தலை கால் தெரியாம….. யாருக்கும் கிட்டாத சில சுக அனுபவங்கள்

  • னுச. வு.கோபிசங்கர் – யாழப்பாணம்

“ என்ன மாதிரி ? நாளைக்கு காலமை போவம், நாலரைக்கு வந்தால் ஐஞ்சு மணிப்பூசை முடிய உருளச் சரியா இருக்கும் “ எண்ட முன்மொழிவு வழி மொழியாமலே ஏற்றுக்கொள்ளப்பட எல்லாரும் வெளிக்கிட்டம். நாலரை நல்லூர் மணி அடிக்க முதலே என்னை எழுப்ப வந்த குரலுக்கு வந்திட்டேன் எண்டு சொன்னபடி வெளிக்கிட்டன். யாழப்பாணத்தில மட்டும் பாவிக்கிற சொல் இது, வந்திட்டேன் எண்டிறது என்ன tense எண்டு அறிய தனிப் பட்டிமன்றம் வைக்கோணும் சுகி சிவம் எங்கயோ சொன்னதாக ஞாபகம்.

ஆடி அமாவாசை முடிய வீட்டை மச்சச்சட்டி கவிக்க நாங்களும் நல்லூர்த்திருவிழா பிரதட்டைக்கெண்டு ஆய்த்தப் படுத்துவம்.வெழுத்த ரெண்டு பழைய வேட்டி,சால்வை, சணல்க்கயிறு, இதுக்கெண்டு கொஞ்சம் பழைய underwear, இதுகள் தான் தேவை. அவனவன் என்ன தான் தன்டை ஊர்க்கோயிலில உருண்டாலும் எல்லா ஊர் பிரதட்டைக் காரரும் சேந்து உருளுறது நல்லூரில தான் . நல்லூரானுக்குப் “ பிரதட்டைப் பித்தன்” எண்டும் பேர் வைக்கலாம்.

கோயில் வேட்டி எண்டால் எட்டு முழம் தான், தானம் குடுக்கத்தான் நாலு முழம் வேட்டி வாங்கிறது. வேட்டி கட்டிறதுக்கு முறை இருக்கு. காலை நல்ல அகட்டி வைச்சு முதல் சுத்தை கொண்டுவந்து ,வகித்தை எக்கிக்கொண்டூ ,மேல்ப்பக்கத்தால் கொஞ்சம் மடிச்சு ரெண்டு இஞ்சி குதியில இருந்து உயத்திக் கட்டவேணும்.அப்ப தான் நடக்க, சைக்கிள் ஓட சுகமா இருக்கும் இல்லாட்டி தடக்கித்தான் விழோணும். கொஞ்சம் வண்டி இருந்தால் தான் வேட்டி கட்டிறதும் சுகம் அதோட இடுப்பில இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு நிக்கும். சரியாய் வேட்டியைக் கட்டினால் டிநடவ ஒண்டும் தேவேல்லை, நல்லூர்த் தேருக்க நசிபட்டு இழுக்கேக்கேம் அசையாது. வேட்டீன்டை வெளிப்பட்டு கட்டேக்க வலதுகை உள்ள போக இடது கை வெளீல வரக் கட்டோணும்.

பிரதட்டை அநேமா குறூப்பாத் தான் செய்யிறது. பிரதட்டைக்கு பலர் சேந்தே வருவினம், சிலர் வந்து அங்க ஒண்டாச் சேருவினம். முதல் நாள் பிரதட்டை தொடங்க முதல் காலமை கற்பூரம் எரிச்சு, தேங்காய் உடைச்சிட்டு வேப்பமரத்தடியில group சேரும். இந்த குறூப்பும் இயக்கத்திக்கு போக வெளிக்கிடிற குறூப் மாதிரி மச்சான் நான் நாளைக்கு கட்டாயம் பிரதட்டைக்கு வாறன் எண்டவன் பின்வாங்க சும்மா வந்தவன் வேட்டியை மடிச்சுக் கட்டுவான் .

தூணுகளுக்குப் பின்னால நிண்டு வேட்டியை மடிச்சு கொடுக்குக்கட்டீட்டு மேல சால்வையை சுத்திக் கட்ட நீளம் காணாட்டி சணல் கயிறு தேவை.சணல் கொண்டராட்டியும் யாரோ ஒரு புண்ணியவான் தூணுகளில செருகி வைச்சிருப்பான்.சணல் கட்டேக்க முடிச்சு வண்டிப் பக்கம் வேட்டிக்கு மேல இருக்கோணும் இல்லாட்டீ ஒவ்வொருக்காலும் திரும்பேக்க இடுப்பெலும்பில அமத்த நோகும். கொஞ்சம் அனுபவம் கூடக் கூட சால்வையை ஒரு சுத்தோடயே சணல் இல்லாமல் கட்டலாம். சால்வையின் கீழ்க்கட்டு மாத்திரம் உருளத் தொடங்க முதல் கட்டோணும்.

கஸ்டப் பட்டு நாலு மணிக்கு எழும்பி காலமை பூசைக்கு நாங்கள் தான் வெள்ளனவே வந்திட்டம் எண்டு நெச்சுக்கொண்டு வர அரோகரா, முருகா,கந்தனுக்கு கதிர்வேலனுக்கு எண்ட சத்தமும், தலையால காலால எண்ட அறிவுறுத்தலும் காலமை பின் வீதீல கோயில் மணிக்கு மேலால கேட்டிச்சுது. முதல் நாள் வரை அப்பிடியே இருந்த தார் ரோட்டெல்லாம் காணமல் போய் கால் புதைஞ்ச போற அளவு குருமண் போட்டு இரவோட இரவா மாநகர சபை அதை மாத்தினதுக்கு நன்றியாய் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா எண்டு ஆரோ சொன்னது சரியாய் பொருந்திச்சுது. ஒவ்வொரு நாளும் இரவில சனங்கள் என்ன தான் கச்சான் கோதை கொட்டி, மண்ணில சுரங்கம் வெட்டி, வீடு கட்டி விளையாடி இருந்தாலும் விடிய உருளப் போகேக்க ஒரு கோது கூட இருக்காது, அதோட மண்ணும் அலை அடிச்சு பரவி விட்ட மாதிரி இருக்கும், இது எப்பிடி இரவோட இரவா நடக்குது எண்டது முருகனுக்குத் தான் தெரியும்.

பிரதட்டை எண்டது சும்மா போய் உருளிறது மட்டும் இல்லை கொஞ்சம் ஆயத்தங்கள் செய்ய வேணும் . முதல் நாள் சாப்பாடு வேளைக்கே சாப்பிட வேணும், புளிப்பான சாப்பாடுகள் சாப்பிடக்கூடாது, அதோட இரவு நித்திரையும் கொஞ்சம் கொள்ளோணும். வேட்டியை சால்வையை கட்டீட்டு கோபுர வாசலில வந்து கீழ்க்கட்டை மாத்திரம் உருளத் தொடங்கிற இடத்தில வைச்சு கால் ரெண்டையும் குறுக்கால வைச்சுக் கொண்டு கட்டீட்டு படுத்து கோபுரத்தை பாத்துக் கும்பிட்டுட்டு உருளத்தொடங்க, உதவிக்கு ஒருவன் அரோகரா போட பிரதட்டை அடி தொடரும். முதல் முதல் உருளுறவையை ரெண்டு சீனீயருக்கு நடுவில படுக்கப் பண்ணி ஒருமாதிரி உருட்டிக்கொண்டே விட்டிடுவினம்.அதோட பயம் எல்லாம் போயிடும்.

பிரதட்டைக்கும் முறை இருக்கு . மண்ணில விழுந்து படுத்திட்டு முழங்கை மடிச்சு நிலத்தில் பட கையை உயத்திக் கும்பிட்டபடி, தலையை கழுத்தோட நிமித்தி மண்ணில படாதபடி, உடம்பை மட்டும் திரும்பி ஒண்டோடோ ஒண்டா கட்டி இருக்கிற காலை பிரிக்காம உருளுறது தான் பிரதட்டை. நெஞ்சுக்க கை வைச்சு நெம்பு கோல் மாதிரி உருண்டாலோ, முழங்கையால தள்ளி உடம்பைப் பிரட்டினாலோ, கால் ரெண்டும் அகண்டாலோ முதுகில ரெண்டு தட்டு விழும். இந்தச் சரியான pழளவைழைn தான் உடம்பின் அச்சை சமச்சீரா வைச்சிருக்கும் உருளேக்க. ( பிரதட் டைக்குப் பின்னால இருக்கிற phலளழைவாநசயில எண்டது தனியா எழுதோணும்)

உருண்டு கொண்டு போகேக்க கண்ணை முழுநேரமும் துறந்து வைச்சிருந்தா உலகமே சுத்திற மாதிரி இருக்கும். இடது தோள் முன்னுக்கு வரேக்க தான் முன்னால பாக்கோணும். அதோட சரியான னசைநஉவழைn இல போறதுக்கு கிட்டத் தெரியிற மரம் சுவர் எண்டு பாத்துப் பாத்து உருண்டால் பாதை பிழைக்காமல் உருளலாம். திசை மாறேக்க “காலால உருளுங்கோ எண்டால்“, கால் வேகமாச் சுத்த உருளவேணும் அப்பதான் உடம்பு தலைப்பக்கமா மேல போகும் அதே மாதிரி தலையால எண்டு சொல்லேக்க தலை வேகமா சுத்த கீழ்ப்பக்கமா உடம்பு திரும்பும். ஆனால் இப்ப பலர் இது தெரியாம காலாலை எண்டால் கீழ போற எண்டு பிழையாச் சொல்லினம். இதைத்தான் “ தலை கால் தெரியாம நடக்கிறது எண்டு சொல்லிறவையோ எண்டு தெரியேல்லை” .

கீழ ரோடு, மேல சிவர், சிலநேரம் சல்லிக் கல்லு, இடைக்கிடை உருளாமல் படுத்தே இருக்கிற முதல் உருளிகள், மண்ணால மூடி இருக்கிற அவை எடுத்த சத்தி, குத்திற புல்லுக்கட்டை எண்டு எல்லாத்தையும் பாத்து உருண்டு தேர் முட்டி தாண்ட கோபுரத்தில இருக்கிற ஓம் முருகா தெரியும்.

கோபுரத்துக்கு கிட்ட வர தொடந்து எரியிற கற்பூரத்தின்டை அனல் ஈரமண்ணில உருண்டு வாறவனுக்கு ஒரு இதம் தரும். அதைத்தாண்ட உடைச்ச தேங்காயின்டை இளனீர் முகத்தில தெறிக்க ஒரு உயிர்ப்பு வரும். உருளேக்க எவ்வளவு நேரமும் கத்திக் கத்தி முருகனை துணைக்கு கூப்பிட்டாலும் நினைப்பெல்லாம் பிரதட்டை அடிச்சு முடிக்கிறதில மட்டும் இருக்கும் , ஆனால் கடைசீல கோபுரத்தை பாத்து மெல்ல மெல்ல உருண்ட படி வரிசையில நிக்கேக்க தான் முருகன்டை நினைப்பு வரும் . என்ன வேகமா அடிச்சாலும் கடைசீல கொஞ்சம் நிதானமாகி கோபுர வாசல் வரிசையில மெல்ல மெல்ல உருண்டு எழும்ப முதல் ஒரு நிமிசம் கண்ணை மூடி கும்பிட்டுட்டு எழும்பிறது பக்திக்கு மட்டுமில்லை, தலை சுத்தில்லாமல் எழும்பவும் தான். அப்பிடியே கோபுர வாசலில எழும்பி நாவலர் மண்டபத்தடீல மண்ணைத்தட்டி சால்வையைக் கழற்றின படி போய் சர்வோதயக் காரரின்டை தண்ணீர்ப் பந்தலில தாற கோப்பியைக் குடிச்சிட்டு , “நான் இண்டைக்கு மூண்டு ரவுண்ட், உனக்கு எத்தினை நிமிசம் செண்டது “ எண்ட கதைகளை கவனிக்காமல் கோபுர வாசலை கண்ணால துழாவினன்.

“அடிச்சு முடிச்சிட்டு நான் நிமிர,
அளந்த அடியை அழிக்க அவள் குனிய,
இமைக்காமல் இணைந்த விழிகள்,
இன்று போய் நாளை வாறன் எண்டு
இரகசியம் சொல்ல,
அடியின் பலனை அனுபவிச்சு
அடுத்த நாளுக்குமாய் பாத்திருந் தேன் “ .

617 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *