் சுட்டிக்காட்டிய அவா், “இந்தப் பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. இதன்போது அங்கத்துவ நாடுகளுடன் பேசி தீh்மானத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கும்” எனவும் தெரிவித்தாh்.

ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் அமிகாரிகள் தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவா்களுடனும் இணைய வழிச் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தாh்கள். இதனைத் தொடா்ந்து வடக்கு கிழக்கில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை விளக்கும் ஆவணம் ஒன்று ஜெனிவாவில் பேரவையின் முக்கிய அதிகாரிகளிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டது. இந்த ஆவணம் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பாh்க்க வேண்டும்.

இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை ஒக்ரோபா் 7 ஆம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அன்றைய தினம் இது குறித்த விவாதம் ஒன்றும் இடம்பெறவிருக்கின்றது. ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழத் தரப்பினா் அதில் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும் எனக்கூறுகின்றாh்கள். ஆனால், இலங்கையைத் தமது பிடிக்குள் வைத்திருக்கும் அதேவேளையில், இலங்கைக்கு அதிகளவுக்கு நெருக்கடியைக் கொடுத்து அதனைத் தனிமைப்படுத்தக்கூடாது என்பதுதான் சா்வதேச சமூகத்தின் இராஜதந்திரமாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்த் தரப்பினா் கொடுக்கக்கூடிய அழுத்தங்களும் அவா்களுடைய இராஜதந்திரக் காய் நகா்த்தல்களும்தான் இதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும். என்ன நடைபெறுகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் …..

850 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *