நானே வருவேன்

நானே வருவேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்துஜா ரவிச்சந்திரன்;.இவர் இந்திய தமிழ் திரையுலகின் நடிகை ஆவார். இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
மேயாத மான் திரைப்படத்தில் நாயகனின் தங்கை கதாபாத்திரம் ஏற்று நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

நானே வருவேன் – இந்த தலைப்பு கேட்டதும் யார் நீ படத்தில் வந்த அந்தப்பாடல் நினைவுக்கு வரும். (1960 -1975 காலத்து இளசுகளுக்கு) வேதாவின் இசையில் கண்ணதாசன் பாடலை சுசிலா அற்புதமாகப்பாடி இருப்பார்.ஜெயலலிதா ஜெயசங்கர் சிறப்பாக நடித்தபடம். தமிழ் சினிமாவுக்கு ஒரு இயல்பு உண்டு. அதாவது ஒரு பாணியில் ஒரு திகில் கதை அமைப்பில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அடுத்த சில மாதங்களுக்குள் அதே போல்; குறைந்தது 20 படங்களாவது வெளியாகிவிடும். அவற்றில் ஒன்று இரண்டுதான் வெற்றி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேய் படங்களுக்கு நல்ல மவுசு அதிகரித்ததை தொடர்ந்து அதே மாதிரி ஏகப்பட்ட படங்கள் வந்துவிட்டன. அதிலும் குறிப்பாக அரண்மனை, காஞ்சனா படங்கள் பேய் படங்களில் காமெடி காட்சிகளை வைத்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த விட்டனர். இதனாலேயே பலரும் காமெடி கலந்த பேய் படங்களை தொடர்ந்து எடுத்து வந்தனர். ஆனால் 80, 90 கால கட்டங்களில் அதிகமாக தமிழ்சினிமாவில் பேய் படங்களை பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு திகில் படம் வெற்றி பெற்றது என்றால் அது ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா நடித்த யார் நீ என்ற படம்தான். 1966 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் வெற்றி பெற்றாலும் இதே போன்ற படங்கள் அதிகமாக வெளிவராமல் வித்தியாச வித்தியாசமான கதைகள் அந்த காலகட்டங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

பொன்னியின் செல்வன் விமர்சனத்தை குறைந்தது ஒரு மாதம்! தவிருங்கள்
ஒவ்வொருவரையும் அவர்களை அவர்களாகவே பார்க்கவிடுங்கள்.

உங்கள் வரையறைகளை அவர்கள் மீது வரையாதீர்கள்.

எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், ராஜமௌலி என பெரும் ஜாம்பவான்கள் பலரும் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்று நினைத்து முடியாமல் போன நிலையில், அதனை இரண்டு பாக படங்களாக குறுகிய காலக்கட்டத்தில் பெரும் நடிகர்களை வைத்து பிரம்மாண்ட படமாக இயக்கி சாதித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்

அந்தக்காலத்தில் எவராலும் எடுக்கமுடியாது போனபடம். இந்தக் காலத்தில் அக்கதையை வாசித்தவர்கள் 25 வீதமானோர் மட்டுமே பார்ப்பார்கள். மீதி இளைஞர்கள்; அக்காலத்து கதையை இக்காலத்து சுழலில் அமர்ந்து பார்பார்கள். அவர்களை அவர்களாகவே பார்க்கவிடுங்கள். உங்கள் வரையறைகளை அவர்கள் மீது ஒரு மாதத்திற்கு என்றாலும் வரையாதீர்கள். நீங்கள் இளசுகளாக இருந்த காலத்தில் வகுப்பறையில்; ஒருவன் தான் பார்த்த படத்தின் கதை சொன்னால், அந்த படத்தை அடுத்த வாரம் பார்க்க இருப்பவர்களில் பலர், அந்த அறையைவிட்டு ஓடியவர்களும் உண்டு, ஏன் ஓங்கி அறைந்தவர்களும் உண்டு. குறைந்தது ஒரு மாதம். ஒரு மாதம்!! அவர்களை அவர்களாகவே படத்தைப் பார்க்கவிடுங்கள். உங்கள் யன்னல்களை அவர்களுக்கா திறந்து விடாதீர்கள். அவர்களுக்கும் விலாசமான யன்னல் உண்டு.

கமல் குரல் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. அதற்கு காரணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என ஆரம்பிக்கும் கமல்ஹாசனின் கம்பீர குரல் தான். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 46 நிமிடம் எனக் கூறப்படுகிறது. முதல் பாகமே இவ்வளவு பெரிய படமா? என்கிற கேள்வியை இயக்குநர் மணிரத்னத்திடம் முன் வைக்க, விக்ரம் படம் எவ்வளவு நேரம் ஓடிச்சி என மணிரத்னம் கேட்க 2 மணி நேரம் 54 நிமிடம் என பதில் வர, தலைவரே நமக்கு முன்னாடி அதை சாதிச்சிருக்காரே என மணிரத்னம் பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நீளம் படத்தை பாதிக்குமா நீளம் படத்தை பாதிக்குமா 3 மணி நேரம் படத்தை எடுத்தாலும், ரசிகர்கள் கட்டுக்குள் ஒவ்வொரு காட்சி நகர்வும் அமைந்து விட்டால் பெரிய பாதிப்பாக இருக்காது. பல மணி நேர வெப்சீரிஸையே விறுவிறுப்பாக இருந்தால் தொடர்ந்து ஒவ்வொரு எபிசோடாக பார்த்து முடித்து விடுகின்றனர். ஆனால், அதே சமயம் விறுவிறுப்பாக இல்லாமல் போர் அடித்தால் படத்தின் நீளம் பெரிய பிரச்சனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

758 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *