அழையா விருந்தாளி
- Dr. T. கோபிசங்கர்-யாழப்பாணம் .
“எங்க, எத்தினை மணிக்கு தாலிகட்டு “ எண்டு கேக்க Whatsapp இல தானே invitation இருக்கு பாருமன் எண்டு மனிசி சொல்லிச்சுது. நான் பாவாடை சட்டை போடமாட்டன் எண்ட சின்னனுக்கும் மனிசிக்கும் நடந்த சண்டைக்கு நடுவில மாட்டுப் படாமல் ஒரு மாதிரி தப்பி வெளிக்கிட்டு கலியாண வீட்டுக்கு மண்டபத்திற்;கு போய் இறங்கி உள்ள போக வாசலில வைச்ச விளக்கு கூடுபத்தி எண்ணெய் இல்லாமல் புகைஞ்சு கொண்டிருந்திச்சுது.
பாவம் signal இல்லைப்போல ”hello hello“ எண்டு ஒரு வயதை போகப்பண்ண விடாமல் பிடிச்ச அம்மா கோலத்துக்கு குறுக்கால i phone ஓட போனா. பத்தாயிரத்துக்குப் போட்ட கோலம் photo காரனுக்கு மட்டும் எண்ட படியால் அவன் வந்தோன்னயே படத்தை எடுத்திட்டான் எண்டு ஆறுதல் பட்டிச்சினம் ஆரோ. குறுக்கால போன அம்மா phone கதைச்சு முடிச்சிட்டு வந்து வெளிக் கண்ணாடீல கொண்டையையும் saree ஐயும் adjust பண்ணீட்டு உள்ள திருப்பியும் (அலங்) கோலத்துக்குக் குறுக்கால போனா phone ஓட ஆனா இப்ப படம் எடுக்க.
மண்டபத்துக்குள்ள வந்து இடம் தேடிப் போய் கண்டு பிடிச்சு நாங்கள் இருக்க மாப்பிளையின்டை தாய் தேப்பன் மேடையில இருந்தபடி கண்ணால ஒரு hi எண்டிச்சினம். வந்து இருக்க முதல் யூனிபோர்ம் போட்ட படி வந்த சிலர் நாலு கலரில போத்தில் கொண்டு வந்து தந்திச்சினம் . என்னடா ஒருத்தரும் எங்களை கவனிக்கேல்லை எண்டு பாக்க, வந்த ஆக்களை எல்லாம் மறக்காம வீடியோக்காரன் ரெண்டு தரம் lightஐ பிடிச்சு படமும் எடுத்தான்.
ஆரெண்டு தெரியாட்டியும் கொஞ்சம் மேளத்தையாவது கேப்பம் எண்டு தெரியாத் தனமா நாதஸ்வரம் இருந்த மேடைக்குப் பக்கத்தில sound box க்கு பக்கம் போய் இருக்க “ ஓஓஓ சொல்றியா மாமா“ பாட்டு செவிப்பறையை உடைச்சு தொண்டையை அடைச்சுது. At least கலியாண மேடையையாவது பாப்பம் எண்டால் paparazzis மாதிரி முன்னால கமராக் காரர் பத்துக்கும் மேல நிக்க என்ன செய்யிற எண்டு போட்டு பேசாம வழமை போல் அனுபவத்தை எழுத போனை எடுத்தன்.
கோயிலுக்கு காசைக் குடுத்திட்டு live stream இல கும்பாபிசேகம் பாக்கிற மாதிரி, கலியாண வீட்டுக்கு ளிழளெழச பண்ணினவைக்கு live stream போகுதாம் உங்களுக்கும் link ஐ அனுப்பிறன் எட்டி எட்டிப் பாக்காமல் இருந்த படியே பாக்கலாம் எண்டு advice தந்தார் வீடியோக்காரத் தம்பி ஒருத்தர். அவரைக்கேட்டு எங்கள் மூண்டு பேரையும் சேத்து ஒரு படத்தை எடுத்து சொந்தங்கள் குறூப்பில போட்டன். போட்டிட்டன் எண்டதுக்காக onlineல வேலை செய்யிற சொந்தங்கள் எல்லாம் வழமை போல பாத்திட்டு nice, Huggies,cute எண்டு போட, எல்லாத்திக்கும் உச்சமா வீட்டை போய் நாவூறு சுத்திப் போடுங்கா எண்டு அறிவுரையும் வந்தது. கோயில்ல மேளகாரர் தீபத்தின்டை எயடரந க்கு ஏத்த மாதிரி சனத்தை சாமியைப் பாக்க வைக்க இறுக்கி அடிக்கிறது போல,இங்கையும் மேளகாரர் மைக்குக்குள்ள இறங்கி நிண்டு அடிக்க நிமிந்து பாத்தா தாலி கூறைத்தட்டு கை மாறிச்சுது.
தாலி கூறைத் தட்டைக் சனத்துக்கு காட்டிக்கொண்டு வர வெளிக்கிட்டவருக்கு பாவம், தலைப்பா கட்டி முடிக்கவே நேரம் போனதாலேம், மேக்கப் காரி புறுபுறுக்கத் தொடங்கினதாலையும், முன்வரிசைக்காரருக்கு மட்டும் தட்டைக் காட்டியும் காட்டாமலும் திருப்பிப்போய் குடுக்க,பொம்பிளை நிண்ட flower girls ஐயும் விட்டிட்டு கடகடவெண்டு மேடையால இறங்கிப் போனா. வெளிநாட்டால வந்துதுகள்,வெள்ளைக்காரிகள் எல்லாம் இஸ்டப்பட்டு வேட்டி சேலையோட வர, எனக்கு இது தான் வசதி எண்டு எங்க போனாலும் போடிற trouser மஞ்சள் சேட்டோட வந்த உள்ளூர்க்காரர் சிலர் இன்னும் தாலி கட்டேல்லயே நாங்கள் வேளைக்கே வந்திட்டம் எண்டு கவலைப்பட்ட படி ரெண்டாவது தரமும் சோடா வாங்கிக் குடிச்சினம். நாங்கள் பொம்பிளையைக் காணாமல் பொறுமை இழக்க மண்டபக்காரன் வந்து சாப்பிடலாம் எண்ட சொல்லமுதல் இருந்த சனம் தாலி கட்ட முதலே தே(ஓ)டிப் போய் சாப்பாட்டு queue இல நிக்க, நானும் போய்ச் சாப்பாட்டுக்கு நிண்ட queueவையும் சாப்பாட்டையும் பாத்திட்டு சாப்பிடாமலே திரும்பி வந்தன். தாலிகட்டி முடிஞ்ச உடனயே சின்னனா wish பண்ணிற queue ஒண்டு உருவாகி நிக்க நானும் அதில உள்வாங்கி நிண்டன். பால் பழம் குடுக்கிறதை சனம் பாக்காம சால்வையால மறைச்சுப்பிடிச்சதை கமராக்காரன் முழுசாக் கவர் பண்ணி எடுத்தான்.
ஐயர் பாவம் பொம்பிளை பழம் சாப்பிடிற வெக்கபடுறா எண்டு நெச்சு ஒரு பகிடி சொல்ல ஒருத்தரும் சிரிக்காம நிக்கிறதை பாத்திட்டு சங்கடப்பட்டுக் கொண்டு இருந்தார். சுத்திக்கட்டின பூந்தி லட்டடை ஸ்பெசல் மேக்கப் போட்ட பிள்ளைகள் extra special decorate பண்ணின கூடையில கொண்டு வந்து தர ரெண்டை எடுத்து சாப்பிடாமப் பொக்கற்றுக்க வைச்சதைப் பாத்தவனுக்கு, மூத்தவை ரெண்டு பேரும் வரேல்லை எண்டு விளக்கத்தை சொன்னன்.
மனிசியைப்பாத்து இன்னும் நேரம் இருக்குத்தானே போய் இருப்பமா எண்டு கேப்பம் எண்டு திரும்ப, மனிசி “இவ ஆரெண்டு தெரியுதோ “ எண்ட யாரையோ காட்டிக் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் ஆஆஆ எண்டு இழுக்க மனிசி இன்னார் எண்டு விபரம் சொல்லீட்டு அவவோட கதைச்சுக் கொண்டு busyஆ நிண்டிச்சுது. ஆலாத்தியும் ஆசீர்வாதமும் முடிஞ்சுது இனிச் சரி எண்டு நிக்க. Decent discipline ஆ நிண்ட ரெண்டு பேர் ஆருக்கோ கையைக் காட்டிக் கூப்பிட ஒரு வரிசையில நிண்ட queue இப்ப கிளைவிட்டு மூண்டாகிச்சுது. சரி பரவாயில்லை எண்டு நிக்க திடீரெண்டு ஒருத்தர் traffic police மாதிரி இடது பக்கத்து ஆக்களை நிப்பாட்டீட்டு வலது பக்கத்தால ஆக்களை விட,ஆக்கள் குறூப் குறூப்பா ஏறிச்சினம்.
இவை முந்தி வேலை செய்தவை, இவை இப்ப வேலை செய்யிறவை, அவைக்கு பஸ்ஸ{க்குப் போகோணும் எண்டு ஏறிப்போறவைக்கு ஒரு விளக்கமும் தந்து கொண்டிருந்திச்சினம் பொலிஸ் வேலை பாத்தாக்கள். குறூப் காரர் எல்லாம் கலியாணவீட்டுக்காரர் பிடிச்ச கமராக்காரரில நம்பிக்கை இல்லாமல் தங்கடை கையைடக்க கமராக்களையும் குடுத்து படமும் எடுத்துக் கொண்டு போச்சினம். Traffic police signal மாத்தி திருப்பி இந்தப் பக்கம் விட, மூண்டாப்பிரிஞ்ச எங்கடை queue திடீரெண்டு ஒண்டாக நான் இன்னும் கொஞ்சம் பின்னுக்கு வந்தன். இப்பிடி நிண்டா சரிவராது எண்ட யோசிக்க, திடீரெண்டு “நீங்கள் busyஆன ஆக்கள் அந்தப்பக்கத்தால வாங்கோ” எண்டு கூப்பிட்ட குரலுக்கு மாட்டன் எண்டாமல் நானும் குறுக்கால போய் முறையாக queueஇல நிண்டவன் திட்டிறதைக் கவனிக்காமல் வீடியோவுக்கு இளிச்சபடி முகத்தைக் காட்டினன்.
ஒரு மாதிரி வாழ்த்தீட்டு, படம் எடுத்திட்டு போகேக்க மாப்பிளையின்டை தாய் தேப்பன் நாங்கள் குடுத்ததிலும் பாக்க பாரமா ஒரு gift ஐத் தந்து bye சொல்லி கொடுக்கல் வாங்கலை அங்கயே முடிச்சு அனுப்பி வைக்க, ஒரு கறுத்தச் சட்டை போட்ட கமராக்காரன் அவையைக் கூப்பிட்டான். அப்பாமாருக்கு புத்தி சொல்லி கொண்டிருந்த அம்மாமார் ரெண்டு பேரும் கமராக்காரன் கூப்பிட முதல் ஓடிப்போய் அவன் சொன்னதுக்கு எல்லாம் தலை ஆட்டத் தொடங்கிச்சினம். வரேக்க தாங்களாகவே சந்தனப்பொட்டை போட்டிட்டு உள்ள வந்தவ சனங்கள் திருப்பியும் தாங்களாகவே பெட்டீக்க இருந்த giftஐயும் எடுத்துக்கொண்டு திரும்பிப் போச்சினம்.
பி.கு இப்ப எல்லாம் கலியாணத்துக்குப் போட்டு வீட்டை தான் வந்து சாப்பிடிறனான்.
452 total views, 6 views today