வெள்ளைக் காகிதம் | Xavier
காத்திருக்கும்
என் மனம் துடிக்கும்
அவன் எங்கே
இன்னும் காணலையே
தடதடக்கும்
ரயில் பரபரக்கும்
என் உயிரும்
வந்து சேரலையே
ரயிலும் போகும்
இதயம் நோகும்
காதலன் நினைப்பில் கலங்குறேனே
இரு
இரும்பில் ஓடும்
ரயிலில் வாடும்
வருகை பார்த்து ஏங்குறேனே
*
அட
தாமதிப்பேனோ
கண்ணே
உன் முன்பே வருவேனே ?
அட
ரயிலும் போயிடும் முன்னே
நான் உன்னைச் சேர்வேனே
*
நான்
சின்னஞ் சிட்டு
நீ காதல் பட்டு
பின்
சொட்டுச் சொட்டாய் வரைந்தாய்
கன்னம் தொட்டு
நான்
தோளை தொட்டு
நீ வேலை விட்டு
பின்
கட்டிக் கிட்டுக் கிடந்தோம்
வானம் தொட்டு
*
ஆனந்தம் தருமா
சோகமே வருமா ?
மயிலும் அழு திடுமா ?
ஏக்கமும் மிகுமா
தாமதம் தகுமா
ரயிலும் போய் விடுமா ?
நான் குழலாய் கிடந்தேனே
எனை இசையாய் படித்தாயே
நான் கல்லாய்க் கிடந்தேனே
எனை சிலையாய் வடித்தாயே
*
நொடிகள் மணியென
நிமிடமும் தினமென
உனக்காய் காத்திருப்பேன்
பயமும் மெலிதென
விரல்களும் குளிரென
தவிப்பில் காத்திருப்பேன்
நான் தவமாய்க் கிடந்தேனே
எனை வரமாய் அடைந்தாயே
நான் தனியாய் நடந்தேனே
என் உயிராய் இணைந்தாயே
2,499 total views, 6 views today